தீட்டு

September 11th, 2006 வகைகள்: சமூகம், பாடல், இந்தியா, கவிதை | 10 மறுமொழிகள் » |

திரு அவகளின் ‘மாடு தீண்டலாம் ஆடு தீண்டலாம்’ பதிவில் பா(சா)டல் ஒன்றை பதித்திருக்கிறார். பாடல் வரிகள் கீழே.மாடு தீண்டலாம் உங்கள ஆடு தீண்டலாம் – நாங்கமனுசன் மட்டும் தீண்டக்கூடாதா?நாடு என்பதா இதை நரகமென்பதா? – இங்கேசேரியெல்லாம் சிறைகளானதே.கோட்டை கட்டினோம் கோயில் மேளம் கொட்டினோம் – சவக்குழிகள் கூட நாங்க வெட்டினோம்கோட்டைவிட்டும் கோயில் விட்டும் தூர நிற்கிறோம் -புதைக்கும்சுடுகாடும் இல்ல நாங்க தவிக்கிறோம்பாரதத்தாய் மேனியிலே பாதி உடல் சீழ்பிடித்தால்மீதி உடல் நோயில்லாமல் வாழுமோ? – இந்தஜாதிபேதம் எந்த நாளில் […]


சுதந்திரம்

August 15th, 2006 வகைகள்: ஆன்மீகம், இந்தியா, கவிதை | 2 மறுமொழிகள் » |

“எங்கே மனம் பயமற்றிருக்கிறதோ, தலை நிமிர்த்தப்பட்டிருக்கிறதோ, எங்கே அறிவு கட்டுப்பாடற்றுள்ளதோ*, எங்கே உலகம் குறுகிய சுவர்களைக்கொண்டு துண்டாடப் படவில்லையோ, எங்கே வார்த்தைகள் உண்மையின் ஆழங்களிலிருந்து வருகின்றனவோ, எங்கே அயராத வேட்கை தன் கரங்களை முழுமை நோக்கி நீட்டுகிறதோ, எங்கே பகுத்தறிவு எனும் வெள்ளோடை,செத்த பழக்கங்களெனும் பாலைக்கு வழிதவறவில்லையோ, எங்கே மனம், உம்மால், என்றும் பரந்துபடும், எண்ணங்களுக்கும் ஆக்கத்திற்கும்அழைத்துச்செல்லப்படுகிறதோ… அந்த சுதந்திர சொர்க்கத்தில் இறைவா**, என் நாட்டை எழச்செய்” —தாகூர்Where the mind is without fear and […]


சுதந்திர தின மலர்

August 15th, 2006 வகைகள்: இந்தியா | 10 மறுமொழிகள் » |

சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் சகோதர சகோதரிகளே! உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


பாக்’கிஸ்’தானுக்கு நன்றி

August 12th, 2006 வகைகள்: செய்தி விமர்சனம், இந்தியா, உலகம் | 8 மறுமொழிகள் » |

என்நன்றி கொன்றார்க்கும் …. தீவிரவாதிகளைக் காட்டிக்கொடுத்த நம் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு நன்றி. பக்கத்துவீடுன்னா போட்டி, பொறாம, சாக்கடச் சண்ட, வேலிச் சண்ட எல்லாம் இருக்கத்தான் செய்யும் இருந்தாலும் …. மேலும் விபரங்களுக்கு அணுகவும் SK. உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


மதமாற்றமா? மனமாற்றமா?

June 23rd, 2006 வகைகள்: ஆன்மீகம், இந்தியா, கடவுள், கிறீத்துவம் | 36 மறுமொழிகள் » |

மதமாற்றம் பற்றிய சில பதிவுகளை படிக்க நேர்ந்தது. சில பின்னூட்டவாதங்களையும் (பின்னூட்டம் + வாதம்) படிக்க நேர்ந்தது. இதைப் பற்றி சில எண்ணங்கள்.ஒரு குட்டிக்கதை. அழகான இளைஞியும் இளைஞனும் சந்தையிலிருந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். வழியில் வேறு யாருமில்லை. அந்தப் பெண் இளைஞனிடம் “எனக்குப் பயமாயிருக்கிறது.” என்றாள். இளைஞன் “என்ன பயம்?” என்றான். “நீ எனக்கு முத்தம் கொடுத்திருவியோன்னு பயமாயிருக்கு” என்றாள் பெண். “அதெப்படி முடியும் என் தலையில அரிசி மூட்ட இருக்குது, கையில ஆட்டை பிடிச்சுருக்கேன், இந்த […]


இந்த யானைக்கு ஆடத் தெரியும்.

June 21st, 2006 வகைகள்: தகவல், வியாபாரம், இந்தியா, அறிவிப்பு | 4 மறுமொழிகள் » |

அமெரிக்க வார இதழ் ‘டைம்’ல் இந்த வாரம் இந்தியாவின் அதிவேக பொருளாதார வளர்ச்சிபற்றி கட்டுரைகள் வந்துள்ளன. என்னை கவர்ந்த சில வரிகள். In ways big and small, Indians are changing the world. (India) the second most populous nation in the world, and projected to be by 2015 the most populous… Writers like to attach catchy tags to nations, which is why […]


நேரம் நல்லாருக்கு

June 19th, 2006 வகைகள்: தகவல், வியாபாரம், இந்தியா | 2 மறுமொழிகள் » |

இந்த வார டைம்ஸ் உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


தமிழ் கிறித்தவர்களும் ஜாதி அமைப்பும் -II

March 10th, 2006 வகைகள்: சமூகம், இந்தியா, கட்டுரை, கிறீத்துவம் | 19 மறுமொழிகள் » |

நான் எழுதியிருந்த தமிழ் கிறித்தவர்களும் ஜாதி அமைப்பும் பதிவுக்கு அடைக்கல ராசா என்பவர் எழுதியீருக்கும் பின்னூட்டங்கள். தனிப் பதிவுக்குத் தகுதியானது என்பதால் இதோ… சாதி சாதியின் கொடுமையை, தீண்டாமையின் கோரப்பிடியை உணர்ந்து வாழ்ந்தவன் நான். கடந்த ஐந்து ஆண்டுகால குருத்துவ பணிவாழ்வில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே வாழ்ந்து அனுபவித்த சாதியை, ஈழத்தமிழர்களிடேயும் கண்டபோது மனம் வெறுத்துப் போனேன். ஆனால் சற்று ஆறுதலான விடயம் தீண்டாமை என்னும் கொடிய அரக்கனை இந்தியாவில் மட்டுமே காணலாம். இருப்பினும் சாதிய ஏற்றத்தாழ்வுகளும் வேறுபாடுகளும் […]


இலக்கு என்ன?

March 7th, 2006 வகைகள்: சமூகம், இந்தியா, கட்டுரை, அலசல் | 7 மறுமொழிகள் » |

கல்லூரியில் மாணவர் அமைப்பு ஒன்றுக்கு தலமை தாங்கியிருந்தேன். முதல் நாள் கூட்டத்தில் அமைப்பை வழிநடத்தும் ஆசிரியர் சொன்னது, “எந்த ஒரு (சமூக) அமைப்பும் தன் இலக்கை அடைய ஒரு கால வரையறை வைத்துக்கொள்ளவேண்டும். இன்னும் மூன்று வருடங்களில் இந்த ஊரில் தண்ணீர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவது, அல்லது 5 வருடங்களில் இந்த ஜாதியினர் செருப்பு போட்டு ஊரில் சைக்கிள் மிதித்துச் செல்ல வழிவகுப்பது எனபது போல. இந்த இலக்கை குறிப்பிட்ட காலத்தில் அடையவில்லையேல் அந்த அமைப்பு […]


தமிழ் கிறித்தவர்களும் ஜாதி அமைப்பும்

March 3rd, 2006 வகைகள்: சமூகம், இந்தியா, கட்டுரை, கிறீத்துவம், அலசல் | 34 மறுமொழிகள் » |

இது ஒரு ஆராய்ச்சிக்கட்டுரையல்ல என்பதை முதலில் குறிப்பிட்டுவிடுகிறேன்.ஜாதி அமைப்பு இந்திய சமூகவியலின் ஒரு கெட்ட அடையாளமாகத் தோன்றுகிறது. இந்து மத மூலங்களிலிருந்து தோன்றினாலும் இன்று ஜாதி என்பது ஒரு சமூகம் சார்ந்த அமைப்பாகத்தான் இருக்கிறது. இந்துக்கள் மட்டும்தான் ஜாதி அமைப்பை பின்பற்றுகிறார்கள் என்பது உண்மையல்ல.தமிழ் கிறித்துவர்கள் சாதீய அமைப்புகளுக்குட்பட்டே செயல்படுகிரார்கள். சாதாரண கிறித்துவர் முதல் கிறித்துவ மேலாண்மை அமைப்புகளும் ஜாதி அடிப்படையிலே நடைபெறுகின்றன.கத்தோலிக்க கிறித்துவர்களின் கடைசி பிரதிநித்துவ குழுமம் ‘பங்கு’ என அழைக்கப்படுகிறது. ஒரு ஊரின் அல்லது […]