ஆக்குபை அமெரிக்கா!

March 23rd, 2012 வகைகள்: செய்தி விமர்சனம், அமெரிக்கா, உலகம் | ஒரு மறுமொழி » |

முதலில் அமெரிக்கப் பொருளாதார அரிச்சுவடிகளிலிருந்து ஒரு பாலபாடம். 2007 கணக்கெடுப்பின்படி அமெரிக்காவின் சொத்தில் 85% பங்கு 20% பணக்காரர்களிடமும் மீதி 15% மிச்சமுள்ள 80% மக்களிடமும் உள்ளது. அதாவது அமெரிக்க மக்கள் தொகையில் 1% பேர் அமெரிக்காவின் 34.6% சொத்துக்களுக்கு உரிமையாளர்கள். மீதி 99%பேரில் சிலர் தற்போது ‘வால்’ தெருவுக்கு வந்துவிட்டிருக்கிறார்கள். அமெரிக்கப் பொருளாதாரத்தின் முக்கியமானக் குறியீடுகளில் ஒன்று நியூயார்க் நகரத்தில் அமைந்துள்ள வால் ஸ்ட்ரீட். இங்குதான் உலகப்புகழ் பெற்ற நியுயார்க் பங்கு வர்த்தக மையம் உள்ளது. […]


தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் சிறப்புரை

September 4th, 2009 வகைகள்: சந்திப்பு, தகவல், ஆளுமை, இலக்கியம், அமெரிக்கா, அறிவுப்பு | ஒரு மறுமொழி » |

பாரதி தமிழ் சங்கம் தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் சிறப்புரை தமிழகத்தின் முன்ணணி எழுத்தாளரும், சிந்தனையாளரும், திரைப்பட வசனகர்த்தாவும் ஆகிய திரு.ஜெயமோகன் அவர்களை, சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் இயங்கி வரும் தமிழ் கலாச்சார அமைப்பான பாரதி தமிழ் சங்கம் வரவேற்று கவுரவிக்கவுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜெயமோகன் அவர்களது சொற்பொழிவும், கேள்வி பதில் நிகழ்ச்சியும் இடம் பெற உள்ளது. அனைவரும் வருக. நாள்: செப்டம்பர் 5ம் தேதி, சனிக்கிழமை இடம்: Fermont Library Hall Fremont Library Stevenson Blvd […]


வெற்றியின் குரல்-3

January 20th, 2009 வகைகள்: அமெரிக்கா | 2 மறுமொழிகள் » |

வெற்றியின் குரல்-1 வெற்றியின் குரல்-2 நவம்பர் 4, 2008 வழக்கம்போல எல்லா நாட்களுக்கும் உரிய எதிர்பார்ப்புக்களோடு விடிந்தது. வாக்காளர்கள் மாற்றத்திற்கான முயற்சியொன்றின் முடிவினை ஒவ்வொரு வாக்குச் சீட்டாக எழுதிக் கொண்டிருந்தனர். வரலாறு காணாத எண்ணிக்கையில் வாக்குப் பதிவு நடைபெற்றது. அன்றைய ஷாப்பிங் சம்பிரதாயங்களை தள்ளிவைத்து விட்டு தொலைக்காட்சியில் கண்கள் பதித்திருந்தேன். உலகெங்கிலும் முன்பில்லாதது போல பல நாடுகளிலும் என்னைப்போலவே சாதாரண மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஒரு இனம் தன்னை சில கட்டுகளுக்குள்ளிருந்து விடுவித்தெழும் தருணத்தை எதிர்பார்த்து, ஒரு […]


வெற்றியின் குரல்-2

January 20th, 2009 வகைகள்: அமெரிக்கா | மருமொழிகள் இல்லை » |

வெற்றியின் குரல்-1 ஒபாமா அடுத்த கட்டத்திற்கு நகரத் தயாரானர். அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதியாக போட்டியிட்டார். படுதோல்வி அடைந்தார். தன் அரசியல் பயணம் ஒரு மகாணத்திற்குள்ளாக சுருங்கி விடும் அபாயத்தை உணர்ந்தார். மேலும் சில காலம் ஏற்கனவே இருந்த மகாண பதவியில் நீடித்திருந்தார், இடையே சிகாகோ பல்கலைக் கழகத்தில் சட்டம் பயிற்றுவித்தார். தோல்வியின் வடுக்கள் மறைந்து கொண்டிருந்தன. 2001 செப்டம்பர் மாதம் ஊடகவியலாளர் ஒருவருடன் பராக் ஹுசைன் ஒபாமா உணவருந்தச் சென்றார். அப்போது அந்த நண்பர் “அரசியல் இயங்கியல்கள் […]


வெற்றியின் குரல்-1

January 20th, 2009 வகைகள்: அமெரிக்கா | 2 மறுமொழிகள் » |

உலகெங்கும் ஒரே தலைப்புச் செய்தியோடு விடிந்த அந்த நாளில் வரலாற்றில் புதிய பக்கம் ஒன்று எழுதப்பட்டிருக்கிறது. ஒபாமா வென்றார்’ என்பது அத்தகையதொரு தலைப்புச் செய்தி. வெறும் செய்தியாக மட்டுமில்லாமல் உலகெங்கும் உணர்வலைகளை உருவாக்கியுள்ளது ஒபாமாவின் தேர்தல் வெற்றி. கென்யாவில் அரசு விடுமுறை அறிவித்தது, மக்கள் வீதியில் கொண்டாடினர், இந்தோனேஷியாவில் பள்ளிக் குழந்தைகள் குதூகலித்தன. தீமையின் அச்சாணி என புஷ்ஷால் வர்ணிக்கப்பட்ட ஈரான் தேசம் ஒபாமாவுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளது. பிரதிநிதித் துவங்களுக்கும், தலைமைக்கும் ஏங்கிக் கிடக்கும் பல […]


பராக்! பராக்! பராக்! – பழசு

November 6th, 2008 வகைகள்: சமூகம், கட்டுரை, அமெரிக்கா, அலசல், உலகம் | 2 மறுமொழிகள் » |

(பராக் ஒபாமா உட்கட்சி தேர்தலில் வெற்றி பெற்றதும் எழுதிய கட்டுரை. எங்கேயும் வெளியிடாமல் இருந்தது. சேமிப்புக்காக இங்கே….) பராக்! பராக்! பராக்! 1856ல் அமெரிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பொன்றில் நீதிபதி ட்ரெட் ஸ்காட் கீழ்கண்டவாறு கூறுகிறார்,”கறுப்பினத்தவர் வெள்ளை இனத்தவர்கள் மதிக்கத்தக்க எந்த உரிமையும் இல்லாதவர்கள். வெள்ளை மனிதனின் இலாபத்திற்காக/வசதிக்காக நீக்ரோ நீதியோடும் சட்டபூர்வமாகவும் அடிமையாக்கப்படலாம்.” ஒரு நூற்றாண்டுக்குப் பின் 1965ல் அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. வாக்குரிமை பெற்று 43 ஆண்டுகளுக்குப் பின் கறுப்பினத்தவர் ஒருவர் அமெரிக்க […]


எடுத்தேன் கொடுத்தேன் 06/24/2008

June 24th, 2008 வகைகள்: சமூகம், செய்தி விமர்சனம், திரை விமர்சனம், தேன், நிகழ்வு, அஞ்சலி, அமெரிக்கா, அலசல் | 15 மறுமொழிகள் » |

பாலபாரதியின் விடுபட்டவை போல ‘எடுத்தேன் கொடுத்தேன்’ அவ்வப்போது எழுதலாம் என எண்ணம். சில செய்திகளை சுருங்கச் சொல்லிச் செல்வதுதான் சிறப்பு. வலைப்பதிவுக்கு ஏற்றதொரு வடிவமும்கூட. எடுத்தேன் கொடுத்தேனை இப்படியும் வாசிக்கலாம் எடு தேன் கொடு தேன். தசாவதாரம் – II இரண்டாம் முறையாக தசாவதாரம் பார்த்தேன். இதுவரை தசாவதாரத்திற்கான மொத்த செலவு $200 க்கருகில். இரண்டாம் முறை படம் முன்பை விட நன்றாக இருந்தது. இப்போது கமலின் முகத்தை தவிர்த்து படத்தில் மற்ற அம்சங்களில் கவனம் செல்கிறது. […]


அமெரிக்கத் தேர்தல்

June 5th, 2008 வகைகள்: அமெரிக்கா, அலசல் | 9 மறுமொழிகள் » |

அமெரிக்கத் தேர்தல் முறையின் வியத்தகும் அம்சம் உட்கட்சி ஜனநாயகம். அதிபர் தேர்தலில் தன் கட்சி சார்பில் போட்டியிடுபவரை ஜனநாயக முறையில் வாக்கெடுப்பின் மூலம் கட்சி உறுப்பினர்களும், பொதுமக்களும் தேர்வு செய்கிறார்கள். மிக நீண்டதும், அதிபர் பொதுத்தேர்தலைவிட ஆர்ப்பாடமும் குழப்பமும் மிகுந்ததாக உட்கட்சி தேர்தல்கள் அமைந்திருந்தாலும் மக்கள் பிரதிநித்துவம் எனும் ஜனநாயகக் கொள்கையை இயன்றவரை செயலாக்குவதற்கான ஒரு பெரும் முயற்சி என இதைக் காண முடிகிறது. அமெரிக்கத் தேர்தலில் இரு பெரும் கட்சிகளான குடியரசுக் கட்சி (Republican Party) […]


அமெரிக்கத் தேர்தல் களம்

May 23rd, 2008 வகைகள்: புஷ், அமெரிக்கா, அலசல் | ஒரு மறுமொழி » |

இரண்டு பெரிய கட்சிகள். கட்டுக்கோப்பான உட்கட்சி ஜனநாயகம். பெரும்பாலும் இடதும் வலதுமான வாக்காளர்கள், நடுவில் சில கட்சி சார்பற்றவர்கள். முதல் பார்வையில் எளிதாகவும், சிக்கலற்றதாகவும் தெரியும் அமெரிக்கத் தேர்தல் களத்தின் மேல்திரையை விலக்கிப்பார்த்தால் அதன் குழப்பம் மிகுந்த நிலை உலகின் வேறு ஜனநாயகங்களிலிருந்து வேறுபட்டதல்ல என்பதை உணரலாம். அமெரிக்காவில் பல அரசியல் கட்சிகள் இருந்தும் குடியரசுக்கட்சி(Republican Party) மற்றும் ஜனநாயகக் கட்சி(Democratic Party) இரண்டும் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்டவையாகவும் அமெரிக்க அரசியலை நிர்ணயிப்பவையுமாக உள்ளன. பொதுவாகக் குடியரசுக் […]


உறைந்து நிற்கும் காலம்

May 19th, 2008 வகைகள்: சிகாகோ, கட்டுரை, அனுபவம், அமெரிக்கா | 7 மறுமொழிகள் » |

காலத்தை உறையச் செய்வது எப்படி? நேற்று சிகாகோவின் ஃபீல்ட் அருங்காட்சியகத்தில் இதற்கு விடைகிடைத்தது. 65மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏதோ ஒரு நிலையில் பூமியில் புதைந்த சூ(sue) எனும் டைனசோர், சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சாட்டையடிகளின் சத்தத்தினூடே எழுந்த உளிகளின் புலம்பலில் உருவாக்கப்பட்ட எகிப்திய கற்சவப்பெட்டிகள், சில நூறாண்டுகளுக்கு முன்புவரை நாகரீகங்களின் நிலைகள் என அங்கே காலம் உறை நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. 65 மில்லியன் ஆண்டுகள் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. பிரபஞ்சத்தின் வயது 4.55 பில்லியன் […]