ஐரோப்பியர்கள் இந்தியாவைத் திருடியதன் வரலாறு!

February 21st, 2017 வகைகள்: இந்தியா, கட்டுரை | மருமொழிகள் இல்லை » |

வாஸ்கோட காமா 1498ல் இந்தியாவுக்கும் பொர்துகீசியத்துக்குமான கடல்வழியை கண்டடைந்தது முதல் 1757ல் இராபர்ட் கிளைவ் தலைமையில் ஆங்கிலேயர்கள் வங்காளத்தை கைப்பற்றியதுவரையிலான வரலாற்றைக் கூறும் ‘The Theft of India’ எனும் புத்தகத்தை ராய் மாக்சம் எழுதியுள்ளார். இந்தியாவை இரண்டாகப் பிளக்கும்படி ஆங்கிலேயர் உருவாக்கிய உயிர்வேலியை கண்டுபிடித்து ‘The Great Hedge of India’ (தமிழில் ‘உப்பு வேலி’ – 2015)எனும் புத்தகமாக வெளியிட்டவர் ராய் மாக்ஸம். அவரை முன்னர் சொல்வனம் பேட்டி கண்டிருந்ததை வாசகர்கள் நினைவு கூறலாம். […]


ஒரு வேலியும் இரு பாதைகளும்

February 21st, 2017 வகைகள்: ஆளுமை, இந்தியா, கட்டுரை | மருமொழிகள் இல்லை » |

புதையல்களைத் தேடிச் செல்லும் சாகசக் கதைகளை நாம் படித்திருப்போம். தெளிவற்ற சிறிய தகவல் ஒன்றை பின்பற்றித் துவங்கும் ஒரு சாதாரணத் தேடல் பல விரும்பத்தகுந்த, தகாத பிரதேசங்கள் வழியே பயணித்து, நண்பர்களையும் பகைவர்களையும் எதிர்கொண்டு, சதி முடிச்சுகளை அவிழ்த்து, கைக்கெட்டியவற்றை தவறவிட்டு மீண்டும் கைகொண்டு உயிர்மாய்க்கும் சவால்களைக் கடந்து கதா நாயகர்கள் புதையலைக் கண்டடையும்போது நம் மனதில் ஒரு நிம்மதிப் பெருமூச்சு எழும். ராய் மாக்சம் எனும் ஆங்கிலேயர் எழுதிய ‘The great hedge of India’ […]


ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை

November 11th, 2011 வகைகள்: சமூகம், செய்தி விமர்சனம், தொழில் நுட்பம், ஜப்பான், இந்தியா, இயற்கை, கட்டுரை, அறிவியல், அலசல் | 4 மறுமொழிகள் » |

மீண்டுமொருமுறை கூடங்குளம் கொதிநிலையை அடைந்துள்ளது. இந்தமுறை இன்னும் அதிக வேகம், இன்னும் அதிக வெப்பம். இது இறுதிகட்டவாய்ப்பு என்பதை மக்கள் உணரந்துள்ளனர். கேள்விப்பட்டவரை அனைத்து தென் தமிழக மாவட்டங்களிலிருந்தும் பல தரப்பு மக்களும் ஒன்றாய் நின்று தங்கள் எதிர் குரலை எழுப்பிக்கொண்டிருக்கின்றனர். வயிறு வற்றிப்போய் மனம் பசித்துக் கொண்டிருக்க 140 பேர் பத்தாம் நாளாகஉண்ணாவிரதத்தில் இருக்கின்றனர், சிலர் நீர் கூட அருந்தாமல். ஊடகங்களோ பட்டும் படாமல் இதை வெறும் ஒரு பத்தி செய்திக்குறிப்பாக்கிக்கொண்டிருக்கின்றன. பலரும் ஏதோ திடீரென […]


ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை

September 20th, 2011 வகைகள்: சமூகம், தொழில் நுட்பம், ஜப்பான், இந்தியா, இயற்கை, கட்டுரை, உலகம் | மருமொழிகள் இல்லை » |

கூடங்குளம் அணுமின்நிலையப் போராட்டம் குறித்த என் கட்டுரையை கீழ்கண்ட சுட்டிகளில் படிக்கலாம். ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை – 1 ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை – 2


அமைதியான நதியினிலே…!

November 4th, 2010 வகைகள்: பயணம், இந்தியா, இயற்கை | 15 மறுமொழிகள் » |

‘பரபரப்பான இந்த வாழ்க்கையில…’ என்று துவங்குகிறது ஒரு பண்பலை வானொலி விளம்பரம். நம் வாழ்க்கை மிகவும் பரபரப்பாகிவிட்டது. காலை எட்டு மணிக்கு சென்னையின் சாலைகள் பிதுங்கி வழிகின்றன. மாலை ஆறு மணி துவங்கி இரவு எட்டரை வரைக்கும் உக்கிரமான டிராஃபிக். நாள் ஒன்றின் அதிக செயலூக்கமுள்ள  பகுதியை மாதச் சம்பளத்துக்கு விற்றுவிட்டு வெறும் சக்கையான உடம்புடனும் மனதுடனும் வீடு வந்து சேர்கிறோம். வீடுகளுக்குள்ளேயே அடைபட்டு கிடக்கிறோம். சென்னையில் எந்த வீட்டிலுமே வெளியே அமர்ந்திருக்க இடம் ஒதுக்கப்படவில்லை! வார […]


இடி அல்லது இடிப்போம்…: ஆதவன் தீட்சண்யா

April 21st, 2008 வகைகள்: சமூகம், இந்தியா | ஒரு மறுமொழி » |

இன்று கீற்று மின்னிதழிலிருந்து மின்னஞ்சலில் வந்த மடல் இடி அல்லது இடிப்போம்…: ஆதவன் தீட்சண்யா நாய் பன்னி ஆடு மாடு எருமை கழுதை கோழி கொக்கையெல்லாம் தீண்டுகிறவர்கள் எங்களை ஏன் தீண்டுவதில்லை என்று என்னிடம் புகாரேதும் இல்லை இனம் இனத்தோடு மட்டுமே சேர்வது இயல்பானதாகையால். நேரடியாக விசயத்திற்கு வருவோம். மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள உத்தப்புரம் கிராமத்தை அறுநூறு மீட்டர் நீளமும் இரண்டாள் உயரமும் கொண்ட குறுக்குச்சுவர் இரண்டாகப் பிரிக்கிறது. நம்புங்கள், சுவற்றுக்கு இரண்டு பக்கமும் வாழ்பவர்கள் […]


ஸ்ரீசாந்த் அடிக்காத சிக்சர்

February 11th, 2007 வகைகள்: நகைச்சுவை, போட்டி, விளையாட்டு, இந்தியா, அலசல் | 30 மறுமொழிகள் » |

சரியாக இரண்டரை ஆண்டுகளுக்குப்பின் ஒரு கிரிக்கட் போட்டியை முழுதாக நேற்று பார்த்தேன். 50″ ப்ளாஸ்மா டிவியிலும் இந்திய க்ரிக்கட் பழையமாதிரிதான் தெரிந்தது. இப்படி ஒரு மேட்ச்சை தோற்பது நம்ம மக்களுக்குத்தான் சாத்தியம். கமண்ட்ரி மட்டும் இல்லாமல் போயிருந்தால் மிட் நைட் மசாலாவுக்கு மாறியிருப்பொம். அதுவும் சிவராமகிரிஷ்ணன், பந்தை சுழற்றுவதைவிட நாக்கை நன்றாகவே சுழற்றுகிறார்.இரண்டு ஓவர்களே இருக்கும் நிலையில் ஒரு கமெண்ட் விட்டார். “இனி (விளையாட்டின்) எல்லா முடிவுகளும் சாத்தியம். 1. இலங்கை ஜெயிப்பது 2. இந்தியா ஜெயிப்பது. […]


இதுதாங்க இந்தியா

February 10th, 2007 வகைகள்: சமூகம், இந்தியா, குறும்படம், அமெரிக்கா | 43 மறுமொழிகள் » |

நான் கொஞ்சம் அதிகமா உணர்ச்சிவசப்படுபவன். இத இன்றைக்கு இன்னுமொருதடவ உறுதி செஞ்சுட்டேன். காலையிலெ எழுந்ததும் கண்ணீர்வரவழச்சிட்டார் நம்ம ஹரி. அவர் பதிவுல ‘மிலே சுர் மேரா துமாரா’ பாடலின் குறும்படம் போட்டிருந்ததர். பாத்ததும் கண்கள் பனித்துவிட்டன. ஏனோ தெரியல ஒன்றைப் பிரிந்துவிட்டபின்தான் அதன் அருமை தெரிகிறது. இந்திய கடைக்கு போயிருந்தேன். அங்க இருந்த செய்தித் தாழில் இந்தியாவில் எங்கேயோ பெண்ணுக்கு சுகப் பிரசவம் ஆவதற்காக ஏதோ (கொஞ்சம் கொடுமையான) பழக்கத்த கடைபிடிக்கிறாங்க. அதைப் பார்த்துவிட்டு யாரோ வெட்கத்துடனே […]


செய்திகள் வாசிப்பது சிறில் அலெக்ஸ்

February 7th, 2007 வகைகள்: செய்தி விமர்சனம், இந்தியா, குரல் பதிவு, அலசல் | 42 மறுமொழிகள் » |

என் முதல் குரல் பதிவு. பிழைகளை பொறுக்கவும் (சொல் + கருத்து)உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடவும் (எழுத்தில் ஹி ஹி) உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


மரணதண்டனைப் பதிவுகள்

October 6th, 2006 வகைகள்: சட்டம், சமூகம், செய்தி விமர்சனம், நிகழ்வு, இணையம், இந்தியா, கட்டுரை, உலகம் | 33 மறுமொழிகள் » |

இது ஒரு ஓசிப் பதிவென்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். தமிழ் பதிவர்கள் அவ்வப்போது சில உருப்படியான விஷயங்களை விவாதிக்கிறார்கள். தேன்கூடு தலைப்போ இல்லை ‘தேன்’ தரும் தலைப்போ அல்லாமல் பலரும் மரணதண்டனை பற்றிய கருத்துக்களை முகமது அப்சலுக்கு கிடைத்த தீர்ப்பை வைத்து விவாதித்திருக்கிறார்கள். அதுபற்றிய தொகுப்பு.ஜெயபாலின் கவிதை – மரணம் தண்டனையா?கொஞ்சம் லைட் ரீடிங் – எளிய வாசகத்திற்காக. பெரிய விஷ்யத்தை சின்னதா கவிதையில் சொல்கிறார். மரணம் தண்டனையாயாருக்குத் தண்டனை தவறு செய்தோர்க்காஅவனைச் சார்ந்தோர்க்காஅளிக்குஞ் சான்றோர்க்காசாகடிக்குஞ் சேவகர்க்கா அவர் […]