மதமாற்றமா? மனமாற்றமா?

June 23rd, 2006 வகைகள்: ஆன்மீகம், இந்தியா, கடவுள், கிறீத்துவம் | 36 மறுமொழிகள் » |

மதமாற்றம் பற்றிய சில பதிவுகளை படிக்க நேர்ந்தது. சில பின்னூட்டவாதங்களையும் (பின்னூட்டம் + வாதம்) படிக்க நேர்ந்தது. இதைப் பற்றி சில எண்ணங்கள்.ஒரு குட்டிக்கதை. அழகான இளைஞியும் இளைஞனும் சந்தையிலிருந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். வழியில் வேறு யாருமில்லை. அந்தப் பெண் இளைஞனிடம் “எனக்குப் பயமாயிருக்கிறது.” என்றாள். இளைஞன் “என்ன பயம்?” என்றான். “நீ எனக்கு முத்தம் கொடுத்திருவியோன்னு பயமாயிருக்கு” என்றாள் பெண். “அதெப்படி முடியும் என் தலையில அரிசி மூட்ட இருக்குது, கையில ஆட்டை பிடிச்சுருக்கேன், இந்த […]


என்ன’டா’ வின்சி கோட்?

June 2nd, 2006 வகைகள்: சினிமா, ஆன்மீகம், கடவுள், அலசல், உலகம் | 34 மறுமொழிகள் » |

முதலில், பரவலாக இந்தியாவில் பல மாநிலங்களிலும் டா வின்சி கோட் திரைப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை கண்டிப்பாக கண்டிக்கிறேன். கருத்து சுதந்திரம் என்ற அடிப்படடயில் அல்ல, அப்படி ஒன்றும் பெரிய கருத்தை டா வின்சி கோட் சொல்லவில்லை, ஒரு நல்ல பொழுதுபோக்கு படத்தை மக்கள் பலர் பார்க்கமுடியாமல் போகுமே என்கிற வருத்தத்தில்தான். (அதையும் பாஸ்டன் பாலா வேண்டாமென்கிறார்). திருட்டு வி சி டி வியாபாரிகள் சங்கம் சார்பில் கலைஞருக்கு நன்றி. பல பதிவுகளில் இந்தத் தடைக்கான எதிர்வினைகளை காணமுடிந்தது. […]


கடவுள் 100 கி.மீ

March 31st, 2006 வகைகள்: ஆன்மீகம், கடவுள் | 26 மறுமொழிகள் » |

மதங்கள் கடவுளைக் காட்டும் ஒரு பெயர்ப் பலகையே. இதை ஒரு பின்னூட்டத்தில் எழுதியிருந்தேன். பதிவில் இடவேண்டும் எனத் தோன்றியது.ஒரு ஊருக்குப் போகிறோம், சென்னை என வைத்துக்கொள்வோம். வழியில் சென்னை 100 கி.மீ என ஒரு பெயர்ப்பலகை வருகிறது அதுவே சென்னை என்றால் எப்படி? மதங்களும் கடவுள் எனும் இலக்கை அடைய வழிகாட்டும் பெயர்ப் பலகைகளே. அதையே பிடித்துக்கொண்டு நிற்பது கடவுள் நோக்கிய நம் பயணம் முடிவு பெறாமல் போவதற்க்கு வழிவகுக்கும். மதங்களைத் தாண்டிய, தனிமனித கடவுள் அனுபவம்தான் […]


கடவுள் நம்பிக்கை

March 29th, 2006 வகைகள்: ஆன்மீகம், கடவுள் | 9 மறுமொழிகள் » |

நல்லடியாரின் பதிவு ஒன்றை வாசித்தேன் ஒரு கதை நியாபகம் வந்தது.http://athusari.blogspot.com/2006/03/blog-post_22.htmlவெள்ளம் வந்து ஒரு ஊரே அழிந்துபோனது. ஊரில் பலரும் இறந்துபோனார்கள். தப்பி ஓடிய சிலர் ஒரு குருவிடம் போய் சேர்ந்தார்கள்.ஒருவர் குருவிடம் கேட்டார்,”ஐயா, ஏன் கடவுள் என்க ஊரை அழிச்சார்?” .குரு சொன்னார்,”ஊரில் உள்ள கெட்டவங்களை அழிக்க”.“எங்க ஊரிலிருந்த நல்லவங்களையும் ஏன் கொன்னார்?.”குரு யோசித்துவிட்டு,”கெட்டவங்களுக்கெதிரா சாட்சி சொல்வதற்கு”.‘நம்பிக்கையுள்ளவன் எல்லாத்துக்கும் விடை சொல்வான்’.‘Gods Must be Crazy’ – அருமையான காமெடி படம். பலரும் பார்த்திருக்கலாம். படத்தின் கதை […]


ஒரு வழிப்போக்கனும் நம் நம்பிக்கைகளும்

March 28th, 2006 வகைகள்: ஆன்மீகம், கடவுள், கதை | 5 மறுமொழிகள் » |

இந்தப் பதிவை கொஞ்ச நாள் முன்னால் எழுதியிருந்தேன். மீண்டும் பதிக்கவேண்டும் எனத் தோன்றியது. மதம் மதம் மதம் என மதம் ‘பிடித்த’ மக்கள் சிலர் நம்மிடையே இருக்கிறார்கள் அவர்களுக்கான பதிவு என்றும் கொள்ளலாம். http://theyn.blogspot.com/2006/01/blog-post_25.html உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


இறை நேசனுக்கான பின்னூட்டம்

March 28th, 2006 வகைகள்: ஆன்மீகம், கடவுள் | 43 மறுமொழிகள் » |

கால்கரி சிவா எழுதிவரும் தொடரை எதிர்த்து வந்த விவாதங்கள் யோசிக்கவைக்கின்றன. அவர் தன் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள, சிலருக்கு நெஞ்சம் குறுகுறுக்கிறது. இறை நேசனின் கீழ்கண்ட பதிவுக்கு நான் இட்ட பின்னூட்டம். http://copymannan.blogspot.com/2006/03/blog-post_27.htmlஇறை நேசன் உங்கள் பதிவில் அடிப்படை ‘வாதம்’ தெரிகிறது. கால்கரி சிவ தன் அனுபவங்களை பதிக்கக்கூடாதென்பது எந்த ஊர் நியாயம்?அவர் அல்லாவையா குறைசொன்னார் அநியாயம் செய்பவரைத்தான் சொன்னார்? எல்லா இடங்களிலும் அயோக்கியர் இருக்கிறார்களென்பதை நம்புங்கள். உங்களுக்குத் தெரிந்த அயோக்கியர்களைப்ப்ற்றி நீங்கள் எழுதுங்கள் அவருக்குத் தெரிந்ததை அவர் […]


எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள்

February 10th, 2006 வகைகள்: பாடல், இந்துமதம், கடவுள் | 34 மறுமொழிகள் » |

ஒரு புகைவண்டி பயணத்தில் பார்வையில்லாத ஒருவர் பாடியபடியே நன்கொடை கேட்டுக்கொண்டு வந்தார். “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்”டி. எம். எஸ் குரலில் அருமையான ஒரு பாடல். பாடலின் இறுதியில் “கந்தனே உனை மறவேன்.. கந்தனே உனை மறவேன்..” என தூக்கிப்பாடுவார். மிக இனிமையான அர்த்தம் மிகுந்த பாடல். கந்தனே என்பதை நீக்கி கடவுளே எனப் பாடினால் எல்லா கடவுளர்களுக்கும் பொருந்திவிடும் இந்த வரிகள்.இதே தொகுப்பில் “அழகென்ற சொல்லுக்கு முருகா“, “ஓராறு முகமும்“, “சொல்லாத […]


ஒரு வழிப்போக்கனும் நம் நம்பிக்கைகளும்

January 25th, 2006 வகைகள்: மதம், ஆன்மீகம், கடவுள், கட்டுரை, கதை | 12 மறுமொழிகள் » |

உலகமே அறிந்திராத ஒரு கிராமம். மக்களெல்லாம் அவருண்டு அவர் வேலையுண்டுன்னு சந்தோஷமா வாழ்ந்து வந்தாங்க.அந்த கிராமத்துல ஒரு பெரியவர்,”இப்பிடி ஒலகமே தெரியாம இருந்தா எப்டி? இந்த ஊரவிட்டு வெளியேறி ஒலகம் எப்படி இருக்குன்னு பாத்துட்டு வரலாமே” அப்படீன்னு, ஊருல எல்லருட்டயும் சொல்லிட்டு கிளம்பிட்டார்யா கிளம்பிட்டாரு.அவரு போயி அஞ்சு வருஷமாச்சு, ஆறுவருஷமாச்சு, எட்டுவருஷமாச்சு. எல்லாருமே அவரப்பத்தி மறந்தே போயிட்டாங்க. ஒரு நாள் ஊரவிட்டு போன மனுஷன் திரும்பி வந்தாரு. ஊரே கூடி அவர வரவேற்குது. கிட்டத்தட்ட ஊர்த்திருவிழா மாதிரியே, […]


புனிதராவது எப்படி?

January 24th, 2006 வகைகள்: தகவல், ஆன்மீகம், கடவுள், கிறீத்துவம் | 4 மறுமொழிகள் » |

கத்தோலிக்க திருச்சபை, போப் தலைமையில் இயங்கிவருகிறது. இவர்களின் முக்கியமான நம்பிக்கைகளில் ‘புனிதர்களின் உறவு’ (Communion of Saints) ஒன்று. அதாவது, கடவுளுக்கு உகந்தவர்களாக வாழ்ந்து இறந்து போனவர்கள், மோட்சத்தில் நமக்காக கடவுளிடம் பரிந்து பேச இயன்றவர்கள், புனிதர்கள், என நம்பப்படுகிறார்கள்.எப்படி கத்தோலிக்க திருச்சபை ஒருவரை புனிதராக அங்கீகரிக்கிறது? 10ஆம் நூற்றாண்டுவரை பொதுமக்களே, தாங்கள் புனிதராகக்கருதும் ஒருவரை புனிதராக அறிவித்தனர். பொதுவாக, இயேசுவின் பேரில் கொல்லப்பட்டவர்களே (Martyrs) இதில் அடக்கம். அதன்பின் சில வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இது ஒழுங்கு படுத்தப்பட்டு […]