புதிதாக ஒரு பதம் கண்ணில் பட்டது. ‘தாய்மதம்’. இப்போது சில கிறீத்துவர்கள் மதம் மாறி இந்து தருமத்தை தழுவ ஆரம்பித்துள்ளனர். நிறைந்த ஆன்மீக, மனிதப் பண்புகளை மக்கள் பெற வேண்டி வாழ்த்துகிறேன். சீரிய ஆன்மீகத் தேடலின் வாயிலாக மக்கள் மதம் மாறுவது வரவேற்கத்தக்கதே. எனக்கு வருத்தமளிப்பது மதமாற்றம் அல்ல. ஆனால் பத்திரிகைகள் உட்பட பலரும் இவர்கள் தாய்மதத்துக்குத் திரும்பிவிட்டார்கள் எனச் சொல்வதுதான் தவறாகப்படுகிறது. ஒருவருக்கு எது தாய்மதம்? முதலில் அப்படி ஒன்று இருக்கிறதா? அப்படியென்றால் தாய்மொழியைப் போன்றதாய் [...]
