வசியம்

July 9th, 2008 வகைகள்: சிறுகதை, கதை, அறிவியல் | 12 மறுமொழிகள் » |

சரியாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 2003ல் என் முன்னோர்கள் இங்கே வந்திருக்காங்க. அப்போ இந்த இடத்துக்குப் பெயர் அமெரிக்கா. இந்தியா எனும் ஒரு நாட்டிலிருந்து வெறும் ஏரோப்ளேன் என்கிற பழம் ஊர்தி ஒன்றில் 24 மணி நேரங்கள் பயணித்து இந்த இடத்துக்கு வந்து செட்டில் ஆயிருக்காங்க. நம்பவே முடியல. நியூ யார்க் எனறழைக்கப்பட்ட பகுதி இப்போ ஏரியா 911 ஆயிடுச்சு. இந்தியாவில் என் பெற்றோர்கள் வாழ்ந்த தென்பகுதி அப்போ கன்னியாகுமரி. இப்போ கடலில் மூழ்கியது போக மீதமிருக்கும் […]


மின்னரட்டை – நிமிடக்கதை

March 5th, 2008 வகைகள்: சிறுகதை, கதை | 13 மறுமொழிகள் » |

Sent at 10:14 AM on Wednesday Sweet_T:  ஹி R_Mohan1982: ? Sweet_T: hi R_Mohan1982: a/s/l please Sweet_T: ??? R_Mohan1982: age/sex/location Sweet_T: any age/any time/anywhere R_Mohan1982: LOL. உங்களோட வயசு/பால்/வசிப்பிடம் என்ன Sweet_T: 20/பெண்/சிங்கை R_Mohan1982: சிங்கை? Sweet_T: சிங்கப்பூர் R_Mohan1982: ஓ…. பெயர் தெரிஞ்சிக்கலாமா? Sweet_T: மங்கை R_Mohan1982: மங்கப்பூர்? Sweet_T: not funny R_Mohan1982: வீட்ல தனியாவா? Sweet_T: இல்ல கூட தங்கப்பூர் இருக்கா R_Mohan1982: நல்ல […]


சுஜாதாவிற்காக ஒரு சிறுகதை

February 29th, 2008 வகைகள்: சிறுகதை, கதை | 3 மறுமொழிகள் » |

தீவிர இலக்கிய வாசகன் முதல், சினிமா வசனத்திற்கு கைதட்டும் இரசிகன் வரை சுஜாதாவின் தாக்கம் பரவலானது. கற்றதும் பெற்றதும் வழியாக அவரை படித்து வியந்ததுண்டு. இப்போது அவரின் சிறுகதை தொகுப்புக்களை வாசித்து வருகிறேன். வலைப்பதிவுகளைப் பற்றி பெருமதிப்பில்லாத ஒருவருக்கு பதிவுலகம் இத்தனை வலைப்பூக்களைத் தூவும் என எதிர்பார்த்திருக்கமாட்டார். என் பங்குக்கு ஒரு கதை எழுத நினைத்தேன். ஒரு கருவும் கிடைத்தது. எழுதினேன். ஆனால் அதை அவர் பாணியிலேயே சொல்ல என்னால் முடியவில்லை. அதிஷ்டவசமாக பெனாத்தல் சுரேஷ் மாட்டினார். […]


மெசியா அல்லது மீட்பர்

February 15th, 2008 வகைகள்: சிறுகதை, கதை | 4 மறுமொழிகள் » |

பஸ் ஸ்டாண்டில் கலகலத்துக்கொண்டிருந்த கல்லூரிப் பெண்களின் கூட்டம் ஒன்றை பார்த்துக் கொண்டே நின்றிருந்தான். ‘நம்ம ஊர் பொண்ணுங்க எதுவுமில்ல, தைரியமா பாக்கலாம்.’ அவன் அந்தப் பெண்களை நோட்டம் விடாமலிருந்தால் அவன் கல்லூரி மாணவன் என்று அடையாளம் காண முடியாது. கிராமத்திலிருந்து கல்லூரிக்கு வரும் மாணவனுக்கான இலக்கணங்கள் அத்தனைக்கும் ஒத்துப் போனான். எண்ணை வைத்து படிய வாரிய தலை, மூன்று நான்கு நாட்களாய் அணியப்பட்ட மேட்சிங் ஆகாத ஆடைகள்(இன்றைக்கு நீல பேண்ட் பழுப்பு சட்டை), சவரம் செய்யப்படாத இளம் […]


மட்டுறுத்தல்

February 11th, 2008 வகைகள்: சமூகம், சிறுகதை | 3 மறுமொழிகள் » |

“ஹெலோ வா.. வா.” டி.வியை அணைத்துவிட்டு என்பக்கம் திரும்பினார் வாத்தியார். வாத்தியாருக்கு 40 வயதிருக்கும். நாகர்கோவில் காலேஜ் ப்ரொஃபெசர். ஊர்ல எவனுக்குமே ப்ரொபசர்னு சொல்லத் தெரியல. எடுத்துச் சொன்னா “அவரு பாடந்தானே எடுக்காரு?”ண்ணு சண்டைக்கு வருவாங்க. ‘விரிவுரையாளர்’ பரவலாக இன்னும் பல காலம் ஆகும். ஆகாமலே போலாம். “கதை கொண்டு வந்தியா.” கறுப்பு பட்டை ஃப்ரேம் கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டார். கையில் நோட்டு ஒன்றை கொடுத்தேன். “நான் ஒரே ஒரு கதைதானே கேட்டிருந்தேன்.” ஏழாம் வகுப்பில் […]


மொழி

January 25th, 2008 வகைகள்: சிறுகதை, கதை | 4 மறுமொழிகள் » |

டெலிபோன் மணி அடித்தது. ‘நான்கு ரிங் போறதுக்குள்ளார போன எடுக்கணும்.’ என்பது சார்லஸ் வாத்தியாரின் வீட்டு சட்டம். பக்கத்து வீட்டு திண்ணையில் கதை பேசிக்கொண்டிருந்த சார்லஸ் வாத்தியார் மனைவி ஒட்டி வந்தார். “அலோ யாரு?” “நான் போத்தியாரு பேரன் மிக்கேல் பேசுதேன்.” “தம்பி சோமா(சுகமா) இருக்கியா? எங்கேந்து பேசுத?” “சிங்கப்பூர்லேந்து.” “லைன்ல இருக்கியா?” “அஞ்சு நிமிசம் கழிச்சு பண்றேன். அப்பாவக் கூப்பிடுதேளா?” “சரிம்மா.” சார்லஸ் வாத்தியார் வீட்டு தொலைபேசியில் அவர் வீட்டாருக்கு வருவதை விட அதிகமாய் பக்கத்து […]


உயிரின் நீட்சி (இன்னொரு நச் கதை)

December 17th, 2007 வகைகள்: சிறுகதை, கதை, அறிவியல் | 15 மறுமொழிகள் » |

முதல் நச் கதையில் நச் குறைவாக இருந்தது என்றும் ‘ஹாலிவுட் ஸ்டைலில்’ யோசிங்க என்றும் வந்த பின்னூட்டங்களின் விளைவாக இரண்டாவது நச் கதை. உயிரின் நீட்சி  ================================================  உலகின் கடைசி மனிதன் தாந்தான் என அவன் அறிந்து 7 வருடங்கள் ஆகிவிட்டன. செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட முதல் ஆள் ஆடம் ஸ்மித். மூன்று வருட மிஷன் அது. பல நாட்களுக்கு பூமியுடன் எந்தத் தொடர்புமில்லாதிருந்தது. அவன் பூமி திரும்புகையில் அவனுக்கு கிடைத்தது இங்கிருந்து அனுப்பப்பட்ட கடைசி செய்தி. “ஆடம்! […]


கள்ளன் போலீஸ் (நம்மால முடிஞ்ச நச் கதை)

December 14th, 2007 வகைகள்: சிறுகதை | 18 மறுமொழிகள் » |

“சத்தம் போடாம அறைய விட்டு வெளிய வாங்க?” கையில் துப்பாக்கியுடன் பேங் மேனேஜரை மிரட்டி அழைத்தான் அந்த லுங்கி கட்டிய ஆள். ‘சிட்டிக்குள்ள இருக்கிற பேங்க்ல மாடு வாங்க லோன் கேட்டு வந்தப்பவே தோணியிருக்கணும்’ பேங்க் மேனேஜர் தன்னை நொந்துகொண்டே வெளியே வந்தார். கேஷ் கவுண்டரில் ஒருவனும் வங்கி வாசலில் ஒருவனுமாக துப்பாக்கியுடன் நின்றுகொண்டிருந்தனர். “லாக்கர்ல இருக்கிற நகை, வங்கியில இருக்கிற காசு அத்தனையும் இந்த வெள்ளப் பையில போட்டு மூட்ட கட்டுங்க.” மேனேஜர் ஜப்பானில் புதிதாய் […]


மைதாஸ் – திண்ணையில் வந்த சிறுகதை

July 30th, 2007 வகைகள்: சிறுகதை | 16 மறுமொழிகள் » |

மைக்கேல் தாஸ் பங்களாவிலிருந்து வெளிவந்தார் ஜேசுராஜன். ‘இங்கேர்ந்து ஆட்டொவுல போணும்னா நாப்பது அம்பது ரூவாயாது ஆவும்’ யோசித்தார். “தம்பி ரிக்சா வருமா?” “எங்க சார்?” “எக்மோர்.” “ஸ்டேசனுக்கா?” “ம்.” “வாங்க.” அதுவரை சைக்கிள் ரிக்சாவிலேயே ஏறியதில்லை ஜேசுராஜன். துருபிடித்த பாகங்களில் எண்ணை வைத்து தேய்த்ததில் தீபாவளி காலையில் ஜட்டியுடன் சுற்றும் சிறுவர்களைப் போல ரிக்சா முழுவதும் எண்ணை வழிந்துகொண்டிருந்தது. ரிக்சாவின் இருக்கையில் போடப்பட்டிருந்த ‘மெத்தை’யின் ஓட்டைவழியே தேங்காய் நார்த்தும்புகள் குத்திவிட்டதில் எரிச்சல் அதிகமானது. சில அரசு பேருந்துகளின் […]


மூத்திரக் குழி – சிறுகதை

June 28th, 2007 வகைகள்: சிறுகதை | 9 மறுமொழிகள் » |

மூத்திரக் குழி பத்தி எங்க ஊர்ல கொறஞ்சது முப்பது கதையாவது கேட்ருப்பேம். சின்னவயசுல பாம்படக் கெழவி சொன்ன கததான் மொதோமொதல்ல நாங் கேட்டது. வெத்தில போட்ட எச்சி தெறிக்க பாம்படக் கெழவி சொல்வா பாருங்க கத… சாய்ங்காலம் ஆத்தா தேடி வார வரைக்கும் அங்கனையே கெடப்போம். “அப்ப, கட்டபொம்மனுக்கு சமுத்திரம்னு ஒரு எதிரி இருந்தாம்.” கெழவி சொல்லும். “சமுத்ரம் ஒரு கள்ளன். ராவெல்லாம் போய் களவாண்டுட்டு காலையில காணாமப் போவாங். கட்டபொம்மனுக்கு சேதி போச்சு. சமுத்திரத்த புடிக்க […]