அறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து

February 21st, 2017 வகைகள்: கட்டுரை, கிறீத்துவம், அறிவியல், அலசல் | மருமொழிகள் இல்லை » |

கிறீத்துவத்தின் வரலாற்றை எழுதிய பால் ஜான்ஸன் அதை ஒரு சர்ச்சையிலிருந்து துவங்குகிறார். அவரது கணிப்பில் கி.பி 50க்கருகில் கூடிய ஜெருசலெம் சங்கம் (Council of Jerusalem1) முதல் அதிகாரபூர்வமான உலகளாவிய நோக்குகொண்ட கிறீத்துவம். அதில் ஜெருசலேமை மையமாகக் கொண்ட யூத கிறீத்துவர்களுக்கும் கிரேக்க பகுதிகளில் மதம் மாறியிருந்த ‘டயஸ்பரா’ கிறீத்துவர்களுக்குமிடையேயான சர்ச்சைக்கு தீர்வுகாணப்பட்டது. இதில் இயேசுவுக்குப்பின் கிறீத்துவத்தினை நிறுவி வளர்த்த இரு ஆளுமைகள் இராயப்பர் (Peter) மற்றும் சின்னப்பர் (Paul) நேரடியாக விவாதித்து, கலந்தாலோசித்து முடிவுகளை அடைந்தனர். […]


ஒரு கிறிஸ்துமஸ் கதை!

January 6th, 2011 வகைகள்: சிறுகதை, ஆன்மீகம், இயேசு, கடவுள், கதை, கிறீத்துவம் | 13 மறுமொழிகள் » |

மரியாளும் சூசையும் நீண்ட பயணத்தின் பின் பெத்லகேமுக்குள் நுழையும்போதே மிகவும் சோர்வுற்றிருந்தனர். பயணத்தில் ஆடைகள் அழுக்காகி கசங்கியிருந்தன. மரியாள் நிறைமாதக் கர்பிணியானதால் மிகவும் சோர்வுற்று தான் பயணித்து வந்த கழுதையின் மீதே படுத்திர்ந்தாள். பெத்லகேமில் பல்வேறு ஊர்களிலிருந்தும் யூதேயாவுக்கு வரி கட்ட வந்தவர்களின் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. இருவரும் ஒவ்வொரு விடுதியாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தனர். எங்கேயும் தங்க இடம் கிடைக்கவில்லை. கடைசியாக ஊரின் ஒதுக்குப்புறமிருந்த விடுதி ஒன்றிற்கு வந்து சேர்ந்தனர். சூசைக்கு அந்த விடுதியில் அறைகள் காலியாக இருந்ததைப் […]


டி மெலோ கதைகள் – 4

September 4th, 2010 வகைகள்: மதம், ஆன்மீகம், ஆளுமை, கடவுள், கதை, கிறீத்துவம் | 2 மறுமொழிகள் » |

 டி மெலோ கதைகள் – 3 கழுகுக் குஞ்சு  ஒரு விவசாயி ஒரு கழுகு முட்டையைக் கண்டெடுத்தார். கொண்டுவந்து அடைகாக்கும் கோழியின் கீழ் வைத்தார். கழுகுக் குஞ்சு முட்டையை உடைத்து வெளிவந்தது. தன் ‘சகோதர’ கோழிகளைப்போலவே அதுவும் வளர ஆரம்பித்தது. தரையில் புழுக்களைத் தின்றது, கொக்கரித்தது, சிறகை அடித்து சிறிது தூரம் பறந்து வீழ்ந்தது. வருடங்கள் கழிந்தன.  ஒரு நாள் வளர்ந்துவிட்ட அந்தக் கழுகுக் குஞ்சு வானத்தில் ஒரு பிரம்மாண்டமான பறவையை பார்த்தது. வியப்பில் அந்தக் கழுகுக் […]


டி மெலோ கதைகள் – 3

September 4th, 2010 வகைகள்: நிகழ்வு, மதம், ஆன்மீகம், கடவுள், கதை, கிறீத்துவம் | 3 மறுமொழிகள் » |

டி மெலோ கதைகள் – 2   வைரம்  சன்யாசி ஒரு ஊரின் எல்லையில் தங்க முடிவெடுத்து மரத்தடியில் உட்கார்ந்தார். ஊரிலிருந்து ஒருவன் ஓடி வந்தான். ‘வைரம் வைரம் அந்த வைரத்தைக் கொடு’ என்று ஓடி வந்து சன்னியாசியைக் கேட்டான்.  ‘எந்த வைரம்?’ என்றார் சன்னியாசி.  ‘நேற்று இரவில் என் கனவில் சிவன் வந்தார். வந்து உன் ஊரின் எல்லையில் ஒரு சன்னியாசி வந்து தங்குவான் அவனிடம் சென்று வைரத்தை பெற்றுக்கொள் எனச் சொன்னார்.’ என்றான் அவன்.  சன்னியாசி தன் […]


டி மெலோ கதைகள் – 2

September 3rd, 2010 வகைகள்: மதம், ஆன்மீகம், ஆளுமை, கடவுள், கதை, கிறீத்துவம் | 2 மறுமொழிகள் » |

 டி மெலோ கதைகள் – 1 வாத்து சூப் முல்லா நசுருதீனின் உறவினர் ஒருவர் அவரைக் காண வந்தார். வந்தவர் ஒரு வாத்தை பரிசாகத் தந்தார். வாத்து சமைக்கப்பட்டது. அருமையான விருந்தானது.  விரைவில் பல விருந்தினர்கள் முல்லாவின் வீட்டுக்கு வர ஆரம்பித்தனர். எல்லோரும் தன்னை வாத்து கொண்டுவந்தவரின் உறவினர் என்றனர். எல்லோருக்கும் அந்த வாத்தின் பொருட்டு விருந்தளிக்கப்படவேண்டும் என எதிர்பார்த்தனர்.முல்லாவும் இயன்றவரை பொறுமையாய் எல்லோருக்கும் விருந்தளித்தாராம்.  ஒரு நாள் ஒருவன் வந்து “நான் உனக்கு வாத்து தந்தவனின் […]


டி மெலோ கதைகள் – 1

September 2nd, 2010 வகைகள்: நிகழ்வு, ஆன்மீகம், ஆளுமை, கதை, கிறீத்துவம் | ஒரு மறுமொழி » |

ஊட்டி சந்திப்பில் பகிர்ந்து கொண்ட சில கதைகள். பயணி  ஒரு பயணி தன் மக்களிடம் திரும்பி வந்தான். அவர்கள் அமேசான் நதியின் வனப்பினை அறிந்துகொள்வதில் ஆர்வமாயிருந்தார்கள். தன் மனதை நிறைத்த வனப் பூக்களையும், வனத்தின் இரவொலிகளையும், காட்டு விலங்கினைக் கண்டபோது கொண்ட பயத்தையும், புரண்டோடும் காட்டாற்றில் நீந்தியதையும் அவனால் ஒரு போதும் முழுமையாக வார்த்தைகளால் வெளிப்படுத்த இயலாதே?  அவன் சொன்னான்”நீங்களே போய் பாருங்கள்” என்று. அவர்களுக்கு  வழிகாட்ட ஒரு வரைபடத்தை வரைந்து அவர்களுக்குத் தந்தான்.  எல்லோரும் அந்த […]


கனி’வான’மொழி!

December 24th, 2009 வகைகள்: பாடல், ஆன்மீகம், இசை, இயேசு, கவிதை | 6 மறுமொழிகள் » |

ஜெகத் கஸ்பாரின் முனைப்பில் உலகப்புகழ்பெற்ற சில கிறிஸ்துமஸ் பாடல்களுக்கு தமிழில் வரி எழுதி ’மார்கழியின் மடியில்’ எனும் பாடல் தொகுப்பொன்று வெளியாகியுள்ளது. அதில் Silent Nightன் மெட்டுக்கு கனிமொழி எழுதியுள்ள பாடல் வரிகள் கீழே. மார்கழியின் மடியிலே மாடடையும் குடிலிலே மானுடத்தின் மீட்பனாய் அன்னை மரியின் அணைப்பினிலே இதழில் புன்னகை பூத்திருக்க நிலவின் கதிர்போல கண்வளராய் அழகே. மார்கழியின் மடியிலே வானின் வெள்ளி அழைக்குதந்த அழைத்து வந்த ஞானியர் உன்னை வணங்கி நின்றார் காலமே உறைந்ததை மறந்து […]


என் தாய்மதம் என்ன?

April 25th, 2008 வகைகள்: மதம், ஆன்மீகம், இந்துமதம், கிறீத்துவம் | 86 மறுமொழிகள் » |

புதிதாக ஒரு பதம் கண்ணில் பட்டது. ‘தாய்மதம்’. இப்போது சில கிறீத்துவர்கள் மதம் மாறி இந்து தருமத்தை தழுவ ஆரம்பித்துள்ளனர். நிறைந்த ஆன்மீக, மனிதப் பண்புகளை மக்கள் பெற வேண்டி வாழ்த்துகிறேன். சீரிய ஆன்மீகத் தேடலின் வாயிலாக மக்கள் மதம் மாறுவது வரவேற்கத்தக்கதே. எனக்கு வருத்தமளிப்பது மதமாற்றம் அல்ல. ஆனால் பத்திரிகைகள் உட்பட பலரும் இவர்கள் தாய்மதத்துக்குத் திரும்பிவிட்டார்கள் எனச் சொல்வதுதான் தவறாகப்படுகிறது. ஒருவருக்கு எது தாய்மதம்? முதலில் அப்படி ஒன்று இருக்கிறதா? அப்படியென்றால் தாய்மொழியைப் போன்றதாய் […]


ஒகேனக்கல்லில் காந்தி

April 10th, 2008 வகைகள்: சமூகம், ஆன்மீகம் | ஒரு மறுமொழி » |

ஒகேனக்கல் குறித்து பல காரசாரமான விவாதங்கள் நடந்துகொண்டிருப்பதற்கிடையில் பதிவர் கார்த்திக் முருகன் காந்தீய வழி ஒன்றை முன்வைத்துள்ளார். கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்த்தால் அரசியல் சதிகளை முறியடிக்க பொதுமக்கள் இது போன்ற வழிகளைப் பின்பற்றலாம் என்றே தோன்றுகிறது. கேரளாவில் திருட்டை கண்டுபிடிக்கத் தன்னையே அடித்துக்கொண்ட ஆசிரியை நினைவுக்கு வருகிறார். உலகில் அன்பை போதித்து அதற்காக உயிரைவிட்ட உன்னதத் தலைவர்கள் அனைவரின் ஒரே உருவமாக இவர் தெரியவில்லையா? பழிக்குப் பழி, எதிர்ப்புக்கு எதிர்ப்பென்றில்லாமல் அகிம்சையின் வலிமையை உலகத்திற்குணத்திய மக்கள் […]


E=MC^2: ஆந்தனி டி மெலோ

April 4th, 2008 வகைகள்: மதம், ஆன்மீகம், ஆளுமை | 7 மறுமொழிகள் » |

KRS எழுதிய பதிவின் உந்துதலில் எழுதிய மூன்று பதிவுகளுமே ஓரளவுக்கு மதம், ஆன்மீகம், அறிவியல் குறித்து சில வருடங்களாக தனிமையிலும், நண்பர்களோடான விவாதங்களிலும் எழுந்த பல சிந்தனைகளின் தொகுப்பே. இதையே கோவி. கண்ணனுக்கான பின்னூட்ட பதிலாயும் சொல்லியிருந்தேன். ஆனால் ஒரு முக்கியமான தகவலைச் சொல்லாமல் விட்டுவிட்டேன். என்னுடைய ஆன்மீகப்பார்வையை திறந்து விட்டவர் ஆந்தனி டி மெலோ. அப்படி திறந்தபின்பு நான் பெரிய சன்னியாசியெல்லாம் ஆகிவிடவில்லையாயினும் அடிப்படையில் கேள்விகளைக் கேட்கவும் நமக்கான நம்பிக்கைகளை நாமே தேர்ந்தெடுக்கவுமான ஒரு சுதந்திரத்தை […]