மாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்

March 22nd, 2015 | வகைகள்: வகைப்படுத்தாதவை | மறுமொழிகள் இல்லை » |

ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவின் குறுக்கே ஒரு பெரிய வேலி அமைக்கப்பட்டிருந்தது என்றும் அதுவே உலகிலேயே மிகப் பெரிய புதர்வேலி என்றும் அது திடீரென மறைந்துவிட்டது என்றும் யாராவது சொன்னால் நம்மால் நம்ப முடியுமா? ஜெயமோகன் எழுதிய ‘உலகின் மிகப் பெரிய வேலி’ எனும் கட்டுரையைப் படித்தபோது என்னால் நம்ப முடியவில்லை. அந்தக் கட்டுரை ராய் மாக்சம் எனும் ஆங்கிலேயர் எழுதிய ‘தி கிரேட் ஹெட்ஜ் ஆஃப் இண்டியா’எனும் புத்தகத்தை அறிமுகப்படுத்தியது. உப்புவேலி ராய் மாக்சம் ஒரு அசாதாரணமான […]

முழுதும் படிக்க...


உலகின் உப்பு

March 16th, 2015 | வகைகள்: கட்டுரை | மறுமொழிகள் இல்லை » |

‘உப்புவேலி’ புத்தகத்துக்கு எழுதிய முன்னுரை. =================================== உப்பு! எத்தனை சாதாரணமான ஒரு பொருள். கற்பூரத்தைப்போல, கற்கண்டைப்போல உப்பும் மங்கலப் பொருள்தான் என்றாலும் மிகச் சாதாரணமாக நாம் சமையலில் பயன்படுத்தக்கூடியது, அடுப்பங்கரையில் ஒரு மூலையில் கிடப்பது, மலிவானது, ஆகவே அதற்கென்று ஒரு தனிச் சிறப்பை தந்துவிட மனம் மறுக்கிறது. ஆனால் தங்கம், பட்டு, தேயிலை, மசாலா, வாசனை திரவியங்கள், என மனித வரலாற்றை மாற்றியமைத்த பொருட்களில் உப்பும் ஒன்று என்பதை நான் கேள்விபட்டதேயில்லை. உப்பு சத்தியாகிரகம் நம் மனதில் […]

முழுதும் படிக்க...


பேராலயம் – ஆங்கிலத்தில்: ரேமன்ட் கார்வெர் (Cathedral – by Raymond Carver)

December 30th, 2013 | வகைகள்: சிறுகதை, மொழிபெயர்ப்பு, இலக்கியம் | ஒரு மறுமொழி » |

இந்தக் குருடன் இருக்கானே, என் மனைவியுடைய நெடுங்கால நண்பன், இண்ணைக்கு ராத்திரி எங்களோட தங்க வந்துகிட்டிருக்கான். அவன் மனைவி இறந்துட்டா. இறந்து போன அவன் மனைவியுடைய சொந்தக்காரங்கள கனெக்டிகட்ல பார்க்க வந்திருக்கான். அங்கிருந்து என் மனைவிக்கு தொலைபேசினான். உடனடி ஏற்பாடுகள். ரயிலில் வருவான், அஞ்சு மணிநேரப் பயணம், என் மனைவி கூப்பிடுறதுக்கு ரயில் நிலயத்துக்குப் போவா. பத்து வருஷத்துக்கு முன்பு சியாட்டல்ல அவன்கிட்ட இவ வேலை பார்க்கும்போது கடைசியா பார்த்தது. ஆனா ரெண்டுபேரும் தொடர்பிலிருந்து வந்தாங்க. ஒலிநாடாக்களில […]

முழுதும் படிக்க...


கடலெனும் அனுபவம்

February 17th, 2013 | வகைகள்: சினிமா, திரை விமர்சனம், அனுபவம் | 4 மறுமொழிகள் » |

பல வருடங்களுக்கு முன்பு ‘ரீடர்ஸ் டைஜெஸ்ட்’ பத்திரிகையில் ஒரு கருத்துப்படம் வந்திருந்தது. இரு சிறுவர்கள் ஒரு ’மார்டன் ஆர்ட்’ படத்தின் முன்பு நின்றுகொண்டிருக்கிறார்கள். கீழே ’யாராவது நாமதான் இதை செஞ்சுட்டோம்ணு சொல்றதுக்கு முன்னால ஓடிரலாம் வா’ எனும் வரி. கடல் திரைப்படத்துக்கு வந்திருக்கும் பல விமர்சனங்களை படித்தபோது எனக்கு இதுவே நினைவுக்கு வந்தது. பல உன்னத கலை படைப்புகளும் குழந்தைகள் செய்தவற்றைப்போன்ற எளிமையுடனே இருக்கின்றன. ஒரு மாடர்ன் பெயிண்டிங்கைப்போலவே கடலும் நம் புரிதலைக் கோரி நிற்கும் ஒரு […]

முழுதும் படிக்க...


ராஜாங்கம்

July 14th, 2012 | வகைகள்: சிறுகதை | 2 மறுமொழிகள் » |

என் பழைய நினைவுகள் அழிக்கப்பட்டுவிட்டன என்றே தோன்றுகிறது. அவ்வப்போது துண்டு துண்டுகளாக, ஒரு சிறிய படத்தின் காட்சிகளாக அவை நினைவுக்கு வந்து போகின்றன. அவையெல்லாம் உண்மையா கற்பனையா என்று என்னால் வகுத்துக்கொள்ள முடிவதில்லை. அவைதான் கனவா இல்லை நான் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த நிஜம்தான் கனவா என பலமுறை தோன்றியதுண்டு. நான் தெருவில் அழுக்கடைந்து கிடக்கும் ஒரு பைத்தியமென்றும் இந்த வாழ்க்கையும் என் பழைய வாழ்க்கை குறித்த கனவுகளுமெல்லாமும் என் கற்பனையே என்றும் நினைப்பதுண்டு. நான் கல்லூரிக்கு வெளியில் […]

முழுதும் படிக்க...


ஆக்குபை அமெரிக்கா!

March 23rd, 2012 | வகைகள்: செய்தி விமர்சனம், அமெரிக்கா, உலகம் | ஒரு மறுமொழி » |

முதலில் அமெரிக்கப் பொருளாதார அரிச்சுவடிகளிலிருந்து ஒரு பாலபாடம். 2007 கணக்கெடுப்பின்படி அமெரிக்காவின் சொத்தில் 85% பங்கு 20% பணக்காரர்களிடமும் மீதி 15% மிச்சமுள்ள 80% மக்களிடமும் உள்ளது. அதாவது அமெரிக்க மக்கள் தொகையில் 1% பேர் அமெரிக்காவின் 34.6% சொத்துக்களுக்கு உரிமையாளர்கள். மீதி 99%பேரில் சிலர் தற்போது ‘வால்’ தெருவுக்கு வந்துவிட்டிருக்கிறார்கள். அமெரிக்கப் பொருளாதாரத்தின் முக்கியமானக் குறியீடுகளில் ஒன்று நியூயார்க் நகரத்தில் அமைந்துள்ள வால் ஸ்ட்ரீட். இங்குதான் உலகப்புகழ் பெற்ற நியுயார்க் பங்கு வர்த்தக மையம் உள்ளது. […]

முழுதும் படிக்க...


சில கிறுக்கல்களும் கிறுக்குத்தனங்களும்.

December 10th, 2011 | வகைகள்: சமூகம், ஆளுமை, இணையம், அலசல் | 2 மறுமொழிகள் » |

“சூப்பர் ஸ்டாருக்காக சர்வசமய கூட்டு பிரார்த்தனை @ மகாவதார் பாபாஜி கோயில், பரங்கிப்பேட்டை. 12 ஜீன், ஞாயிறு காலை பத்து மணி. அனைவரும் வருக!” என்று அறிவிக்கிறது ஒரு கூகிள் பஸ் செய்தி. அதன் கீழே ”தலைவாவாவாவாவா……” என்றொரு கூக்குரல் எழுதிவைக்கப்பட்டிருக்கிறது. எந்த மனநிலையில் இந்த செய்தியும் எதிர்வினையும் பதிவாகியுள்ளன? விழியோரக் கண்ணீருடனா? கனத்தமனத்துடனா? அலுவல் பரபரப்புகளின் மத்தியில் கவனமின்றியா? நண்பருடன் தொலைபேசிக்கொண்டா? எதையுமே நம்மால் யூகிக்க முடிவதில்லை. இணையத்துக்கு இரத்தமுமில்லை சதையுமில்லை. உலகம் முழுவதும் அது […]

முழுதும் படிக்க...


ஓராயிரம் கண்கள் கொண்டு

November 11th, 2011 | வகைகள்: வகைப்படுத்தாதவை, இலக்கியம், கட்டுரை | 6 மறுமொழிகள் » |

ஆழி சூழ் உலகு படித்து பல மாதங்கள் ஆகிவிட்டன. என்னைப் போல வலைப்பதிவு வைத்திருப்பவர்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. எதைச் செய்தாலும் அது குறித்து என்ன எழுதுவது என்று பின்மண்டையில் ஒரு எண்ண ஓட்டம் ஓடிக்கொண்டே இருக்கும். அது அந்த செயல் தரும் அனுபவத்தை வேறுவிதமாக மாற்றிவிடும். ஆழி சூழ் உலகு படிக்கத் துவங்குகையில் எனக்கு அப்படி ஒரு எண்ண ஓட்டம் இருந்தது. கரையைக் கடந்து உள்ளே செல்லச் செல்ல ஆழி முழுவதுமாக உள்ளிழுத்துக் கொண்டது. நாவலைப் […]

முழுதும் படிக்க...


ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை

November 11th, 2011 | வகைகள்: சமூகம், செய்தி விமர்சனம், தொழில் நுட்பம், ஜப்பான், இந்தியா, இயற்கை, கட்டுரை, அறிவியல், அலசல் | 4 மறுமொழிகள் » |

மீண்டுமொருமுறை கூடங்குளம் கொதிநிலையை அடைந்துள்ளது. இந்தமுறை இன்னும் அதிக வேகம், இன்னும் அதிக வெப்பம். இது இறுதிகட்டவாய்ப்பு என்பதை மக்கள் உணரந்துள்ளனர். கேள்விப்பட்டவரை அனைத்து தென் தமிழக மாவட்டங்களிலிருந்தும் பல தரப்பு மக்களும் ஒன்றாய் நின்று தங்கள் எதிர் குரலை எழுப்பிக்கொண்டிருக்கின்றனர். வயிறு வற்றிப்போய் மனம் பசித்துக் கொண்டிருக்க 140 பேர் பத்தாம் நாளாகஉண்ணாவிரதத்தில் இருக்கின்றனர், சிலர் நீர் கூட அருந்தாமல். ஊடகங்களோ பட்டும் படாமல் இதை வெறும் ஒரு பத்தி செய்திக்குறிப்பாக்கிக்கொண்டிருக்கின்றன. பலரும் ஏதோ திடீரென […]

முழுதும் படிக்க...


ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை

September 20th, 2011 | வகைகள்: சமூகம், தொழில் நுட்பம், ஜப்பான், இந்தியா, இயற்கை, கட்டுரை, உலகம் | மறுமொழிகள் இல்லை » |

கூடங்குளம் அணுமின்நிலையப் போராட்டம் குறித்த என் கட்டுரையை கீழ்கண்ட சுட்டிகளில் படிக்கலாம். ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை – 1 ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை – 2

முழுதும் படிக்க...