பிறவி – சிறுகதை

July 22nd, 2008 வகைகள்: சிறுகதை, கதை, அறிவியல் | 16 மறுமொழிகள் » |

எனக்கு மறுபிறவியில நம்பிக்கையிருந்ததில்ல. நான் ஒரு கிரிஸ்ட்டியன். இயேசு மேகம் புடைசூழ கூசும் ஒளிக்கீற்றுக்களின் நடுவாப்ல, சுத்தியும் குட்டிச் சிறகு முளைத்த பச்சிழம் குழந்தைகள் தங்கள் இயல்புகளை மீறிய வாத்தியங்களை வாசிச்சிட்டிருக்கையிலே மறுபடியும் வந்து நம்மையெல்லாம் இரட்சிப்பார் என்பதை முழுமையாக நம்பினேன். நான் ஒரு அறிவியல் ஆய்வாளன் கூட. நாமெல்லாம் இறந்துபோய் நம்முடைய உடல் அணுவணுவா சிதைஞ்சி இந்த பூமியில் இருக்கும் எண்ணற்ற அனுக்களோடு கலந்து நிலைத்து நிற்போம் என்கிற அறிவியல் after life கருத்தோடு ஒத்துப்போனாலும் […]


வசியம்

July 9th, 2008 வகைகள்: சிறுகதை, கதை, அறிவியல் | 12 மறுமொழிகள் » |

சரியாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 2003ல் என் முன்னோர்கள் இங்கே வந்திருக்காங்க. அப்போ இந்த இடத்துக்குப் பெயர் அமெரிக்கா. இந்தியா எனும் ஒரு நாட்டிலிருந்து வெறும் ஏரோப்ளேன் என்கிற பழம் ஊர்தி ஒன்றில் 24 மணி நேரங்கள் பயணித்து இந்த இடத்துக்கு வந்து செட்டில் ஆயிருக்காங்க. நம்பவே முடியல. நியூ யார்க் எனறழைக்கப்பட்ட பகுதி இப்போ ஏரியா 911 ஆயிடுச்சு. இந்தியாவில் என் பெற்றோர்கள் வாழ்ந்த தென்பகுதி அப்போ கன்னியாகுமரி. இப்போ கடலில் மூழ்கியது போக மீதமிருக்கும் […]


மின்னரட்டை – நிமிடக்கதை

March 5th, 2008 வகைகள்: சிறுகதை, கதை | 13 மறுமொழிகள் » |

Sent at 10:14 AM on Wednesday Sweet_T:  ஹி R_Mohan1982: ? Sweet_T: hi R_Mohan1982: a/s/l please Sweet_T: ??? R_Mohan1982: age/sex/location Sweet_T: any age/any time/anywhere R_Mohan1982: LOL. உங்களோட வயசு/பால்/வசிப்பிடம் என்ன Sweet_T: 20/பெண்/சிங்கை R_Mohan1982: சிங்கை? Sweet_T: சிங்கப்பூர் R_Mohan1982: ஓ…. பெயர் தெரிஞ்சிக்கலாமா? Sweet_T: மங்கை R_Mohan1982: மங்கப்பூர்? Sweet_T: not funny R_Mohan1982: வீட்ல தனியாவா? Sweet_T: இல்ல கூட தங்கப்பூர் இருக்கா R_Mohan1982: நல்ல […]


இரு தவளைகள்

March 4th, 2008 வகைகள்: கதை | 16 மறுமொழிகள் » |

இரு தவளைகள் சென்றுகொண்டிருந்த வழியில் இருந்த ஆழக்குழியில் விழுந்தன. இரண்டும் வெளியே வர கடுமையாக முயன்றுகொண்டிருந்தன. இதற்கிடையே பல தவளைகள் குழியின் மேல் கூடின. இருவரையும் பார்த்து ‘இதிலிருந்து வெளியே வர முடியாது? முயற்சியை கைவிடுங்கள் நிம்மதியாக செத்துவிடுங்கள்.’ எனக் கத்தின. முதல் தவளை இவர்கள் சொல்வதைக் கேட்டு கீழே விழுந்து இறந்தது. இரண்டாம் தவளை மேலும் மேலும் முயற்சி செய்து ஒருவழியாக மேலே வந்தது. அது மேலே வந்ததும் மேலிருந்த தவளைகளெல்லாம் ‘நாங்கள் சொன்னது உன் […]


எனக்கு 4 மனைவிகள்

March 4th, 2008 வகைகள்: ஆன்மீகம், கதை | 32 மறுமொழிகள் » |

பணக்காரன் ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர். அவனுக்கு நாலாமவள் மேல் கொள்ளை ஆசை. அவளை அலங்கரித்து அழகு பார்ப்பான், இனிய உணவளித்து உபசரிப்பான். அவளின் இச்சைகளை தீர்க்க இவன் தவறியதேயில்லை. மூன்றாமவள் மீதும் அவன் அன்பு வைத்திருந்தான். அவள் தன்னுடன் இருப்பதில் பெருமை கொண்டான். தன் நண்பர்களுக்கு அவளை அறிமுகப்படுத்துவதில், அவளைக் கண்டு அவர்கள் மலைப்பதில் பெருமை கொள்வான். ஆயினும் எப்போதும் அவள் யாருடனும் போய்விடக் கூடும் எனும் பயம் அவனிடம் இருந்துகொண்டேயிருந்தது. இரண்டாமவள் இவன்மீது பற்றுள்ளவளாயிருந்தாள். […]


சுஜாதாவிற்காக ஒரு சிறுகதை

February 29th, 2008 வகைகள்: சிறுகதை, கதை | 3 மறுமொழிகள் » |

தீவிர இலக்கிய வாசகன் முதல், சினிமா வசனத்திற்கு கைதட்டும் இரசிகன் வரை சுஜாதாவின் தாக்கம் பரவலானது. கற்றதும் பெற்றதும் வழியாக அவரை படித்து வியந்ததுண்டு. இப்போது அவரின் சிறுகதை தொகுப்புக்களை வாசித்து வருகிறேன். வலைப்பதிவுகளைப் பற்றி பெருமதிப்பில்லாத ஒருவருக்கு பதிவுலகம் இத்தனை வலைப்பூக்களைத் தூவும் என எதிர்பார்த்திருக்கமாட்டார். என் பங்குக்கு ஒரு கதை எழுத நினைத்தேன். ஒரு கருவும் கிடைத்தது. எழுதினேன். ஆனால் அதை அவர் பாணியிலேயே சொல்ல என்னால் முடியவில்லை. அதிஷ்டவசமாக பெனாத்தல் சுரேஷ் மாட்டினார். […]


மெசியா அல்லது மீட்பர்

February 15th, 2008 வகைகள்: சிறுகதை, கதை | 4 மறுமொழிகள் » |

பஸ் ஸ்டாண்டில் கலகலத்துக்கொண்டிருந்த கல்லூரிப் பெண்களின் கூட்டம் ஒன்றை பார்த்துக் கொண்டே நின்றிருந்தான். ‘நம்ம ஊர் பொண்ணுங்க எதுவுமில்ல, தைரியமா பாக்கலாம்.’ அவன் அந்தப் பெண்களை நோட்டம் விடாமலிருந்தால் அவன் கல்லூரி மாணவன் என்று அடையாளம் காண முடியாது. கிராமத்திலிருந்து கல்லூரிக்கு வரும் மாணவனுக்கான இலக்கணங்கள் அத்தனைக்கும் ஒத்துப் போனான். எண்ணை வைத்து படிய வாரிய தலை, மூன்று நான்கு நாட்களாய் அணியப்பட்ட மேட்சிங் ஆகாத ஆடைகள்(இன்றைக்கு நீல பேண்ட் பழுப்பு சட்டை), சவரம் செய்யப்படாத இளம் […]


மொழி

January 25th, 2008 வகைகள்: சிறுகதை, கதை | 4 மறுமொழிகள் » |

டெலிபோன் மணி அடித்தது. ‘நான்கு ரிங் போறதுக்குள்ளார போன எடுக்கணும்.’ என்பது சார்லஸ் வாத்தியாரின் வீட்டு சட்டம். பக்கத்து வீட்டு திண்ணையில் கதை பேசிக்கொண்டிருந்த சார்லஸ் வாத்தியார் மனைவி ஒட்டி வந்தார். “அலோ யாரு?” “நான் போத்தியாரு பேரன் மிக்கேல் பேசுதேன்.” “தம்பி சோமா(சுகமா) இருக்கியா? எங்கேந்து பேசுத?” “சிங்கப்பூர்லேந்து.” “லைன்ல இருக்கியா?” “அஞ்சு நிமிசம் கழிச்சு பண்றேன். அப்பாவக் கூப்பிடுதேளா?” “சரிம்மா.” சார்லஸ் வாத்தியார் வீட்டு தொலைபேசியில் அவர் வீட்டாருக்கு வருவதை விட அதிகமாய் பக்கத்து […]


உயிரின் நீட்சி (இன்னொரு நச் கதை)

December 17th, 2007 வகைகள்: சிறுகதை, கதை, அறிவியல் | 15 மறுமொழிகள் » |

முதல் நச் கதையில் நச் குறைவாக இருந்தது என்றும் ‘ஹாலிவுட் ஸ்டைலில்’ யோசிங்க என்றும் வந்த பின்னூட்டங்களின் விளைவாக இரண்டாவது நச் கதை. உயிரின் நீட்சி  ================================================  உலகின் கடைசி மனிதன் தாந்தான் என அவன் அறிந்து 7 வருடங்கள் ஆகிவிட்டன. செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட முதல் ஆள் ஆடம் ஸ்மித். மூன்று வருட மிஷன் அது. பல நாட்களுக்கு பூமியுடன் எந்தத் தொடர்புமில்லாதிருந்தது. அவன் பூமி திரும்புகையில் அவனுக்கு கிடைத்தது இங்கிருந்து அனுப்பப்பட்ட கடைசி செய்தி. “ஆடம்! […]


பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் – 1.

November 1st, 2007 வகைகள்: கதை | 15 மறுமொழிகள் » |

நண்பர் சிந்தாநதி துவக்கி மொத்தம் 12 பதிவர்கள் எழுதி முடித்த தொடர்கதை ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’வைப் போல பாக்கெட் நாவல் ஸ்டைலில் ஒரு க்ரைம் தொடர் ஒன்றை ஆரம்பித்துவைக்கலாம் என்று இந்த முயற்சி. அடுத்து யார் தொடர்கிறார் என்பதை கீழ் சென்று பார்க்கவும். பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் – அத்தியாயம் 1 ————————————————————- டப். சைலன்சர் மாட்டப்பட்ட துப்பாக்கி வெடித்தது. சுரேஷ் ஒரு தேர்ந்த கொலைகாரனுக்குரிய லாவகத்துடன் துப்பாக்கியை துடைத்துப் போட்டான். ‘ஷூட் அண்ட் த்ரோ’. நெற்றிப்பொட்டில் […]