அலையிலிருந்து கடலை அறிதல் – துறைவன்

February 21st, 2017 வகைகள்: சமூகம், இலக்கியம், கட்டுரை, அலசல் | மருமொழிகள் இல்லை » |

‘அரபிக்கடலில் பின்னோக்கி நீந்திக்கொண்டிருந்த இறால்மீன் கூட்டங்களின் சிவப்பு நிறத்தால் இடைப்பாடு கிராமத்தின் கிழக்கு மூலையிலிருந்து மேலெழும்பி வந்த சூரியன் பொன்னிறம் கொண்டது’ இப்படித் துவங்கும் தமிழ் நாவல் ஒன்றை வாசிப்பது ஒரு கனவைப்போலத்தான். ஒரு கடற்கரை கிராமத்தில் வளர்ந்த என்னைப்போன்ற பலருக்கும் பாடப் புத்தகத்தை தவிர்த்த எதையும் படிக்கும் வாய்ப்பு கிடைப்பது மிக அரிது. ஆனால் இன்று நெய்தல் நில படைப்புகள் நெய்தல் மக்களாலேயே எழுதப்பட்டு பல தீவிர இலக்கிய செயல்பாட்டாளர்களின் கவனத்தையும் பெறுவதென்பது கனவுகளின் ஈடேற்றமே. […]


சில கிறுக்கல்களும் கிறுக்குத்தனங்களும்.

December 10th, 2011 வகைகள்: சமூகம், ஆளுமை, இணையம், அலசல் | 2 மறுமொழிகள் » |

“சூப்பர் ஸ்டாருக்காக சர்வசமய கூட்டு பிரார்த்தனை @ மகாவதார் பாபாஜி கோயில், பரங்கிப்பேட்டை. 12 ஜீன், ஞாயிறு காலை பத்து மணி. அனைவரும் வருக!” என்று அறிவிக்கிறது ஒரு கூகிள் பஸ் செய்தி. அதன் கீழே ”தலைவாவாவாவாவா……” என்றொரு கூக்குரல் எழுதிவைக்கப்பட்டிருக்கிறது. எந்த மனநிலையில் இந்த செய்தியும் எதிர்வினையும் பதிவாகியுள்ளன? விழியோரக் கண்ணீருடனா? கனத்தமனத்துடனா? அலுவல் பரபரப்புகளின் மத்தியில் கவனமின்றியா? நண்பருடன் தொலைபேசிக்கொண்டா? எதையுமே நம்மால் யூகிக்க முடிவதில்லை. இணையத்துக்கு இரத்தமுமில்லை சதையுமில்லை. உலகம் முழுவதும் அது […]


ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை

November 11th, 2011 வகைகள்: சமூகம், செய்தி விமர்சனம், தொழில் நுட்பம், ஜப்பான், இந்தியா, இயற்கை, கட்டுரை, அறிவியல், அலசல் | 4 மறுமொழிகள் » |

மீண்டுமொருமுறை கூடங்குளம் கொதிநிலையை அடைந்துள்ளது. இந்தமுறை இன்னும் அதிக வேகம், இன்னும் அதிக வெப்பம். இது இறுதிகட்டவாய்ப்பு என்பதை மக்கள் உணரந்துள்ளனர். கேள்விப்பட்டவரை அனைத்து தென் தமிழக மாவட்டங்களிலிருந்தும் பல தரப்பு மக்களும் ஒன்றாய் நின்று தங்கள் எதிர் குரலை எழுப்பிக்கொண்டிருக்கின்றனர். வயிறு வற்றிப்போய் மனம் பசித்துக் கொண்டிருக்க 140 பேர் பத்தாம் நாளாகஉண்ணாவிரதத்தில் இருக்கின்றனர், சிலர் நீர் கூட அருந்தாமல். ஊடகங்களோ பட்டும் படாமல் இதை வெறும் ஒரு பத்தி செய்திக்குறிப்பாக்கிக்கொண்டிருக்கின்றன. பலரும் ஏதோ திடீரென […]


ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை

September 20th, 2011 வகைகள்: சமூகம், தொழில் நுட்பம், ஜப்பான், இந்தியா, இயற்கை, கட்டுரை, உலகம் | மருமொழிகள் இல்லை » |

கூடங்குளம் அணுமின்நிலையப் போராட்டம் குறித்த என் கட்டுரையை கீழ்கண்ட சுட்டிகளில் படிக்கலாம். ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை – 1 ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை – 2


’போலி’ பதிவர்களுக்கு எச்சரிக்கை + வேண்டுகோள்

August 29th, 2009 வகைகள்: சட்டம், சமூகம், தகவல், நிகழ்வு, பதிவர்வட்டம், வலைப்பதிவுகள் | 17 மறுமொழிகள் » |

தமிழ்மணம் துவங்கி 5 வருடங்கள் ஆகப்போகின்றது. தமிழ்மணக் குழுவுக்கும், துவங்கி உரு கொடுத்த காசிக்கும் வாழ்த்துக்கள். தமிழ் பதிவுலக பிரம்மாண்ட வளர்ச்சிக்கு தமிழ்மணம் ஒரு இன்றியமையாத காரணம். திரட்டிகள் வந்தபோது பதிவர்களுக்கிடையேயான ஊடாடல் அதிகமாகியது. இது பல வாய்ப்புகளையும் வசதிகளையும் தந்தபோதும் சில பூசல்களையும், சீர்கேடுகளையும் உருவாக்கியது. அப்படி உருவானதொன்றுதான் ’போலி’ பதிவைத் துவங்கி அவதூறுகளை பரப்பும் செயல். அப்படி துவங்கப்பட்ட போலி பதிவு ஒன்று மிகவும் பிரபலமாகி தமிழக ஊடகங்கள்வரைக்கும் பேசப்பட்டது. மிகவும் பிரபலமான அந்தப் […]


பராக்! பராக்! பராக்! – பழசு

November 6th, 2008 வகைகள்: சமூகம், கட்டுரை, அமெரிக்கா, அலசல், உலகம் | 2 மறுமொழிகள் » |

(பராக் ஒபாமா உட்கட்சி தேர்தலில் வெற்றி பெற்றதும் எழுதிய கட்டுரை. எங்கேயும் வெளியிடாமல் இருந்தது. சேமிப்புக்காக இங்கே….) பராக்! பராக்! பராக்! 1856ல் அமெரிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பொன்றில் நீதிபதி ட்ரெட் ஸ்காட் கீழ்கண்டவாறு கூறுகிறார்,”கறுப்பினத்தவர் வெள்ளை இனத்தவர்கள் மதிக்கத்தக்க எந்த உரிமையும் இல்லாதவர்கள். வெள்ளை மனிதனின் இலாபத்திற்காக/வசதிக்காக நீக்ரோ நீதியோடும் சட்டபூர்வமாகவும் அடிமையாக்கப்படலாம்.” ஒரு நூற்றாண்டுக்குப் பின் 1965ல் அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. வாக்குரிமை பெற்று 43 ஆண்டுகளுக்குப் பின் கறுப்பினத்தவர் ஒருவர் அமெரிக்க […]


எடுத்தேன் கொடுத்தேன் 06/24/2008

June 24th, 2008 வகைகள்: சமூகம், செய்தி விமர்சனம், திரை விமர்சனம், தேன், நிகழ்வு, அஞ்சலி, அமெரிக்கா, அலசல் | 15 மறுமொழிகள் » |

பாலபாரதியின் விடுபட்டவை போல ‘எடுத்தேன் கொடுத்தேன்’ அவ்வப்போது எழுதலாம் என எண்ணம். சில செய்திகளை சுருங்கச் சொல்லிச் செல்வதுதான் சிறப்பு. வலைப்பதிவுக்கு ஏற்றதொரு வடிவமும்கூட. எடுத்தேன் கொடுத்தேனை இப்படியும் வாசிக்கலாம் எடு தேன் கொடு தேன். தசாவதாரம் – II இரண்டாம் முறையாக தசாவதாரம் பார்த்தேன். இதுவரை தசாவதாரத்திற்கான மொத்த செலவு $200 க்கருகில். இரண்டாம் முறை படம் முன்பை விட நன்றாக இருந்தது. இப்போது கமலின் முகத்தை தவிர்த்து படத்தில் மற்ற அம்சங்களில் கவனம் செல்கிறது. […]


இடி அல்லது இடிப்போம்…: ஆதவன் தீட்சண்யா

April 21st, 2008 வகைகள்: சமூகம், இந்தியா | ஒரு மறுமொழி » |

இன்று கீற்று மின்னிதழிலிருந்து மின்னஞ்சலில் வந்த மடல் இடி அல்லது இடிப்போம்…: ஆதவன் தீட்சண்யா நாய் பன்னி ஆடு மாடு எருமை கழுதை கோழி கொக்கையெல்லாம் தீண்டுகிறவர்கள் எங்களை ஏன் தீண்டுவதில்லை என்று என்னிடம் புகாரேதும் இல்லை இனம் இனத்தோடு மட்டுமே சேர்வது இயல்பானதாகையால். நேரடியாக விசயத்திற்கு வருவோம். மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள உத்தப்புரம் கிராமத்தை அறுநூறு மீட்டர் நீளமும் இரண்டாள் உயரமும் கொண்ட குறுக்குச்சுவர் இரண்டாகப் பிரிக்கிறது. நம்புங்கள், சுவற்றுக்கு இரண்டு பக்கமும் வாழ்பவர்கள் […]


ஒகேனக்கல்லில் காந்தி

April 10th, 2008 வகைகள்: சமூகம், ஆன்மீகம் | ஒரு மறுமொழி » |

ஒகேனக்கல் குறித்து பல காரசாரமான விவாதங்கள் நடந்துகொண்டிருப்பதற்கிடையில் பதிவர் கார்த்திக் முருகன் காந்தீய வழி ஒன்றை முன்வைத்துள்ளார். கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்த்தால் அரசியல் சதிகளை முறியடிக்க பொதுமக்கள் இது போன்ற வழிகளைப் பின்பற்றலாம் என்றே தோன்றுகிறது. கேரளாவில் திருட்டை கண்டுபிடிக்கத் தன்னையே அடித்துக்கொண்ட ஆசிரியை நினைவுக்கு வருகிறார். உலகில் அன்பை போதித்து அதற்காக உயிரைவிட்ட உன்னதத் தலைவர்கள் அனைவரின் ஒரே உருவமாக இவர் தெரியவில்லையா? பழிக்குப் பழி, எதிர்ப்புக்கு எதிர்ப்பென்றில்லாமல் அகிம்சையின் வலிமையை உலகத்திற்குணத்திய மக்கள் […]


நிறமற்றத் தலைவன்

April 9th, 2008 வகைகள்: சமூகம், குறும்படம், அமெரிக்கா, உலகம் | மருமொழிகள் இல்லை » |

“to tame the savageness of man and make gentle the life of this world” நாகரீகம் என்பதன் உண்மையான விளக்கம் இதுவாகத்தானிருக்கும். மனிதனின் மிருக இயல்பை அடக்கிவிட்டு இவ்வுலக வாழ்க்கையை இனிமையாக்குவது. மார்ட்டின் லூத்தர் கிங் சுட்டுக்கொல்லப்பட்டதை அறிவித்து ஜான் F. கென்னடி பேசிய பேச்சில் கிரேக்கர்களின் அந்தக் கோட்பாட்டை மேற்கோளிடுகிறார். இதற்காக நம்மை அற்பணித்துக்கொள்வோம் என்பது அவரின் வேண்டுகோள். “to tame the savageness of man and make gentle […]