சிரி சிரி கிறீஸ்மஸ்

December 14th, 2006 வகைகள்: சமூகம், செய்தி விமர்சனம், இயேசு, கேலிசித்திரம், அமெரிக்கா | 7 மறுமொழிகள் » |

வருத்தப்பட்டு பாரம் சுமப்போர் வால் நட்சத்திரமா? சேல்(Sale) நட்சத்திரமா? இரண்டு ராஜாக்களும் ஒரு வாடிக்கையாளரும் ஆயத்தமாயிருங்கள்! மீட்பு விற்பனைக்கு எல்லோரும் கொண்டாடுவோம் Away in a Parking lot… வாழ்(க்கை)த்து அட்டைகள் Tags: கிறிஸ்துமஸ், கார்ட்டூன், நகைச்சுவை, Consumerism, Christmas, Cartoonsதமிழ்ப்பதிவுகள் உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


2006ன் அரிய கண்டுபிடிப்புக்கள்/உருவாக்கங்கள்

November 7th, 2006 வகைகள்: செய்தி விமர்சனம், வியாபாரம், இணையம், அறிவியல் | 9 மறுமொழிகள் » |

இந்த வார டைம் 2006ன் அரிய கண்டுபிடிப்புக்கள்/உருவாக்கங்களை பட்டியலிட்டுள்ளது. காற்றிலிருந்து குடிநீர் பெறுவது முதல் காணாமல் போனவற்றை கண்டுபிடிப்பது வரை பல புதிய கருவிகளை கண்டுபிடித்திருக்கிறார்கள். பாயன்பபட்டுக்கு உதவும் பொருட்களையே இதில் பட்டியலிட்டுள்ளார்கள். என்னை கவர்ந்த சில கீழே.1. குடும்ப இஸ்திரிசூடான இஸ்திரி பெட்டியை துணிகளின்மேல் வைத்துவிட்டு போய் ராங் கால் அழைப்பை துண்டித்துவிட்டு வருமுன் அது எரிந்து போனதால் வரும் பயங்கர விளைவுகளை (நன்றி தமிழ் சினிமாக்கள்) இனி தவிர்க்கலாம். இந்த இஸ்திரி பெட்டியை துணிமேல் […]


மரணதண்டனைப் பதிவுகள்

October 6th, 2006 வகைகள்: சட்டம், சமூகம், செய்தி விமர்சனம், நிகழ்வு, இணையம், இந்தியா, கட்டுரை, உலகம் | 33 மறுமொழிகள் » |

இது ஒரு ஓசிப் பதிவென்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். தமிழ் பதிவர்கள் அவ்வப்போது சில உருப்படியான விஷயங்களை விவாதிக்கிறார்கள். தேன்கூடு தலைப்போ இல்லை ‘தேன்’ தரும் தலைப்போ அல்லாமல் பலரும் மரணதண்டனை பற்றிய கருத்துக்களை முகமது அப்சலுக்கு கிடைத்த தீர்ப்பை வைத்து விவாதித்திருக்கிறார்கள். அதுபற்றிய தொகுப்பு.ஜெயபாலின் கவிதை – மரணம் தண்டனையா?கொஞ்சம் லைட் ரீடிங் – எளிய வாசகத்திற்காக. பெரிய விஷ்யத்தை சின்னதா கவிதையில் சொல்கிறார். மரணம் தண்டனையாயாருக்குத் தண்டனை தவறு செய்தோர்க்காஅவனைச் சார்ந்தோர்க்காஅளிக்குஞ் சான்றோர்க்காசாகடிக்குஞ் சேவகர்க்கா அவர் […]


பாக்கிஸ்த்தானில் புஷ் பின்லாடன்

September 27th, 2006 வகைகள்: செய்தி விமர்சனம், டி.வி, புஷ், அமெரிக்கா, உலகம் | மருமொழிகள் இல்லை » |

பர்வேஷ் முஷ்ராஃப் ஜான் ஸ்டேவர்ட்டின் டெய்லி ஷோவில் சிறப்பு விருந்தினராய் நேற்று (9/26/2006) தோன்றினார். ஜான் ஸ்டிவர்ட்டின் டெய்லி ஷோ தினசரி செய்திகளை நகைச்சுவையோடு விவாதிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி. Fake செய்தி விவரணைகளும், செய்திப்படங்களும் சுவாரஸ்யமாகத் தருவார்கள். ஜார்ஜ் புஷ்தான் இவர்களின் ஹீரோ. ஹீரோன்னா பாட்ஷா ரஜினிமாதிரியில்ல இம்சை அரசன் வடிவேலுமாதிரி. பாக்கிஸ்தான் வழக்கப்படி (?) தேனீர் கொடுத்து வரவேற்றார் ஜான் ஸ்டிவர்ட். முதல் கேள்வியே பின் லாடன் எங்கே இருக்கிறாரரென்றுதான். அடுத்து பர்வேஷ் முஷ்ரஃபின் சுய […]


போப் Vs. இஸ்லாம்

September 20th, 2006 வகைகள்: செய்தி விமர்சனம், ஆன்மீகம், கிறீத்துவம், கேலிசித்திரம், உலகம் | 22 மறுமொழிகள் » |

மதம் பிடித்தவர்கள் நாவினால் சுட்டா வடு ஒரே குட்டை மன்னிக்க வேண்டுகிறேன் வழுக்கல்? அமைதி வேண்டி போர் இது, இல்லன்னா வாய்க்கு பூட்டு. எது வேணும்? உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


பாக்’கிஸ்’தானுக்கு நன்றி

August 12th, 2006 வகைகள்: செய்தி விமர்சனம், இந்தியா, உலகம் | 8 மறுமொழிகள் » |

என்நன்றி கொன்றார்க்கும் …. தீவிரவாதிகளைக் காட்டிக்கொடுத்த நம் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு நன்றி. பக்கத்துவீடுன்னா போட்டி, பொறாம, சாக்கடச் சண்ட, வேலிச் சண்ட எல்லாம் இருக்கத்தான் செய்யும் இருந்தாலும் …. மேலும் விபரங்களுக்கு அணுகவும் SK. உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


யரலவழல

July 28th, 2006 வகைகள்: செய்தி விமர்சனம், தமிழ், அலசல் | 9 மறுமொழிகள் » |

கஞ்சிக்கு வழியில்லாமல், ஆங்கிலத்தில் பெயர் வைத்து தமிழ் படம் எடுத்துக் கொண்டிருந்த தமிழ் படத் தயாரிப்பாளர்களுக்குக் காதில் தேன் கொண்டு ஊற்றியிருக்கிறார் முதல்வர். தமிழில் பெயர் வைக்கப்படும் படங்களுக்கு வரி விலக்காம்.தமிழ் வளர்ப்பில் எத்துணை முக்கியமான வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு இது என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டும். இதனால் அரசு இழக்கும் பணத்தைக் கொண்டு தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்புக்களை உருவாக்க முயன்றிருக்கலாம், அல்லது தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும்வண்ணமோ, வாசகர்களை ஊக்குவிக்கும் முயற்சியிலோ […]


தலையெழுத்தை மாற்றும் கையெழுத்து

July 27th, 2006 வகைகள்: செய்தி விமர்சனம், தகவல் | 20 மறுமொழிகள் » |

அமெரிக்காவில் வருடத்திற்கு 1.5 மில்லியன் (15,00,000) நோயாளிகளுக்கு தவறான மருந்து வழங்கப்படுகிறதாம். டாக்டர்களின் கையெழுத்தை மருந்துக்கடைக்காரர் தவறாகப்புரிந்து கொள்வதால் நடைபெறும் தவறுகளும் இதில் அடக்கம். இவர்களுக்கு மாற்று சிகிச்சை அளிக்க ஆகும் செலவு 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள். (நன்றி:டைம்ஸ்).இப்பொதெல்லாம் கணிணியில் ஏற்றி மின்னணு வடிவில் மருந்துச்சீட்டை நீங்கள் விரும்பிய கடைக்கு அனுப்பிவிடுகிறார்கள். நம்ம ஊரில் நிலமை எப்படியோ? வலைப்பதிவு டாக்டர்கள் யாரேனும் ஏன் டாக்டர்கள் ‘விக்சைக் கூட சுத்தி சுத்தி எழுதுகிறார்கள்’ (நன்றி:விவேக்) எனச் சொல்ல […]


மேலும் மேலும் தவறிழைக்கும் இஸ்ரேல்

July 26th, 2006 வகைகள்: செய்தி விமர்சனம், அமெரிக்கா, உலகம் | 9 மறுமொழிகள் » |

சற்று முன் வந்த செய்தி(ஜூலை 25 2006 9:20PM). இஸ்ரேலின் தாக்குதலில் இரண்டு ஐ.நா சபை பார்வையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மேலுமிருவர் காணாமல் போயிருக்கின்றனர்.நூற்றுக்கணக்கில் அப்பாவி மக்களையும் குழந்தைகளையும், புஷ் பாணியில்,தீவிரவாதிகளை கொல்கிறேன் பேர்வழி என்று கொன்று குவிக்கிறது,இஸ்ரேல். இப்போது ஐ.நா சபை அதிகாரிகள் கொல்லப்பட்டிருப்பது பிரச்சனையில் இஸ்ரேலின் பக்கத்தை கொஞ்சம் வலுவிழக்கச் செய்திருக்கிறது.கோஃபி ஆனன் இதை வேண்டுமென்றே செய்யப்பட்ட தாக்குதல் என்றிருக்கிறார்(Attack “apparently deliberate,” U.N. head says-CNN). இஸ்ரேல் இதை மறுத்துள்ளது (Israel’s U.S. envoy […]


ஓட்டுப்பெட்டி ஜனநாயகம்

February 7th, 2006 வகைகள்: செய்தி விமர்சனம், புஷ், கட்டுரை, அமெரிக்கா, உலகம் | 6 மறுமொழிகள் » |

அமெரிக்கா உலகை ஜனநாயகப் படுத்தும் அரிய(?) பணியை மேற்கொண்டுள்ளது. எல்லா நாடுகளும் ஜனநாயக நாடாகிவிட்டால் இவர்களை எதிர்க்க ஆளிருக்காது என எண்ணிக்கொண்டிருக்கிறது அமெரிக்கா. இன்றைய ஜனநாயகங்களில் ஒருசில நாடுகளைத்தவிர மற்றவை அமெரிக்காவின் கைப்பிள்ளைகளாய் இருப்பதும் ஒரு காரணம். தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்பதை ஜனநாயகத்தை உருவாக்கும் போராகமாற்றியமைத்துள்ளது அமெரிக்கா. ஜனநாயகம் மட்டுமே தனிமனித, சமுக விடுதலைக்கும் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்பது இவர்களின் பிரச்சாரம். சோரம்போன, ஜனநாயகத்தின்பேரில் மக்களை வெறும் ஓட்டுப் போடும் பொருட்களாக உபயோகித்துவிட்டு, அமெரிக்காவுக்கு ஜால்ராபோடும் […]