பேராலயம் – ஆங்கிலத்தில்: ரேமன்ட் கார்வெர் (Cathedral – by Raymond Carver)

December 30th, 2013 வகைகள்: சிறுகதை, மொழிபெயர்ப்பு, இலக்கியம் | ஒரு மறுமொழி » |

இந்தக் குருடன் இருக்கானே, என் மனைவியுடைய நெடுங்கால நண்பன், இண்ணைக்கு ராத்திரி எங்களோட தங்க வந்துகிட்டிருக்கான். அவன் மனைவி இறந்துட்டா. இறந்து போன அவன் மனைவியுடைய சொந்தக்காரங்கள கனெக்டிகட்ல பார்க்க வந்திருக்கான். அங்கிருந்து என் மனைவிக்கு தொலைபேசினான். உடனடி ஏற்பாடுகள். ரயிலில் வருவான், அஞ்சு மணிநேரப் பயணம், என் மனைவி கூப்பிடுறதுக்கு ரயில் நிலயத்துக்குப் போவா. பத்து வருஷத்துக்கு முன்பு சியாட்டல்ல அவன்கிட்ட இவ வேலை பார்க்கும்போது கடைசியா பார்த்தது. ஆனா ரெண்டுபேரும் தொடர்பிலிருந்து வந்தாங்க. ஒலிநாடாக்களில […]


ராஜாங்கம்

July 14th, 2012 வகைகள்: சிறுகதை | 2 மறுமொழிகள் » |

என் பழைய நினைவுகள் அழிக்கப்பட்டுவிட்டன என்றே தோன்றுகிறது. அவ்வப்போது துண்டு துண்டுகளாக, ஒரு சிறிய படத்தின் காட்சிகளாக அவை நினைவுக்கு வந்து போகின்றன. அவையெல்லாம் உண்மையா கற்பனையா என்று என்னால் வகுத்துக்கொள்ள முடிவதில்லை. அவைதான் கனவா இல்லை நான் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த நிஜம்தான் கனவா என பலமுறை தோன்றியதுண்டு. நான் தெருவில் அழுக்கடைந்து கிடக்கும் ஒரு பைத்தியமென்றும் இந்த வாழ்க்கையும் என் பழைய வாழ்க்கை குறித்த கனவுகளுமெல்லாமும் என் கற்பனையே என்றும் நினைப்பதுண்டு. நான் கல்லூரிக்கு வெளியில் […]


ஒரு கிறிஸ்துமஸ் கதை!

January 6th, 2011 வகைகள்: சிறுகதை, ஆன்மீகம், இயேசு, கடவுள், கதை, கிறீத்துவம் | 13 மறுமொழிகள் » |

மரியாளும் சூசையும் நீண்ட பயணத்தின் பின் பெத்லகேமுக்குள் நுழையும்போதே மிகவும் சோர்வுற்றிருந்தனர். பயணத்தில் ஆடைகள் அழுக்காகி கசங்கியிருந்தன. மரியாள் நிறைமாதக் கர்பிணியானதால் மிகவும் சோர்வுற்று தான் பயணித்து வந்த கழுதையின் மீதே படுத்திர்ந்தாள். பெத்லகேமில் பல்வேறு ஊர்களிலிருந்தும் யூதேயாவுக்கு வரி கட்ட வந்தவர்களின் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. இருவரும் ஒவ்வொரு விடுதியாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தனர். எங்கேயும் தங்க இடம் கிடைக்கவில்லை. கடைசியாக ஊரின் ஒதுக்குப்புறமிருந்த விடுதி ஒன்றிற்கு வந்து சேர்ந்தனர். சூசைக்கு அந்த விடுதியில் அறைகள் காலியாக இருந்ததைப் […]


துளசி

November 25th, 2010 வகைகள்: சிறுகதை | 5 மறுமொழிகள் » |

பின் முற்றத்தில் நன்றாக இருட்டியிருந்தது.  குளிர்ந்த காற்று அவன் முகத்தை வருடிச்சென்றது. கிழக்குச் சுவற்றிலிருந்த முல்லைச் செடியிலிருந்து மணம் கசிந்து காற்றில் பரவியிருந்தது. தென்னை மரங்கள் இரண்டும் தூக்கம் கலைந்தது புரளும் கிழவனைப்போல் முனகின. இலைகள் சலசலத்ததில் பூச்சிகளின் ரீங்காரம் கொஞ்சம் அடங்கியது. மீண்டும் கச்சேரி ஆரம்பிக்கையில் காற்று திரும்பியடித்தது. இப்போது மாடத்து துளசி வாசம் துல்லியமாகத் தெரிந்தது. செல்ஃபோனில் பேசிக் கொண்டிருந்த அவன் மூச்சை இழுத்து விட்டான். முகத்தில் ஒரே புன்னகையுடன் கிட்டத்தட்ட ஒரு மணி […]


விபத்து

September 9th, 2010 வகைகள்: சிறுகதை | 8 மறுமொழிகள் » |

70 கி.மி என டிஜிட்டலில் சொன்னது வேகம் காட்டும் கருவி. சாலையில் யாருமில்லை ஒரே ஒரு நாயைத் தவிர. இரண்டு கிலோமீட்டர்களுக்குள் ஒரு  வீட்டைக்கூட நான் காணவில்லை. அந்த நாய் சாலைக்குள் வரவா வேண்டாமா என ஆலோசித்துக்கொண்டிருந்தது. என் பைக்கின் சப்தம் அதை பயமுறுத்திவிடும் எனும் நம்பிக்கையில் க்ளட்சை பிடித்து ஆக்சிலேட்டரை திருப்பினேன்.  வ்ர்ர்ரூரூம் என்று அலறியது எஞ்சின். நாய் என்ன நினைத்ததோ தடாரெனக் குதித்து சாலைக்குள்வந்தது. மறுகணம் வண்டி சரிந்து சாலையில் தீப்பொபொறிபறக்க சறுக்கிக்கொண்டிருந்தது. நான்? […]


சிஸ்டர் கருமி

December 17th, 2008 வகைகள்: சிறுகதை, கதை | 6 மறுமொழிகள் » |

எனக்குத் தெரிந்து சகாய மேரி ஜெனிட்டா என அவளை யாரும் அழைத்ததேயில்லை. தாத்தா சகாயம், இறந்துபோன அத்தை மேரி. கடலோரக் கவிதை ரேகா ‘ஜெனிஃபர்’ என ‘பேருண்மைகளைப்’ பொருத்தி அவளுக்குப் பெயர் வைத்திருந்தார்கள். ஆனாலும் கருமி என்பதே அவள் பெயராய் நிலைத்தது. பிறந்ததும் அவள் கையிலெடுத்துச் சொன்னாள் பாட்டி ‘கருமி’. கண்களைச் சுருக்கி அவளைப் பார்த்து சிரித்தது குழந்தை. உங்கள் ஊரில் எப்படியோ தெரியவில்லை எங்கள் ஊரில் கறுப்பாயிருக்கும் பெண்களை கருமி என்பது வழக்கம். தெருவில் நான்கு […]


வாய்ப்பு – சிறுகதை

September 23rd, 2008 வகைகள்: சிறுகதை, கதை | 6 மறுமொழிகள் » |

வாய்ப்பு. சீனா குமார் ஒரு ‘இது’வாயிருப்பான் என எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ‘ஏந்தான் அவனுக்கு சென்னையில் வேலை வாங்கித் தந்தோமோ?’ என்றே நினைக்கவைத்துவிட்டான். என்னைச் சொல்லணும். போயும் போயும் அவனிடம் என் காதல் கதையைச் சொன்னேனே. என்னோடு கல்லூரியில் படித்தான். அறை நண்பன். சென்னை கோயம்பேட்டில் வீடெடுத்து தங்கியிருந்தோம். கன்னியாகுமரி மாவட்டத்தின் கிராமமொன்றிலிருந்து வந்திருந்த நான் எப்படி நாகர்கோவில்காரனோ அதுபொல சீனா குமார் கோயம்புத்தூர்காரன். ஆனால் என்னைப்போல அவனை ஒரு கிராமத்தான் என எளிதில் சொல்லிவிட முடியாது. ஆலையில் […]


பூனை

August 21st, 2008 வகைகள்: சிறுகதை, கதை | 6 மறுமொழிகள் » |

கடற்கரையில் மணலைப் பரப்பி லுங்கியால் முகம்வரை மூடிக்கொண்டு படுத்திருந்த மோட்சம் தட்டி எழுப்பப்பட்டான். “லே.. மோச்சம்.. ஏல.. எழும்பு. ஒம் பொண்டாட்டிக்கு வலி வந்தாச்சாம். ஒங்காத்தா கூப்பிடச் சொன்னாவு.” அதிகாலை மெல்லிருளில் எழுப்பியது யார் எனக் கூட பார்க்காமல் வீட்டை நோக்கி வேகமாய் நடந்தான் மோட்சம். மோட்சத்திற்கு கல்யாணமாகி மூன்று வருடங்கள் இருக்கும். கேரளாவில் முதலில் பார்த்த பெண் வெளுப்பாயிருந்தாள் என்பதாலும் மணவாளக் குறிச்சி திண்ணை ஜோசியக்காரர் ‘பொருத்தம் கச்சிதம்’ என்றதாலும் உள்ளூர் சம்பந்தங்களை விலக்கினான். ஒரு […]


தாவரக் கூழ்

July 30th, 2008 வகைகள்: சிறுகதை, கதை | 6 மறுமொழிகள் » |

“ஹே பிச். வி ஹாவ் சம்திங் நியூ.” தொலைபேசியில் உற்சாகம் கொப்பளித்தது. “என்னம்மா காலையிலேயே?” படுக்கையிலிருந்து எழுப்பப்பட்ட பிச்சிடம் உற்சாகம் கொப்பளிக்கவில்லை. “செக்மெண்ட் 733 ஒரு தெருவ தோண்டிட்டிருந்தோம் நியாபகமிருக்கா?” எதிர்முனையில் இன்னும் உற்சாகம் கொப்பளிக்க பேசிக்கொண்டிருப்பது அகழ்வாராய்ச்சி நிபுணள் ஸ்வேத் . “ம்ம்.. ஒரு உதவாக்கரை செக்மெண்ட் அது. உருப்படியா இதுவரைக்கும் ஏதாச்சும் கெடச்சதில்ல.” இப்போதும் பிச்சிடம் எதுவும் கொப்பளிக்கவில்லை. “பிச். அந்த உதவாக்கரை செக்மெண்ட் சீக்கிரமே உலகப்புகழ் செய்தியாகிடும்ணு நினைக்றேன்டா. யூ பெட்டர் கம் […]


பிறவி – சிறுகதை

July 22nd, 2008 வகைகள்: சிறுகதை, கதை, அறிவியல் | 16 மறுமொழிகள் » |

எனக்கு மறுபிறவியில நம்பிக்கையிருந்ததில்ல. நான் ஒரு கிரிஸ்ட்டியன். இயேசு மேகம் புடைசூழ கூசும் ஒளிக்கீற்றுக்களின் நடுவாப்ல, சுத்தியும் குட்டிச் சிறகு முளைத்த பச்சிழம் குழந்தைகள் தங்கள் இயல்புகளை மீறிய வாத்தியங்களை வாசிச்சிட்டிருக்கையிலே மறுபடியும் வந்து நம்மையெல்லாம் இரட்சிப்பார் என்பதை முழுமையாக நம்பினேன். நான் ஒரு அறிவியல் ஆய்வாளன் கூட. நாமெல்லாம் இறந்துபோய் நம்முடைய உடல் அணுவணுவா சிதைஞ்சி இந்த பூமியில் இருக்கும் எண்ணற்ற அனுக்களோடு கலந்து நிலைத்து நிற்போம் என்கிற அறிவியல் after life கருத்தோடு ஒத்துப்போனாலும் […]