அறிபுனை போட்டி முடிவுகள்

October 20th, 2008 வகைகள்: பொது, போட்டி, அறிவுப்பு | 21 மறுமொழிகள் » |

முதலில். தாமதத்திற்கு (மிக X மிக X மிக) வருந்துகிறேன். எழுத்தாளர் ஜெயமோகனின் மடல் கீழே. பரிசு அனுப்ப வேண்டிய முகவரியை மின்னஞ்சல் செய்யவும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்கள். அன்புள்ள சிறில் நான் மூன்று அளவுகோல்களைக் கைக்கொண்டேன். ஒன்று , கதைகளை வாசித்தபின் கொஞ்சநாள் கழித்து அது நினைவில் நிற்கிறதா என்பது. இரண்டு, கதைகளின் கரு வழக்கமான அறிவியல்கதைக்கருகக்ளான உலக அழிவு, அறிவியல்கண்டுபிடிப்பு தவறாகப்போவது போன்றவற்றில் இருந்து சற்றேனும் வேறுபடுகிறதா என்பது. மூன்று, என்னால நம்பவே முடியலை போன்ற […]


என் சமையலறையில்…

March 8th, 2007 வகைகள்: பொது | 2 மறுமொழிகள் » |

ஒரு மாசம் ஒண்டிக்கட்டையா கழிக்கிறதே இத்தன கஷ்டமாயிருக்குதே… என் சாப்பாடு சுவையா இருக்கணுங்கிறதுல நான் கவனாமாயிருப்பேன். பசி இல்லைன்னா இப்படித்தான், சுவையாயிருந்தாத்தான் சாப்பிடத் தோணும். ஹ்ம். கூடவே கொஞ்சம் ‘கொழுப்பும்’ சேர்ந்துட்டா? மனைவியோடு சண்டை, அது இல்லியா இது இல்லியான்னு டிமாண்ட். இப்ப ஒருமாதமா கண்டதையும், கார்ப்பெட்ல விழுந்ததையும் எடுத்து சாப்பிட்டதுல கொஞ்சம் ஞானோதையம் பிறந்திருக்கு. இனிமே டிமாண்ட்கள் விண்ணப்பமாகவும், ‘பரவாயில்லை’ என்பது பாராட்டுக்களாகவும் மாறும் என வாக்களிக்கிறேன். முந்தா நேத்து பரோட்டாவ கரிச்சிட்டேன், பால் எக்ஸ்பையர் […]


ஆத்தா நான் பீட்டாவுக்கு மாறிட்டேன்…

January 27th, 2007 வகைகள்: தொழில் நுட்பம், பதிவர்வட்டம், பொது, இணையம், அறிவிப்பு, உதவி | 4 மறுமொழிகள் » |

வயல் வரப்புல அரைக்கால் சட்டை போட்ட ஹீரோ கையில் ஒரே ஒரு சிலேட் மட்டும் உள்ளடக்கிய மஞ்சள் பையை உயர்த்தி சுத்தியபடியே ஓடி வருகிறார்..போங்கையா பீட்டாவுக்கு மாறிட்டதச் சொல்ல ஏன் இந்த பில்ட் அப்.சிலர் அதிக பதிவுகள் இருந்தால் மாறுவது கடினம் என்றிருந்தார்கள். என் பதிவுகளில் தேனில் மட்டும் 197 பதிவுகள் இருந்தன (ஆமமங்க விரைவில் டபுள் செஞ்சுரி) இன்னும் பல பதிவுகளையும் சேர்த்தால் எண்ணிக்கை 300 நெருங்கும். ஆனாலும் என்னால் எளிதில், 10 நிமிடங்களுக்குள்ளாகவே மாற […]


நடையிழந்த கால்கள்தன்னில்…

January 18th, 2007 வகைகள்: சமூகம், சினிமா, டி.வி, தன்னம்பிக்கை, பொது | 7 மறுமொழிகள் » |

‘நடையிழந்த கால்கள்தன்னில் நளினத்தை பார்க்கிறேன்’. டி. ராஜேந்தரின் இந்த வரிகளை நியாபகப் படுத்தியது (நடன)இயக்குநர் லாறன்ஸ் இராகவேந்திரா தந்த பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி. ஊனமுற்றவர்கள் ஆடிய நடன நிகழ்ச்சி. ஊனம் உடலிலேதான் மனதிலல்ல என ஒவ்வொரு அசைவிலும் காண்பித்தனர். ‘காலுக்கு செருப்பில்லை எனக் கவலைப்பட்டேன் காலில்லாதவனைக் காணும்வரை’ என்பதுபோல, இத்தனை குறைகளுக்கு மத்தியுலும் வென்றுகாட்டும் இவர்கள்தான் இன்றைய தலைமுறைக்கு ஊக்கமருந்து.ஊனம் தெரியும்படியாய் உடையணிந்திருந்ததை என் மனைவி சுட்டிக் காட்டினார். ஒருவகையில் அதுதான் அவர்கள் தரும் செய்தி. கீழ்நிலைகளிலிருந்து […]


இயேசு சொன்ன கதைகள் – 2

January 16th, 2007 வகைகள்: தமிழோவியம், பொது, ஆன்மீகம், இயேசு, கட்டுரை, கதை | 2 மறுமொழிகள் » |

முகம் தெரியாத அன்னியருக்கு உதவுவது தெய்வீகமான அனுபவம். சகமனிதனுக்கு உதவுவது நம் கடமையே என்கிற போதும், இயல்பாகவே பலனை எதிர்பாராமல் நாம் எதையும் செய்ய விளைவதில்லை. நான் சென்னை லயோலாவில் படித்துக்கொண்டிருக்கும்போது, ஆண்டுவிழாவில், ஒரு மாணவர் சிறப்பு பாராட்டை பெற்றார். அவர் செய்ததென்ன? இவர் சர்ச் பார்க் பள்ளியின் முன் பஸ்ஸுக்கு நின்றுகொண்டிருக்கும்போது அங்கே உடலெங்கும் சீழ்வடியும் புண்களோடு ஒருவர் அனாதையாகக் கிடந்தார். அவரைப் பார்த்து எல்லோரும் முகம் சுளித்துக்கொண்டு, எங்கே அவன் உடலில்லிருந்து சீழும், கிருமியும், […]


இயேசு சொன்ன கதைகள் – 1

January 12th, 2007 வகைகள்: தமிழோவியம், பொது, ஆன்மீகம், இயேசு, கட்டுரை, கதை | 7 மறுமொழிகள் » |

கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்இயேசு என்னும் வரலாற்று நாயகனை பல கோணங்களில் தரிசிக்கலாம். குருவாய், தியாகியாய், புரட்சிக்காரனாய், சீரமைப்பாளராய், மக்கள் நாயகனாய், கடவுளாய், அதிசயங்கள் புரிந்த ஒரு சாதரண மனிதனாய் இன்னும் பலவாய் காட்சிதருகிறார் இயேசு. தெய்வீகக் கூறுகளை விலக்கிவிட்டு இயேசுவைப் பார்ப்பவர்கள் குறைவே. ஒரு போதகராக அவர் விட்டுச்சென்ற கருத்துக்கள் மத போதனைகளாக்கப்பட்டுவிட்ட நிலையில், அவரின் வாழ்வியல் கருத்துக்கள் பலரையும் சென்றடையவில்லை என்பது சற்றே சோகமான உண்மை. இந்தப் போதனைகள் எல்லோருக்கும் போய் சேர்ந்திருந்தால் இன்னும் சில […]


கில்லி 365

January 9th, 2007 வகைகள்: பதிவர்வட்டம், பொது, வலைப்பதிவுகள், இணையம், கட்டுரை | 2 மறுமொழிகள் » |

கில்லி துவங்கி வருடம் ஒன்றாகிறதாம். (ஒன்றுதான?) கில்லி அருமையான முயற்சி. புதுமையானதும்கூட. கில்லியின் பரிந்துரைகள் பல சுவாரஸ்யமானவை. இப்பெல்லாம் சீரியசா ஒரு பதிவப் போட்டா கில்லி பரிந்துரைக்குமான்னு யோசிப்பேன். பின்னூட்டங்களை விடவும் கில்லி பரிந்துரையோ பூங்காவில் தேர்ந்தெடுப்போ பெரிய பரிசாய் எண்ணப்படும் என்றே நினைக்கிறேன். பரிந்துரைகளின் எண்ணிக்கைகள் வரவர குறைந்து போகிறதோ என எண்ணத் தோன்றுகிறது. இதை சரி செய்தால் மேலும் எங்காளால் பலன் பெறமுடியும். இன்னுமொரு குழு வலைப்பதிவுக்கு நேரடி சம்பந்தமில்லாததாயினும் தனது 5 வருட […]


3000

January 5th, 2007 வகைகள்: சமூகம், செய்தி விமர்சனம், பொது, புஷ், கேலிசித்திரம், அமெரிக்கா, உலகம் | ஒரு மறுமொழி » |

ஈராக் போரில் கொல்லப்பட்ட அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை 3000த்தை எட்டியது என்னவிலை அழிவே? 3000? ‘மாஸ்டர்’ ப்ளான்? அ’பாரம்’ தோட்டக்காரன். நன்றி : http://www.cagle.com/ உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


வெயில் – நிழலல்ல நிஜம்

January 3rd, 2007 வகைகள்: சமூகம், சினிமா, தன்னம்பிக்கை, திரை விமர்சனம், பொது | 18 மறுமொழிகள் » |

சன் டி.வி டாப் 10 ஸ்டைல்ல, ‘வேண்டிய அளவுக்கு ‘வெயில்’ படம் பற்றி பதிவர்கள் அலசிவிட்டதால’ எனக்குத் தோன்றிய சில எண்ணங்களை பகிர்ந்துக்கலாம்னு இந்தப் பதிவு.வெயில், சில கசப்பான நிஜங்களை வெளிச்சம் போட்டு காண்பித்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு ஆவணப் படம்போலவே, நிஜத்துக்கு வெகு அருகாமையில் எடுக்கப்பட்டிருக்கும் விதம் அருமை. தமிழ் திரைப்படங்கள் அசட்டுத்தனங்களை களைந்துவிட்டு உருப்படும் எனும் நம்பிக்கையை தரும் மற்றொரு படம் இது.வெயில், படத்தில் முக்கிய கதாபாத்திரமாய் வருகிறது. ஒரேமுறை தோன்றினாலும் கதையின் அடித்தளமே நாயகன் […]


(EX) நட்சத்திரம்

January 2nd, 2007 வகைகள்: பதிவர்வட்டம், பொது, வலைப்பதிவுகள், அறிவிப்பு | 10 மறுமொழிகள் » |

நட்சத்திர வாரம் இனிதே நிறைவுற்றது. வாய்ப்பளித்த தமிழ்மணம் குழுவிற்கு நன்றி. வாசித்து ஆதரவளித்த நண்பர்களுக்கு நன்றி. நண்பர்களின் பேராதரவுடன் சென்ற வாரம் எனக்கு மிக முக்கியமான வாரமாய் அமைந்தது. இன்னும் நிறைய எழுத நினைத்திருந்தபோதும் விழாக்காலத்தில் எழுத நேரமின்மையின் காரணமாய் இயலாமல் போனது. (தப்பிச்சிட்டீங்க!) போன வாரம் போட்ட பல பதிவுகள் 5 நட்சத்திரப் பதிவுகளாய் வாக்களிக்கப்பட்டிருந்தன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்து வந்த பொடிச்சிக்கு வாழ்த்துக்கள். நட்சத்திரப் பதிவுகளை மீண்டும் வாசிக்க… e-த்திச் சூடிSad’AM’ News2007 […]