சிக்காகோ பதிவர்கள் சந்திப்பு

November 30th, 2006 வகைகள்: சந்திப்பு, நிகழ்வு, பதிவர்வட்டம், பொது, வலைப்பதிவுகள், அமெரிக்கா | 17 மறுமொழிகள் » |

சிக்காகோவில் பதிவர்கள் மூவர் கடந்த ஞாயிறன்று சந்தித்தோம். அயராது பதிவு போடும் சிவபாலன், சவுண்டாய் பதிவு போடும் உதயக் குமார் மற்றும் அப்பப்போ பதிவு போடும் நான்.மூவரும் சந்திப்பது கடைசி நேரத்தில்தான் முடிவானது. அறிவிப்பும் காடைசி நேரத்திலேயே தரப்பட்டிருந்தது. நண்பர் சுந்தரமூர்த்தி மின் மடல் அனுப்பியிருந்தார். தொலைபேசினார். சந்திப்பில் கலந்துகொள்ள இயலாமைக்கு வருத்தம் தெரிவித்தார். ஞாயிறு மாலை நான்கு மணிக்கு சிக்காகோ தாவரவியல் பூங்காவில் சந்திப்போம் எனக் கூறியிருந்தார் சிவபாலன். தாவரங்களெல்லாம் வறண்டு நிக்கும் இந்தக் குளிர்காலத்தில் […]


மரணதண்டனைப் பதிவுகள்

October 6th, 2006 வகைகள்: சட்டம், சமூகம், செய்தி விமர்சனம், நிகழ்வு, இணையம், இந்தியா, கட்டுரை, உலகம் | 33 மறுமொழிகள் » |

இது ஒரு ஓசிப் பதிவென்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். தமிழ் பதிவர்கள் அவ்வப்போது சில உருப்படியான விஷயங்களை விவாதிக்கிறார்கள். தேன்கூடு தலைப்போ இல்லை ‘தேன்’ தரும் தலைப்போ அல்லாமல் பலரும் மரணதண்டனை பற்றிய கருத்துக்களை முகமது அப்சலுக்கு கிடைத்த தீர்ப்பை வைத்து விவாதித்திருக்கிறார்கள். அதுபற்றிய தொகுப்பு.ஜெயபாலின் கவிதை – மரணம் தண்டனையா?கொஞ்சம் லைட் ரீடிங் – எளிய வாசகத்திற்காக. பெரிய விஷ்யத்தை சின்னதா கவிதையில் சொல்கிறார். மரணம் தண்டனையாயாருக்குத் தண்டனை தவறு செய்தோர்க்காஅவனைச் சார்ந்தோர்க்காஅளிக்குஞ் சான்றோர்க்காசாகடிக்குஞ் சேவகர்க்கா அவர் […]


எல்லாம் தெரிகிறது

January 23rd, 2006 வகைகள்: சமூகம், தகவல், நிகழ்வு, புதுமை, இணையம், அமெரிக்கா, உலகம் | மருமொழிகள் இல்லை » |

பொருளாதார வளர்ச்சிபெற்ற நாடுகளில் தற்கொலை விகிதம் வளரும் நாடுகளைவிட அதிகமாயிர்க்கிறது என்பது கணக்கெடுக்கப்பட்ட உண்மை. எல்லாவசதிகளும் இருந்தபோதும் ஏன் இப்படி? வேலையில்லாதிருந்தாலோ ஊனமுற்றவரானாலோ, அரசாங்கம் அவர்களை கவனித்துக்கொள்கிறது. பின் ஏன்?நான் நினைக்கிறேன், இங்கு வாழ்பவர்களுக்கு வாழ்க்கை எந்தவித சவாலையும் அளிப்பதில்லை. எல்லாம் வசதியாக அமைந்து விடுகிறது, சோதனையில்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? உங்களை பில் கேட்ஸ் தத்தெடுக்கிறார், ஒரு பெரிய பங்களாவில், எல்லா வசதிகளும் தந்து உங்களை தங்க வைக்கிறார். வெளியுலகோடு உங்களுக்கு குறைந்த தொடர்புகளே கொள்ளமுடிகிறது, […]


செத்த பிழைப்பு

January 20th, 2006 வகைகள்: சினிமா, தன்னம்பிக்கை, தகவல், நிகழ்வு, நகைச்சுவை, ஆளுமை, அமெரிக்கா | ஒரு மறுமொழி » |

செத்த பிணமாக நடிக்க சான்ஸ் தேடும் ஒருத்தர் போற வர்ற இடத்திலெல்லாம் பிணமாக நடித்துக்காட்டிக்கொண்டிருக்கிறார். இவரது வைலப்பக்கத்தில் இவர் பிணமாக போஸும் கொடுத்துள்ளார். கண்ண மூடாம பிணம் மாதிரியே அசையாம கிடக்க பயிற்சி எடுத்திருக்கிறார். நிறைய முயற்ச்சிக்கப்புறமா இப்பதான் ‘Stiff’ என்கிற படத்தில் அவருக்கு ஒரு வேஷம் கெடச்சிருக்கு, பிணமா நடிக்க. அவரது கல்லறைக் கல்லில் “இந்த முறை இது நிஜம்”(நடிப்பல்ல) அப்படீன்னு எழுதி வைக்கணுமாம். http://deadbodyguy.com/home.aspx செத்த பிழைப்பு – தமிழில் Oxymoron உங்கள் கருத்துக்களை […]