விண்ணில் தோன்றியது வால் நட்சத்திரம்மண்ணில் விண்ணவனே நட்சத்திரம் – மன்னன்உறங்க இடமில்லா சத்திரம்உலகில் இதுவன்றோ விசித்திரம்?மாட்டுதொழுவம் மாளிகையானதுஆடும் கோழியும் தோழர்களாயினர்கந்தல் ஆடைக்கு கண்ணியம் வந்ததுகொசுவின் பாடலே தேவகானமாம்.செவியுள்ளோர்க்கு விண் பாடல் கேட்டது‘விண்ணகத்தில் இறைவன் போற்றப் படுகமண்ணகத்தில் நல்மனத்தோர் அமைதிபெறுக’இதுவே இவர் பிறப்பின் தத்துவமானது.இடையர்களுக்குத்தான் கிடைத்தது முதல் செய்திஇறைவன் பிறந்துள்ளான் என்கிற புது செய்தி – இருள்விலகிடும் என்பதே அந்நற்செய்தி.ஏரோது அரசன் கொல்லத் தேடினான்ஏழைமக்கள் காணத்தேடினர்கிழக்கின் அரசர் மூவர் வந்தனர்கிடையில் குழந்தையை வணங்கிநின்றனர்.மாளிகை பலவும் உன் பேரில் இருக்குது [...]
