டி மெலோ கதைகள் – 2

September 3rd, 2010 | வகைகள்: ஆன்மீகம், ஆளுமை, கடவுள், கதை, கிறீத்துவம், மதம் | மறுமொழிகள் இல்லை » |

 டி மெலோ கதைகள் – 1 வாத்து சூப் முல்லா நசுருதீனின் உறவினர் ஒருவர் அவரைக் காண வந்தார். வந்தவர் ஒரு வாத்தை பரிசாகத் தந்தார். வாத்து சமைக்கப்பட்டது. அருமையான விருந்தானது.  விரைவில் பல விருந்தினர்கள் முல்லாவின் வீட்டுக்கு வர ஆரம்பித்தனர். எல்லோரும் தன்னை வாத்து கொண்டுவந்தவரின் உறவினர் என்றனர். எல்லோருக்கும் அந்த வாத்தின் பொருட்டு விருந்தளிக்கப்படவேண்டும் என எதிர்பார்த்தனர்.முல்லாவும் இயன்றவரை பொறுமையாய் எல்லோருக்கும் விருந்தளித்தாராம்.  ஒரு நாள் ஒருவன் வந்து “நான் உனக்கு வாத்து தந்தவனின் [...]

முழுதும் படிக்க...


டி மெலோ கதைகள் – 1

September 2nd, 2010 | வகைகள்: ஆன்மீகம், ஆளுமை, கதை, கிறீத்துவம், நிகழ்வு | மறுமொழிகள் இல்லை » |

ஊட்டி சந்திப்பில் பகிர்ந்து கொண்ட சில கதைகள். பயணி  ஒரு பயணி தன் மக்களிடம் திரும்பி வந்தான். அவர்கள் அமேசான் நதியின் வனப்பினை அறிந்துகொள்வதில் ஆர்வமாயிருந்தார்கள். தன் மனதை நிறைத்த வனப் பூக்களையும், வனத்தின் இரவொலிகளையும், காட்டு விலங்கினைக் கண்டபோது கொண்ட பயத்தையும், புரண்டோடும் காட்டாற்றில் நீந்தியதையும் அவனால் ஒரு போதும் முழுமையாக வார்த்தைகளால் வெளிப்படுத்த இயலாதே?  அவன் சொன்னான்”நீங்களே போய் பாருங்கள்” என்று. அவர்களுக்கு  வழிகாட்ட ஒரு வரைபடத்தை வரைந்து அவர்களுக்குத் தந்தான்.  எல்லோரும் அந்த [...]

முழுதும் படிக்க...


‘கடலைக் காணாதவனின் அலை குறித்த குறிப்புக்கள்’ – ஊட்டி சந்திப்பு

August 31st, 2010 | வகைகள்: அனுபவம், இலக்கியம் | 8 மறுமொழிகள் » |

மாபெரும் கடலொன்றிருந்தது. சிலருக்கு அந்தக் கடலில் நீந்தத் தெரிந்திருந்தது. சிலருக்கு அதில் மீன் பிடிக்கத் தெரிந்திருந்தது. சிலர் வலை கொண்டு, சிலர் தூண்டிலிட்டு. இன்னும் சிலர் அந்தக் கடலின் கரையில் நின்று இளைப்பாறிக்கொள்வர், சிலர் விளையாடி மகிழ்வர். ஆழமான, பரந்து விரிந்த, ஆபத்துக்களையும், கடின சவால்களையும், உயிரையே மாய்க்கும் சுழிகளையும் உள்ளோடைகளையும் பாறைகளையும் கொண்ட அந்த கடலில் குளித்து முத்தெடுத்து வந்தவர்கள் வெகுசிலரே. இன்னும் சிலர் அந்தக் கடலைக் குறித்து கேள்வி மட்டும் பட்டுள்ளனர். பலருக்கும் அந்தக் [...]

முழுதும் படிக்க...


கனவுக் களவாணி ~ Inception

July 27th, 2010 | வகைகள்: சினிமா, திரை விமர்சனம் | 10 மறுமொழிகள் » |

உலக கார்ப்பரேஷன்கள் பச்சைக் காசுக்காக எதையும் செய்யத் துணிந்துவிட்ட காலம் இது. உலகின் பலம்வாய்ந்த அரசாங்கங்கள் இன்று கார்பரேஷன்களின் கைப்பொம்மைகள். நமூரில் சாதி ஓட்டுக்காக செய்யப்படும் அரசியல் சமரசங்கள் பெரிய நாடுகளில் கார்பரேட் ஆதரவுக்காக செய்யப்படுகின்றன. இந்த சர்வாதிகார வியாபாரிகளின் அதிமுக்கிய மூலப்பொருள் ‘தகவல்’. இன்று பல வழிகளில் நம்மைப்பற்றிய தகவல்களை கார்ப்பரேஷன்கள் பெற்றுக்கொண்டேயிருக்கின்றன. கருத்துக்கணிப்புக்களில் சாதாரணமாகத் தோன்றும் கேள்விகளுக்கு நாம் பதிலளிக்கிறோம். ஆனால் அதிலிருந்து பலவிதமான தகவல்களை அவர்கள் பிரித்தெடுக்கிறார்கள். அவற்றின் அடிப்படையில் வியாபார முடிவுகளை [...]

முழுதும் படிக்க...


பத்துத்தலைவலி!

July 19th, 2010 | வகைகள்: அனுபவம், திரை விமர்சனம் | 21 மறுமொழிகள் » |

இந்த வார இறுதியில் ராவணன் படம் பார்க்கப் போயிருந்தோம். படம் முடிந்ததும் ‘வள வளண்ணு சொல்லாம ஒரே வார்த்தையில் சொல்லுங்க, படம் எப்படி?’ என்றார் நண்பர். ‘பத்துத்தலைவலி!’ என்றேன் விளையாட்டாக. இரு வாரங்களுக்கு முன்பு இயக்குனர் மணிரத்தினம் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டரை மணி நேரம் ஐந்து எழுத்துலக நண்பர்களுடன் இலக்கில்லா உரையாடல்கள். உரையாடலின்போது அங்கிருந்த நம் நண்பர் உத்தம எழுத்தாளர் (ஒருவர் உத்தமராக இருப்பது மோசமானதா என்ன? அப்படியே அழைப்போமாக.) “ஒருவர் ஒரு கருத்தை [...]

முழுதும் படிக்க...


சென்னை

July 8th, 2010 | வகைகள்: அனுபவம், அலசல், தகவல் | 21 மறுமொழிகள் » |

செம ட்ராஃபிக். முகப்பேரில் இருந்து பள்ளிக்கரணை அலுவலகம் 22கி.மீ வந்து சேர ஒன்றரை மணி நேரம் ஆகிறது. வாகனங்கள் எல்லாவற்றிலும் குறைந்தபட்சம் ஒரு கீறலாவது உள்ளது. புத்தம் புதிய கார்களும் விலக்கில்லை. அவுட்டர் ரிங் ரோட்டில் முகப்பேரில் இருந்து தாம்பரத்துக்கு 20 நிமிடங்களில் வர முடிகிறது. ஆனால் மாலையில் கனரக யமன்கள் சுத்திக் கொண்டிருகின்றனர். மக்கள் higwayகளிலும் ராங் சைடில் வண்டி ஓட்டி வருகின்றனர். பளிச்சென்று ‘தலைப்பு விளக்கம்’ (head லைட்டை இப்படித்தன் அரசின் தகவல் பலகை [...]

முழுதும் படிக்க...


குளிர்காலக் கவிதைகள்

January 8th, 2010 | வகைகள்: வகைப்படுத்தாதவை | 9 மறுமொழிகள் » |

அலுவலத்துக்கு வெளியே எடுத்த படம். அலுவலத்துக்கு வரும் வளியில் தோன்றிய கவிதைகள். காலநிலை நொடிக்கு மூன்று கார்கள் செல்லும் இந்தச் சாலையோரத்தில் இரண்டடி பனிக்குவியலில் கால்தடங்கள். நடுங்கியபடியே அங்கே நடந்து சென்றவர் யார்? வேலி தாண்டி ஓடி வந்த மெக்சிக்கரா? வீடற்ற கறுப்பரா? வாய்ப்புகளை மறுத்து விட்ட வெள்ளைக்காரரா? அந்த வெள்ளைத் தாளில் தெரிவது ஏழ்மையின் காலெழுத்துதானா? இல்லை இன்னும் ஓட்டுநர் உரிமம் வாங்காத இந்திய மென்பொருளாளரின் இயலாமையா? சற்று நேரத்தில் அதுவும் அழிந்து போகும் என்கிறது [...]

முழுதும் படிக்க...


கனி’வான’மொழி!

December 24th, 2009 | வகைகள்: ஆன்மீகம், இசை, இயேசு, கவிதை, பாடல் | 6 மறுமொழிகள் » |

ஜெகத் கஸ்பாரின் முனைப்பில் உலகப்புகழ்பெற்ற சில கிறிஸ்துமஸ் பாடல்களுக்கு தமிழில் வரி எழுதி ’மார்கழியின் மடியில்’ எனும் பாடல் தொகுப்பொன்று வெளியாகியுள்ளது. அதில் Silent Nightன் மெட்டுக்கு கனிமொழி எழுதியுள்ள பாடல் வரிகள் கீழே. மார்கழியின் மடியிலே மாடடையும் குடிலிலே மானுடத்தின் மீட்பனாய் அன்னை மரியின் அணைப்பினிலே இதழில் புன்னகை பூத்திருக்க நிலவின் கதிர்போல கண்வளராய் அழகே. மார்கழியின் மடியிலே வானின் வெள்ளி அழைக்குதந்த அழைத்து வந்த ஞானியர் உன்னை வணங்கி நின்றார் காலமே உறைந்ததை மறந்து [...]

முழுதும் படிக்க...


’முதல் படிகள்’ – இசை வெளியீடு

November 9th, 2009 | வகைகள்: இசை, பாடல் | 8 மறுமொழிகள் » |

குளிர்காலம் வந்துவிட்டாலே ’போர்’ அடிக்க ஆரம்பித்துவிடுகிறது. பொழுதை போக்க ஏதேனும் புதிதாய் வாங்கி சோதித்துக்கொண்டேயிருப்பது வழக்கமாகிவிட்டது. இருக்கவே இருக்கிறது ’டீல்’ வலைமனைகள். இந்த வருடம் இதுவரை வாங்கியதில் முக்கியமானவை ஒரு துவக்க நிலை தொலைநோக்கி, மற்றும் M-Audio இசை தொகுக்கும் மென்பொருள்.  அதைக் கொண்டு உருவாக்கிய ஒரு இசைத்துண்டு. First Steps என ஒரு சில்லி பெயரை வைத்துள்ளேன். கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. First steps.wma First Steps by Cyril alex தமிழ்மணம் கருவிப்பட்டை பதிவுக்கு கீழே [...]

முழுதும் படிக்க...


ஸ்ருதி ஹாசனின் பாசமிகு அங்கிள்களுக்கு…

September 30th, 2009 | வகைகள்: ஆளுமை, சினிமா | 23 மறுமொழிகள் » |

டிஸ்கி எண் 1: அமெரிக்காவிலும் சில த்ராபை சினிமா தியேட்டர்கள் உள்ளன. அவற்றில் தான் அநேகம் தமிழ் படங்கள் வெளியாகின்றன. டிஸ்கி எண் 2: நான் கமல் படங்களை விரும்பி பார்ப்பேன். கமல் படங்கள் மற்ற தமிழ் படங்களை விட பொதுவாக மேலானவை என நம்புபவன். டிஸ்கி எண் 3: உன்னைப்போல் ஒருவன் பார்க்கும்போது கொஞ்சம் சளியும் இருமலும் காய்ச்சலும் இருந்தது. எவ்வளவோ முயன்றும் உன்னைப்போல் ஒருவன் படத்துடன் ஒன்ற முடியவில்லை. படத்தின் முதல் சறுக்கலே அங்கேதான் [...]

முழுதும் படிக்க...