ஊனம்

January 25th, 2007 வகைகள்: சமூகம், சிறுகதை, தன்னம்பிக்கை, தமிழோவியம் | 10 மறுமொழிகள் » |

மாநாட்டிலிருந்து கடைசி மந்திரி விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தார்.காலையிலிருந்து காத்திருப்பும் தொடர் சல்யூட்களுமாய் ஏட்டு வேலுமணியின் உடலை வருத்தியிருந்தன. இன்னும் முக்கால் மணிநேரமாவது ஆகும் அவர் வீடு செல்ல.“சார். நல்லா இருக்கியளா?”குரல்கேட்டுத் திரும்பினார் வேலுமணி.“டேய் ராசையா எப்டி இருக்க?” வந்தவனைப் பார்த்து சிரித்தார் ஏட்டு தோளில் தட்டியபடியே, “என்னடே இங்க? துபாய்க்கு எதாவது போறியா?”“என் கடேசி தம்பி அமெரிக்கா போறான்.”“அமெரிக்காவுக்கா? ரெம்ப சந்தோஷம்டே. வேலைக்காபோறான்?“ஆமா.”“ஒங்கப்பன் எப்டி இருக்கான்?”“அவரு போயி ரெண்டு வருசமாவுது சார்.”“அப்டியா? ஊருக்கு வந்து வருசக்கணக்காவுது. […]


வலைப்பதிவுகளைப் படித்தால் இந்த மாற்றம் வருமா?

January 24th, 2007 வகைகள்: சமூகம், தன்னம்பிக்கை, தமிழோவியம், நல்லவர், நிகழ்வு | 17 மறுமொழிகள் » |

இந்த வார தமிழோவியத்தில் திருமலைக்கொழுந்து என்பவர் எழுதியிருக்கும் கட்டுரை. படித்துவிட்டு மேலுள்ள கேள்வியை அசைபோடுங்கள்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருக்கிறது கம்பன் கழகம். இந்த கழகத்தின் சார்பில் கவிச்சக்கரவர்த்தி கம்பன் எழதிய கம்பராமாயணம் பற்றி பல்வேறு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவர்களின் நூல்களைப் படித்து கோயம்புத்தூர் சிறையில் இருக்கும் மு.ஏகாம்பரம் என்ற ஆயுள் தண்டனைக் கைதி மனம் உருகி கம்பன் கழகத்திற்கு நான்கு பக்கத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார். (கடிதத்தை படம்பிடித்து போட்டிருக்கிறார்)சிறைகளில் இருக்கும் சிறைவாசிகளை சமூகம் ரவுடிகளாகவும், சமூக விரோதிகளாகவும் […]


நடையிழந்த கால்கள்தன்னில்…

January 18th, 2007 வகைகள்: சமூகம், சினிமா, டி.வி, தன்னம்பிக்கை, பொது | 7 மறுமொழிகள் » |

‘நடையிழந்த கால்கள்தன்னில் நளினத்தை பார்க்கிறேன்’. டி. ராஜேந்தரின் இந்த வரிகளை நியாபகப் படுத்தியது (நடன)இயக்குநர் லாறன்ஸ் இராகவேந்திரா தந்த பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி. ஊனமுற்றவர்கள் ஆடிய நடன நிகழ்ச்சி. ஊனம் உடலிலேதான் மனதிலல்ல என ஒவ்வொரு அசைவிலும் காண்பித்தனர். ‘காலுக்கு செருப்பில்லை எனக் கவலைப்பட்டேன் காலில்லாதவனைக் காணும்வரை’ என்பதுபோல, இத்தனை குறைகளுக்கு மத்தியுலும் வென்றுகாட்டும் இவர்கள்தான் இன்றைய தலைமுறைக்கு ஊக்கமருந்து.ஊனம் தெரியும்படியாய் உடையணிந்திருந்ததை என் மனைவி சுட்டிக் காட்டினார். ஒருவகையில் அதுதான் அவர்கள் தரும் செய்தி. கீழ்நிலைகளிலிருந்து […]


வெயில் – நிழலல்ல நிஜம்

January 3rd, 2007 வகைகள்: சமூகம், சினிமா, தன்னம்பிக்கை, திரை விமர்சனம், பொது | 18 மறுமொழிகள் » |

சன் டி.வி டாப் 10 ஸ்டைல்ல, ‘வேண்டிய அளவுக்கு ‘வெயில்’ படம் பற்றி பதிவர்கள் அலசிவிட்டதால’ எனக்குத் தோன்றிய சில எண்ணங்களை பகிர்ந்துக்கலாம்னு இந்தப் பதிவு.வெயில், சில கசப்பான நிஜங்களை வெளிச்சம் போட்டு காண்பித்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு ஆவணப் படம்போலவே, நிஜத்துக்கு வெகு அருகாமையில் எடுக்கப்பட்டிருக்கும் விதம் அருமை. தமிழ் திரைப்படங்கள் அசட்டுத்தனங்களை களைந்துவிட்டு உருப்படும் எனும் நம்பிக்கையை தரும் மற்றொரு படம் இது.வெயில், படத்தில் முக்கிய கதாபாத்திரமாய் வருகிறது. ஒரேமுறை தோன்றினாலும் கதையின் அடித்தளமே நாயகன் […]


ஹிட்லர் காலத்தில் சார்லி சாப்ளின் தில்

February 8th, 2006 வகைகள்: சமூகம், சினிமா, தன்னம்பிக்கை, தகவல், ஆளுமை, உலகம் | 14 மறுமொழிகள் » |

இந்த பாடல்வரிகளை கேட்டிருந்தாலும் இதன் பின்னணி பலருக்கும் தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். ‘எந்தப்பாடல் வரி?’ என்பவர்களுக்கு. ‘தில்’ படத்துல வருமே… வேண்டும் வேண்டும் தீயைத்தீண்டும் தில் அந்தப் பாடலின் வரிதான்.சார்லி சாப்ளின் நமெக்கெல்லாம் அறிமுகமானவர். அவரின் திரைப்படங்களை கண்டிராதவர்களுக்கும் அவர் அறிமுகமாகியிருப்பார், எதாவது ஒர் விதத்தில். அவரது கோமாளித்தனமான (சாப்ளின் தனமான என்றும் வாசிக்கலாம்) படங்களிலெல்லாம் ‘வலியவனை எளியவனால் வெல்லமுடியும்’ என்கிற ஒரே கருதான். ஏழ்மையும், வறுமையும்தான் இவரின் சுவாரஸ்யமான நகைச்சுவை படங்களுக்கு பின்னணி என்பது நகைமுரண்(Irony). […]


செத்த பிழைப்பு

January 20th, 2006 வகைகள்: சினிமா, தன்னம்பிக்கை, தகவல், நிகழ்வு, நகைச்சுவை, ஆளுமை, அமெரிக்கா | ஒரு மறுமொழி » |

செத்த பிணமாக நடிக்க சான்ஸ் தேடும் ஒருத்தர் போற வர்ற இடத்திலெல்லாம் பிணமாக நடித்துக்காட்டிக்கொண்டிருக்கிறார். இவரது வைலப்பக்கத்தில் இவர் பிணமாக போஸும் கொடுத்துள்ளார். கண்ண மூடாம பிணம் மாதிரியே அசையாம கிடக்க பயிற்சி எடுத்திருக்கிறார். நிறைய முயற்ச்சிக்கப்புறமா இப்பதான் ‘Stiff’ என்கிற படத்தில் அவருக்கு ஒரு வேஷம் கெடச்சிருக்கு, பிணமா நடிக்க. அவரது கல்லறைக் கல்லில் “இந்த முறை இது நிஜம்”(நடிப்பல்ல) அப்படீன்னு எழுதி வைக்கணுமாம். http://deadbodyguy.com/home.aspx செத்த பிழைப்பு – தமிழில் Oxymoron உங்கள் கருத்துக்களை […]