பராக்! பராக்! பராக்! – பழசு

November 6th, 2008 வகைகள்: சமூகம், கட்டுரை, அமெரிக்கா, அலசல், உலகம் | 2 மறுமொழிகள் » |

(பராக் ஒபாமா உட்கட்சி தேர்தலில் வெற்றி பெற்றதும் எழுதிய கட்டுரை. எங்கேயும் வெளியிடாமல் இருந்தது. சேமிப்புக்காக இங்கே….) பராக்! பராக்! பராக்! 1856ல் அமெரிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பொன்றில் நீதிபதி ட்ரெட் ஸ்காட் கீழ்கண்டவாறு கூறுகிறார்,”கறுப்பினத்தவர் வெள்ளை இனத்தவர்கள் மதிக்கத்தக்க எந்த உரிமையும் இல்லாதவர்கள். வெள்ளை மனிதனின் இலாபத்திற்காக/வசதிக்காக நீக்ரோ நீதியோடும் சட்டபூர்வமாகவும் அடிமையாக்கப்படலாம்.” ஒரு நூற்றாண்டுக்குப் பின் 1965ல் அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. வாக்குரிமை பெற்று 43 ஆண்டுகளுக்குப் பின் கறுப்பினத்தவர் ஒருவர் அமெரிக்க […]


உறைந்து நிற்கும் காலம்

May 19th, 2008 வகைகள்: சிகாகோ, கட்டுரை, அனுபவம், அமெரிக்கா | 7 மறுமொழிகள் » |

காலத்தை உறையச் செய்வது எப்படி? நேற்று சிகாகோவின் ஃபீல்ட் அருங்காட்சியகத்தில் இதற்கு விடைகிடைத்தது. 65மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏதோ ஒரு நிலையில் பூமியில் புதைந்த சூ(sue) எனும் டைனசோர், சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சாட்டையடிகளின் சத்தத்தினூடே எழுந்த உளிகளின் புலம்பலில் உருவாக்கப்பட்ட எகிப்திய கற்சவப்பெட்டிகள், சில நூறாண்டுகளுக்கு முன்புவரை நாகரீகங்களின் நிலைகள் என அங்கே காலம் உறை நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. 65 மில்லியன் ஆண்டுகள் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. பிரபஞ்சத்தின் வயது 4.55 பில்லியன் […]


Flippancy என்றால் என்ன? – ஓ பக்கங்களை முன்வைத்து

May 16th, 2008 வகைகள்: இணையம், கட்டுரை, அலசல் | 22 மறுமொழிகள் » |

வலையுலகின் மீதான ஊடகங்கள், ஊடகவியலாளர்களின் பார்வைகள் பொத்தம் பொதுவாக வலைப்பதிவுகளின் சில எதிர்மறைக் கூறுகளை முன்வைத்தே அமைந்துள்ளன என எண்ணத்தோன்றுகிறது. அரசு பதில், ஜூனியர் விகடன் ரிப்போர்ட் என வலைப்பதிவுகளில் சில நேரங்களில் பளிச்சென கண்ணுக்குத் தெரியும் கறைகளை மட்டுமே இவர்கள் கண்டுகொள்கிறார்கள். இப்படி இணையம் குறித்த எதிர்மறை கருத்துக்களை உருவாக்குவது மக்களிடம் ஒருவித ஆர்வத்தை தூண்டிவிடும் என்றே நினைக்கிறேன். என்னதான் எழுதுகிறார்கள் இணையத்தில் என மக்கள் தேட ஆரம்பிக்கலாம். ஞானி இந்த வார ஓ பக்கங்களில் […]


நாஞ்சில் நாடன் + சிவாஜி த பாஸ்

April 14th, 2008 வகைகள்: தகவல், கட்டுரை, அமெரிக்கா | 7 மறுமொழிகள் » |

‘வார்த்தை’ சிற்றிதழ் ஒரு வழியாய் (ஆகாய வழியாய்) வந்து சேர்ந்தது. என் வாசிப்பில் இணையத்திலல்லாது “செத்த மரத்தில் செதுக்கப்பட்ட” முதல் சிற்றிதழ் ‘வார்த்தை’. நண்பர்கள், பதிவர்கள் பி.கே.சிவகுமாருக்கும் ஹரன் பிரசன்னாவிற்கும் வார்த்தை குழுவுக்கும் வாழ்த்துகள். இதில் இன்னொரு ‘முதன்முதலாக’ என்னெவென்றால் நான் முதன் முதலாக வாசித்த நாஞ்சில் நாடன் கதை வார்த்தையில் வந்திருக்கும் ‘ஐயம் இட்டு உண்’ எனும் சிறுகதைதான். இந்த அவசர காலத்தில் நம் ‘ஐயம்’ இடுதல் எப்படி இருக்கிறது என்பதை எடைபோடும் ஒரு கதை. […]


மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியரின் ‘எனக்கொரு கனவுண்டு’ எழுச்சி உரை

April 11th, 2008 வகைகள்: திண்ணை, மொழிபெயர்ப்பு, ஆளுமை, கட்டுரை, அமெரிக்கா, உலகம் | 11 மறுமொழிகள் » |

ஆகஸ்ட் 28, 1963 லிங்கன் நினவகம், வாஷிங்டன் டி.சி மார்ட்டின் லூத்தர் கிங் சுட்டுக்கொல்லப்பட்ட நாற்பதாண்டு நினைவு நேரத்தில் அந்த மாமனிதருக்குச் சமர்ப்பணம் நம் நாட்டின் வரலாற்றில் மாபெரும் விடுதலைப் போராட்டமாக இடம்பெறப்போகும் நிகழ்வொன்றில் உங்களோடு இணைவதில் மகிழ்ச்சி. நூறு(Five score) வருடங்களுக்கு முன்னர், இங்கு யாரின் நிழலில் இன்று நாம் நிற்கிறோமோ அந்த உன்னத அமெரிக்கர், (அடிமைகள்) விடுவிப்புப் பிரகடனத்தில் (Emancipation Proclamation) கையெழுத்திட்டார். தகுந்த நேரத்தில் வந்த அந்தச் சட்டம் நம்பிக்கையின் பேரொளியாய் அநீதியின் […]


அதிகறுப்புக் காந்தி

April 8th, 2008 வகைகள்: சமூகம், கட்டுரை, அமெரிக்கா, உலகம் | 5 மறுமொழிகள் » |

மார்ட்டின் லூத்தர் கிங் சுட்டுக் கொல்லப்பட்டு நாற்பது ஆண்டுகள் நிறைவுபெறுகின்றன. வெறும் நாற்பது ஆண்டுகளுக்கு முன்புவரைக்கும் இன்று உலகெங்கும் ஜனநாயகத்தையும் விடுதலையையும் சமத்துவத்தையும் துப்பாக்கி முனையில் பரப்பத் துடிக்கும் அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் ‘சட்டப்படி’ கீழானவர்களாக நடத்தப்பட்டு வந்தார்கள். வெறும் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு அங்கே ஒரு படித்து பட்டம் பெற்ற இளைஞன் தன் இனத்துக்குச் சம உரிமை கேட்டு சத்யாகிரகம் செய்து இறுதியில் ஒரு வெறியனின் தோட்டாவிற்கு பலியானான். வெறும் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு உடல்வலிவுள்ள இளைஞர்கள் […]


E=MC^2 – சில பதில்கள்

March 21st, 2008 வகைகள்: மதம், ஆன்மீகம், இந்துமதம், கடவுள், கட்டுரை, கிறீத்துவம் | 5 மறுமொழிகள் » |

//‘கடவுள்’ என்பது simplified solution என்றால், ‘கடவுள் = கற்பனை’ என்பதும் simplified repurcussion தானே.// Sridhar Narayanan நிச்சயமாய் simplifiedதான். கற்பனை எனும் சொல்லுக்குள் நான் சுருக்கியிருக்கும் கருத்தாக்கங்கள் பல, கடவுள் எனும் சொல்லுக்குள் இருக்கும் கருத்தாக்கங்களைப் போலவே. கடவுள் கருத்தாக்கம்(concept) உலகின் உண்மைகளை எளிதாக்கிச் சொல்கிறது. it simplyfies the truths that otherwise might have been understood differently, matter-of-factly. இது தேவையற்றது என நான் சொல்லவேயில்லை. தேவையானது. ஆனால் கற்பனையில் […]


‘அறச்சீற்றம்’ குறித்த அறச்சீற்றம்

March 6th, 2008 வகைகள்: நகைச்சுவை, நையாண்டி, பதிவர்வட்டம், வலைப்பதிவுகள், கட்டுரை, கலாய்த்தல் | 20 மறுமொழிகள் » |

அறச்சீற்றம் எனும் வார்த்தையின் புகழ் மேலோங்கி வருகிறது. இது வெறும் வார்த்தையாக இல்லாமல் ஒரு இயற்காட்சியாகவும்(Phenomenon) இருப்பதால் இது குறித்த நுண்ணிய அலசல் ஒன்றின் தேவையை உணர்ந்து இந்தக் கட்டுரை எழுதபடுகிறது. அறச்சீற்றம் என்பது எழுத்தாளர்களுக்கு குறிப்பாக இலக்கியவாதிகளுக்கு எழும் கோபம். டீயில் கிடக்கும் ஈ துவங்கி, ஈ யில் நடித்த நயன் வரைக்கும் எழுத்தாளர்களின் கோபத்தை, சீற்றத்தை தூண்டுகிற விஷயங்கள் எண்ணிக்கையில் அடங்காது. அப்போது வாளினும் வலியதொரு ஆயுதத்தை எடுத்து அவர்கள் விளாச ஆரம்பிக்கையில் அதிலிருந்து […]


கத்தோலிக்கம் ஜெயமோகனுக்கு கடிதம்

February 28th, 2008 வகைகள்: மதம், வகைப்படுத்தாதவை, ஆன்மீகம், இந்துமதம், இயேசு, கட்டுரை, கிறீத்துவம் | 24 மறுமொழிகள் » |

தொடர்புள்ள ஜெ.மோ பதிவு கத்தோலிக்கமதம் பெண்ணுரிமை-ஒரு கடிதம்  அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு, பெண்ணியம் குறித்த உங்கள் பதிவுக்கு, பதிலுக்கு நன்றி. //பெண்ணுரிமை பேசப்படும் மேலைநாட்டில் கத்தோலிக்கமதம் இன்றும் பெண்ணடிமைக்கருத்துகளின் தொகையாகவே உள்ளது.// இது நீங்கள் முன்பு கேள்விபதில் ஒன்றில் எழுதியிருப்பது. கத்தோலிக்கம் (பைபிளில்) பெண்ணுக்கு இரண்டாம் இடம் தரப்பட்டுள்ளது எனும் உங்கள் பதிலில் எனக்கு ஒப்புதலே. ஆதாம் ஏவாளின் கதையிலிருந்தும் அதிலிருந்து பெறப்படும் பிந்தைய புரிதல்களிலிருந்தும் (1 Corinthians 11:9) இது தெளிவாகிறது. இதில் எந்த பிரச்சனையுமில்லை. ஆனால் கத்தோலிக்கம் […]


தரைவாழ் தாரகைகள்

February 11th, 2008 வகைகள்: சினிமா, கட்டுரை | 5 மறுமொழிகள் » |

ஆமிர் கானின் ‘தாரே ஜமீன் பர்’ இந்திய சினிமாவின் அதிமுக்கிய படைப்புகளில் ஒன்றாய் மிளிர்கிறது. குழந்தைகளுக்கான கேளிக்கைகளே அரிதான இந்தக் காலத்தில் குழந்தைகளை முன்வைத்து சிறியவர்கள் இரசிக்கும் வகையிலும் பெரியவர்கள் சிந்திக்கும் வகையிலும் ஒரு காவியத்தை தந்திருக்கிறார் ஆமிர். நாம் கேட்க மறந்த சில கேள்விகளை, பெறத் தவறிய அல்லது பெற்றும் மறந்துவிட்ட சில படிப்பினைகளை தாரே ஜமீன் பர் கோடிட்டுக் காட்டுகிறது. நம் கல்வி முறையை வசை பாடாதவர்கள் இருக்கவே முடியாது. படித்த அனைவருமே அதால் […]