ஆக்குபை அமெரிக்கா!

March 23rd, 2012 வகைகள்: செய்தி விமர்சனம், அமெரிக்கா, உலகம் | ஒரு மறுமொழி » |

முதலில் அமெரிக்கப் பொருளாதார அரிச்சுவடிகளிலிருந்து ஒரு பாலபாடம். 2007 கணக்கெடுப்பின்படி அமெரிக்காவின் சொத்தில் 85% பங்கு 20% பணக்காரர்களிடமும் மீதி 15% மிச்சமுள்ள 80% மக்களிடமும் உள்ளது. அதாவது அமெரிக்க மக்கள் தொகையில் 1% பேர் அமெரிக்காவின் 34.6% சொத்துக்களுக்கு உரிமையாளர்கள். மீதி 99%பேரில் சிலர் தற்போது ‘வால்’ தெருவுக்கு வந்துவிட்டிருக்கிறார்கள். அமெரிக்கப் பொருளாதாரத்தின் முக்கியமானக் குறியீடுகளில் ஒன்று நியூயார்க் நகரத்தில் அமைந்துள்ள வால் ஸ்ட்ரீட். இங்குதான் உலகப்புகழ் பெற்ற நியுயார்க் பங்கு வர்த்தக மையம் உள்ளது. […]


ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை

September 20th, 2011 வகைகள்: சமூகம், தொழில் நுட்பம், ஜப்பான், இந்தியா, இயற்கை, கட்டுரை, உலகம் | மருமொழிகள் இல்லை » |

கூடங்குளம் அணுமின்நிலையப் போராட்டம் குறித்த என் கட்டுரையை கீழ்கண்ட சுட்டிகளில் படிக்கலாம். ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை – 1 ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை – 2


பராக்! பராக்! பராக்! – பழசு

November 6th, 2008 வகைகள்: சமூகம், கட்டுரை, அமெரிக்கா, அலசல், உலகம் | 2 மறுமொழிகள் » |

(பராக் ஒபாமா உட்கட்சி தேர்தலில் வெற்றி பெற்றதும் எழுதிய கட்டுரை. எங்கேயும் வெளியிடாமல் இருந்தது. சேமிப்புக்காக இங்கே….) பராக்! பராக்! பராக்! 1856ல் அமெரிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பொன்றில் நீதிபதி ட்ரெட் ஸ்காட் கீழ்கண்டவாறு கூறுகிறார்,”கறுப்பினத்தவர் வெள்ளை இனத்தவர்கள் மதிக்கத்தக்க எந்த உரிமையும் இல்லாதவர்கள். வெள்ளை மனிதனின் இலாபத்திற்காக/வசதிக்காக நீக்ரோ நீதியோடும் சட்டபூர்வமாகவும் அடிமையாக்கப்படலாம்.” ஒரு நூற்றாண்டுக்குப் பின் 1965ல் அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. வாக்குரிமை பெற்று 43 ஆண்டுகளுக்குப் பின் கறுப்பினத்தவர் ஒருவர் அமெரிக்க […]


மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியரின் ‘எனக்கொரு கனவுண்டு’ எழுச்சி உரை

April 11th, 2008 வகைகள்: திண்ணை, மொழிபெயர்ப்பு, ஆளுமை, கட்டுரை, அமெரிக்கா, உலகம் | 11 மறுமொழிகள் » |

ஆகஸ்ட் 28, 1963 லிங்கன் நினவகம், வாஷிங்டன் டி.சி மார்ட்டின் லூத்தர் கிங் சுட்டுக்கொல்லப்பட்ட நாற்பதாண்டு நினைவு நேரத்தில் அந்த மாமனிதருக்குச் சமர்ப்பணம் நம் நாட்டின் வரலாற்றில் மாபெரும் விடுதலைப் போராட்டமாக இடம்பெறப்போகும் நிகழ்வொன்றில் உங்களோடு இணைவதில் மகிழ்ச்சி. நூறு(Five score) வருடங்களுக்கு முன்னர், இங்கு யாரின் நிழலில் இன்று நாம் நிற்கிறோமோ அந்த உன்னத அமெரிக்கர், (அடிமைகள்) விடுவிப்புப் பிரகடனத்தில் (Emancipation Proclamation) கையெழுத்திட்டார். தகுந்த நேரத்தில் வந்த அந்தச் சட்டம் நம்பிக்கையின் பேரொளியாய் அநீதியின் […]


நிறமற்றத் தலைவன்

April 9th, 2008 வகைகள்: சமூகம், குறும்படம், அமெரிக்கா, உலகம் | மருமொழிகள் இல்லை » |

“to tame the savageness of man and make gentle the life of this world” நாகரீகம் என்பதன் உண்மையான விளக்கம் இதுவாகத்தானிருக்கும். மனிதனின் மிருக இயல்பை அடக்கிவிட்டு இவ்வுலக வாழ்க்கையை இனிமையாக்குவது. மார்ட்டின் லூத்தர் கிங் சுட்டுக்கொல்லப்பட்டதை அறிவித்து ஜான் F. கென்னடி பேசிய பேச்சில் கிரேக்கர்களின் அந்தக் கோட்பாட்டை மேற்கோளிடுகிறார். இதற்காக நம்மை அற்பணித்துக்கொள்வோம் என்பது அவரின் வேண்டுகோள். “to tame the savageness of man and make gentle […]


அதிகறுப்புக் காந்தி

April 8th, 2008 வகைகள்: சமூகம், கட்டுரை, அமெரிக்கா, உலகம் | 5 மறுமொழிகள் » |

மார்ட்டின் லூத்தர் கிங் சுட்டுக் கொல்லப்பட்டு நாற்பது ஆண்டுகள் நிறைவுபெறுகின்றன. வெறும் நாற்பது ஆண்டுகளுக்கு முன்புவரைக்கும் இன்று உலகெங்கும் ஜனநாயகத்தையும் விடுதலையையும் சமத்துவத்தையும் துப்பாக்கி முனையில் பரப்பத் துடிக்கும் அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் ‘சட்டப்படி’ கீழானவர்களாக நடத்தப்பட்டு வந்தார்கள். வெறும் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு அங்கே ஒரு படித்து பட்டம் பெற்ற இளைஞன் தன் இனத்துக்குச் சம உரிமை கேட்டு சத்யாகிரகம் செய்து இறுதியில் ஒரு வெறியனின் தோட்டாவிற்கு பலியானான். வெறும் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு உடல்வலிவுள்ள இளைஞர்கள் […]


வித்தியாசமான விளம்பரம்

September 22nd, 2007 வகைகள்: உலகம் | 4 மறுமொழிகள் » |

இந்த விளம்பரம் இந்த வார டைம் பத்திரிகையில் வந்துள்ளது. தைவான் நாட்டை ஐக்கிய நாடுகள் சபையில் சேர்த்துக்கொள்ள வேண்டி இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.   Text End Political aparthied! A vital life should not be limited, a democratic nation not isolated. As one of the most demecrotic nations in Asia, Taiwan, the world’s 16th largest trading partner, should not be excluded from […]


3000

January 5th, 2007 வகைகள்: சமூகம், செய்தி விமர்சனம், பொது, புஷ், கேலிசித்திரம், அமெரிக்கா, உலகம் | ஒரு மறுமொழி » |

ஈராக் போரில் கொல்லப்பட்ட அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை 3000த்தை எட்டியது என்னவிலை அழிவே? 3000? ‘மாஸ்டர்’ ப்ளான்? அ’பாரம்’ தோட்டக்காரன். நன்றி : http://www.cagle.com/ உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


Sad’AM’ News

December 30th, 2006 வகைகள்: சதாம், சமூகம், செய்தி விமர்சனம், புஷ், கேலிசித்திரம், அமெரிக்கா, உலகம் | 10 மறுமொழிகள் » |

சுருக்க(கு)மான முடிவு நேற்று! இன்று! நாளை? ஒருவிரல் உன்னைச் சுட்டும்போது மற்ற மூன்றும்? முன்பு! பின்பு! தூக்கிலிடப்பட்டவர்கள் அமைதியான உலகம்? நீயும் நானுமா? விளையாடு. வேட்டையாடு. வேட்டைக்கார நண்பா? நன்றி: http://www.cagle.com/main.asp உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


(சிரி) நட்சத்திரம்

December 27th, 2006 வகைகள்: சமூகம், நட்சத்திரம், நிகழ்வு, நகைச்சுவை, புதுமை, இணையம், கலாய்த்தல், உலகம் | 44 மறுமொழிகள் » |

எரி நட்சத்திரம் தெரியும் அதென்ன சிரி நட்சத்திரம். கீழே படியுங்க கிச்சு கிச்சு வருதாங்க?.ஹலோ ஹவ் ஆர் யூங்க,என் பேரு A. மாந்தவன், ‘ந்’ சைலண்டுங்க. இணையத்துல வாழ்க்கை நடத்துற ஆட்களுல நானும் ஒருத்தருங்க. நிஜ வாழ்கையில எனக்கு நண்பர்கள் ரெம்ப கம்மிங்க. ஆனா எனக்கு தினம் தினம் மெயில் அனுப்புற இணைய நண்பர்கள் ஏராளமுங்க. இணையத்துல எனக்கு கெடச்ச அனுபவங்கள ஒங்களோட பகிர்ந்துக்கிறேனுங்க.முதல்ல நான் அமெரிக்காவுல தனியா இருந்தப்போ எங்கம்மா சொன்னாங்க,”ஒரு வேலக்காரப் பொண்ண வச்சுக்கடா. […]