‘போலி’ – செய்வதெப்படி?

February 7th, 2007 வகைகள்: தகவல், நகைச்சுவை, நையாண்டி, கலாய்த்தல், உணவு | 11 மறுமொழிகள் » |

தேவையானப் பொருட்கள்மைதா-இரண்டு கோப்பைகடலைப்பருப்பு- ஒன்னரை கோப்பைவெல்லம்-ஒரு கோப்பைதேங்காப்பூ-அரைக்கோப்பைஏலப்பொடி-கால் தேக்கரண்டிமஞ்சத்தூள்-கால் தேக்கரண்டிஉப்புத்தூள்-கால்தேக்கரண்டிஎண்ணெய்-இரண்டு தேக்கரண்டிநெய்-கால்க்கோப்பைசெய்முறைமைதாவில் உப்புத்தூள், மஞ்சத்தூளைப் போட்டு இரண்டு தேக்கரண்டி எண்ணெயைச் சேர்த்து கலக்கவும். பின்பு தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து சற்று தளர பிசைந்துக் கொள்ளவும்.கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து வேகவைத்து நீரை சொட்ட வடித்து விட்டு ஒன்றும்பாதியுமாக அரைத்து கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப்போட்டு உருக்கவும். அதில் அரைத்த கடலைபருப்பு, ஏலப்பொடி, மற்றும் தேங்காப்பூவையும் சேர்த்து நன்கு கலக்கவும்.பூரணம் நன்கு கெட்டியானவுடன் இறக்கி வைத்து ஆறவைக்கவும்.பிறகு […]


சுட்டமீனும் சுறாபுட்டும்

December 29th, 2006 வகைகள்: சமூகம், நட்சத்திரம், பொது, முட்டம், மீன், கட்டுரை, உணவு | 12 மறுமொழிகள் » |

(நட்சத்திரப் பதிவில் மீள் பதிவு தேவை எனும் விதிக்கேற்ப… அலைகள்..பாறைகளிலிருந்து..)நமக்கு இல்லாத பழக்கங்களை நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை. பொதுவாக நமக்கு விளங்காதவைகளை நாம் வெறுக்கவே செய்கிறோம். நம் மூளை செய்யும் வேலை அது. ஒருவருக்கு தெய்வீகமாகப்படும் விஷயங்கள்கூட மற்றவருக்கு அருவறுப்பகத் தோன்றுகிறது. நாம் சிறு வயது முதல் பழக்கப்பட்டு வந்தவைகள்தான் உயர்ந்தது என நமக்கு எண்ணத்தோன்றுகிறது. மதம், ஜாதி சார்ந்த நம் தீவிர (fanatic) மனப்பாங்குகளும் இதைப்போலத்தான்.பலநேரங்களில் ஒரு மனிதனை மதிப்பிட அவரின் பழக்கவழக்கங்களை நாம் […]


வான்கோழி ரோஸ்ட் செய்வது எப்படி?

November 23rd, 2006 வகைகள்: பதிவர்வட்டம், வலைப்பதிவுகள், அமெரிக்கா, உணவு | 12 மறுமொழிகள் » |

நன்றிஅறிவித்தலை ஒரு விழாவாகக் கொண்டாடுகிறார்கள் அமெரிக்ககவில். இதுக்காக குளிர்காலத்தில், வெளியே போகமுடியாதபடியான தட்பவெட்பத்தில் நான்குநாள் லீவ் வேற விட்டுட்டாங்க. Thanksgiving பொங்கலைப் போன்றதொரு திருவிழாவாக உருவெடுத்து இன்று எல்லாத் துறையினரும் குடும்பமாய் ஒன்றாய் சேர்ந்து கொண்டாடும் ஒரு பண்டிகையாக மாறியிருக்கிறது. நவம்பரின் நாலாவது வியாழன் தாங்க்ஸ்கிவிங். அமெரிக்காவில் மட்டுமல்லாமல் வேறுசில நாடுகளிலும் thanksgiving கொண்டாடப்படுகிறது.பொங்கலில் பொங்கல் வைப்பதுபோலவே தாங்ஸ்கிவிங் ஸ்பெஷல் என்னண்ணா வான்கோழி (Turkey) ஒண்ண முழுசா ரோஸ்ட் செய்து குடும்பமா உக்காந்து சாப்புடுறதுதான். டர்க்கி ரோஸ்ட் […]


ஐ மீன்…ஐரமீன்

January 19th, 2006 வகைகள்: தகவல், மீன், உணவு | மருமொழிகள் இல்லை » |

கொழுப்புள்ள சில மீன்வகைகளை உண்பது மூளைக்கு நல்லது என ஒரு ஆய்வு சொல்கிறது. மீன் எண்ணையில் ஒமேகா-3 என்கிற அமிலம் மூளையின் நரம்பு செல்களை வலுப்படுத்துகின்றன. இவைதான் ஜப்பானியர்களின் வாழ்நாள் நீட்சிக்கும் காரணம் எனவும் நம்பப்படுகிறது. சமையலில் சேர்க்கப்படும் மஞ்சள் வீக்கங்களை குறைக்கும் தன்மயுடயதால், மூளைவீக்கத்தினால் ஏற்படும் அல்ஸைமர் போன்றநோய்களை, உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்வதினால் தடுக்கலாம். இதனால்தான் அல்ஸைமர் இந்த்தியாவில் மிகக்குறைவாக இருக்கிறதென்கிறது டைமில் வந்த ஒரு கட்டுரை. பீட்ஸாவிலும், பர்கரிலும் கொஞ்சம் மஞ்சளும் மீன் […]