ஜார்ஜ் புஷ்ஷின் சமையல் குறிப்புக்கள்

May 5th, 2008 வகைகள்: நகைச்சுவை, நையாண்டி, புஷ், கலாய்த்தல், அமெரிக்கா, அலசல் | 9 மறுமொழிகள் » |

இந்தியன் மிடில்கிளாஸ் டின்னர்: ஒருவருக்கு ஒரு அரிசி வீதம் எடுத்துக்கொள்ளவும். அதை குழந்தைகள் விளையாட வைத்திருக்கும் சமையல் பாத்திரத்தில் இட்டு நன்றாக வேகவைக்கவும். அதிலிருந்து வடித்தெடுத்த கஞ்சியை ஒரு கப்பில் சேமித்து வைத்துக்கொள்ளவும். அமெரிக்க பஃபே ஒன்றின் படத்தை இணையத்திலிருந்து பதிவெடுத்து வைத்துக்கொள்ளவும். இப்போது நன்கு வெந்த அரிசியை எடுத்து அந்த பஃபே படத்தை பார்த்துக்கொண்டே சாப்பிடவும். பசி அதிகமாயிருந்தால் ஒருவருக்கு இரண்டு பருக்கைகள் எடுத்துக்கொள்ளலாம். வடித்த கஞ்சியுடன் முந்தநாள் மழையில் ஓட்டில் வழிந்த மழைத்தண்ணியை சேமித்து […]


நாஞ்சில் நாடன் + சிவாஜி த பாஸ்

April 14th, 2008 வகைகள்: தகவல், கட்டுரை, அமெரிக்கா | 7 மறுமொழிகள் » |

‘வார்த்தை’ சிற்றிதழ் ஒரு வழியாய் (ஆகாய வழியாய்) வந்து சேர்ந்தது. என் வாசிப்பில் இணையத்திலல்லாது “செத்த மரத்தில் செதுக்கப்பட்ட” முதல் சிற்றிதழ் ‘வார்த்தை’. நண்பர்கள், பதிவர்கள் பி.கே.சிவகுமாருக்கும் ஹரன் பிரசன்னாவிற்கும் வார்த்தை குழுவுக்கும் வாழ்த்துகள். இதில் இன்னொரு ‘முதன்முதலாக’ என்னெவென்றால் நான் முதன் முதலாக வாசித்த நாஞ்சில் நாடன் கதை வார்த்தையில் வந்திருக்கும் ‘ஐயம் இட்டு உண்’ எனும் சிறுகதைதான். இந்த அவசர காலத்தில் நம் ‘ஐயம்’ இடுதல் எப்படி இருக்கிறது என்பதை எடைபோடும் ஒரு கதை. […]


மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியரின் ‘எனக்கொரு கனவுண்டு’ எழுச்சி உரை

April 11th, 2008 வகைகள்: திண்ணை, மொழிபெயர்ப்பு, ஆளுமை, கட்டுரை, அமெரிக்கா, உலகம் | 11 மறுமொழிகள் » |

ஆகஸ்ட் 28, 1963 லிங்கன் நினவகம், வாஷிங்டன் டி.சி மார்ட்டின் லூத்தர் கிங் சுட்டுக்கொல்லப்பட்ட நாற்பதாண்டு நினைவு நேரத்தில் அந்த மாமனிதருக்குச் சமர்ப்பணம் நம் நாட்டின் வரலாற்றில் மாபெரும் விடுதலைப் போராட்டமாக இடம்பெறப்போகும் நிகழ்வொன்றில் உங்களோடு இணைவதில் மகிழ்ச்சி. நூறு(Five score) வருடங்களுக்கு முன்னர், இங்கு யாரின் நிழலில் இன்று நாம் நிற்கிறோமோ அந்த உன்னத அமெரிக்கர், (அடிமைகள்) விடுவிப்புப் பிரகடனத்தில் (Emancipation Proclamation) கையெழுத்திட்டார். தகுந்த நேரத்தில் வந்த அந்தச் சட்டம் நம்பிக்கையின் பேரொளியாய் அநீதியின் […]


நிறமற்றத் தலைவன்

April 9th, 2008 வகைகள்: சமூகம், குறும்படம், அமெரிக்கா, உலகம் | மருமொழிகள் இல்லை » |

“to tame the savageness of man and make gentle the life of this world” நாகரீகம் என்பதன் உண்மையான விளக்கம் இதுவாகத்தானிருக்கும். மனிதனின் மிருக இயல்பை அடக்கிவிட்டு இவ்வுலக வாழ்க்கையை இனிமையாக்குவது. மார்ட்டின் லூத்தர் கிங் சுட்டுக்கொல்லப்பட்டதை அறிவித்து ஜான் F. கென்னடி பேசிய பேச்சில் கிரேக்கர்களின் அந்தக் கோட்பாட்டை மேற்கோளிடுகிறார். இதற்காக நம்மை அற்பணித்துக்கொள்வோம் என்பது அவரின் வேண்டுகோள். “to tame the savageness of man and make gentle […]


அதிகறுப்புக் காந்தி

April 8th, 2008 வகைகள்: சமூகம், கட்டுரை, அமெரிக்கா, உலகம் | 5 மறுமொழிகள் » |

மார்ட்டின் லூத்தர் கிங் சுட்டுக் கொல்லப்பட்டு நாற்பது ஆண்டுகள் நிறைவுபெறுகின்றன. வெறும் நாற்பது ஆண்டுகளுக்கு முன்புவரைக்கும் இன்று உலகெங்கும் ஜனநாயகத்தையும் விடுதலையையும் சமத்துவத்தையும் துப்பாக்கி முனையில் பரப்பத் துடிக்கும் அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் ‘சட்டப்படி’ கீழானவர்களாக நடத்தப்பட்டு வந்தார்கள். வெறும் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு அங்கே ஒரு படித்து பட்டம் பெற்ற இளைஞன் தன் இனத்துக்குச் சம உரிமை கேட்டு சத்யாகிரகம் செய்து இறுதியில் ஒரு வெறியனின் தோட்டாவிற்கு பலியானான். வெறும் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு உடல்வலிவுள்ள இளைஞர்கள் […]


சிகாகோ படங்கள் – Bubble at the Millenium Park – 2

July 27th, 2007 வகைகள்: சிகாகோ, புகைப்படம் | 2 மறுமொழிகள் » |

உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


சிகாகோ படங்கள் – Bubble at the Millenium Park – 1

July 27th, 2007 வகைகள்: சிகாகோ, புகைப்படம் | 2 மறுமொழிகள் » |

உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


சிகாகோ படங்கள் – தெருக்கள் 3

July 27th, 2007 வகைகள்: சிகாகோ, புகைப்படம் | மருமொழிகள் இல்லை » |

உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


சிகாகோ படங்கள் – தெருக்கள் 2

July 27th, 2007 வகைகள்: சிகாகோ, புகைப்படம் | மருமொழிகள் இல்லை » |

உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


சிகாகோ படங்கள் – தெருக்கள் 1

July 27th, 2007 வகைகள்: சிகாகோ, புகைப்படம் | மருமொழிகள் இல்லை » |

உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.