தமிழ்மணம் துவங்கி 5 வருடங்கள் ஆகப்போகின்றது. தமிழ்மணக் குழுவுக்கும், துவங்கி உரு கொடுத்த காசிக்கும் வாழ்த்துக்கள். தமிழ் பதிவுலக பிரம்மாண்ட வளர்ச்சிக்கு தமிழ்மணம் ஒரு இன்றியமையாத காரணம். திரட்டிகள் வந்தபோது பதிவர்களுக்கிடையேயான ஊடாடல் அதிகமாகியது. இது பல வாய்ப்புகளையும் வசதிகளையும் தந்தபோதும் சில பூசல்களையும், சீர்கேடுகளையும் உருவாக்கியது. அப்படி உருவானதொன்றுதான் ’போலி’ பதிவைத் துவங்கி அவதூறுகளை பரப்பும் செயல். அப்படி துவங்கப்பட்ட போலி பதிவு ஒன்று மிகவும் பிரபலமாகி தமிழக ஊடகங்கள்வரைக்கும் பேசப்பட்டது. மிகவும் பிரபலமான அந்தப் [...]
