கனி’வான’மொழி!

December 24th, 2009 வகைகள்: பாடல், ஆன்மீகம், இசை, இயேசு, கவிதை | 6 மறுமொழிகள் » |

ஜெகத் கஸ்பாரின் முனைப்பில் உலகப்புகழ்பெற்ற சில கிறிஸ்துமஸ் பாடல்களுக்கு தமிழில் வரி எழுதி ’மார்கழியின் மடியில்’ எனும் பாடல் தொகுப்பொன்று வெளியாகியுள்ளது. அதில் Silent Nightன் மெட்டுக்கு கனிமொழி எழுதியுள்ள பாடல் வரிகள் கீழே. மார்கழியின் மடியிலே மாடடையும் குடிலிலே மானுடத்தின் மீட்பனாய் அன்னை மரியின் அணைப்பினிலே இதழில் புன்னகை பூத்திருக்க நிலவின் கதிர்போல கண்வளராய் அழகே. மார்கழியின் மடியிலே வானின் வெள்ளி அழைக்குதந்த அழைத்து வந்த ஞானியர் உன்னை வணங்கி நின்றார் காலமே உறைந்ததை மறந்து […]


’முதல் படிகள்’ – இசை வெளியீடு

November 9th, 2009 வகைகள்: பாடல், இசை | 9 மறுமொழிகள் » |

குளிர்காலம் வந்துவிட்டாலே ’போர்’ அடிக்க ஆரம்பித்துவிடுகிறது. பொழுதை போக்க ஏதேனும் புதிதாய் வாங்கி சோதித்துக்கொண்டேயிருப்பது வழக்கமாகிவிட்டது. இருக்கவே இருக்கிறது ’டீல்’ வலைமனைகள். இந்த வருடம் இதுவரை வாங்கியதில் முக்கியமானவை ஒரு துவக்க நிலை தொலைநோக்கி, மற்றும் M-Audio இசை தொகுக்கும் மென்பொருள்.  அதைக் கொண்டு உருவாக்கிய ஒரு இசைத்துண்டு. First Steps என ஒரு சில்லி பெயரை வைத்துள்ளேன். கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. First steps.wma First Steps by Cyril alex தமிழ்மணம் கருவிப்பட்டை பதிவுக்கு கீழே […]


தனித்திருக்கும் நேரம் – பாடல் வெளியீடு

April 9th, 2008 வகைகள்: பாடல், இசை, அறிவுப்பு | 5 மறுமொழிகள் » |

ஸ்ரீகாந்த் தேவா தேவராஜன் இசையமைப்பில் நான் எழுதிய பாடல் ஸ்ரீகாந்தின் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாட்ட மட்டும் வச்சு ஸ்ரீகாந்த்தின் திறமையை எடை போடாதீங்க. பிற பாடல்களையும் கேளுங்க. பாடல் பிறந்த கதை – முந்தையப் பதிவு


பாடல் பிறந்த கதை

January 18th, 2008 வகைகள்: நகைச்சுவை, பாடல், இசை, கவிதை | 14 மறுமொழிகள் » |

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவராஜனின் ‘பாடல்’ தொகுப்பை வெகுவாக இரசித்தேன். அப்போதே அவர் மின்னஞ்சலுக்கு ஒரு மடலைப் போட்டு வைத்தேன். ‘பாடல் எழுதி கிழிக்க எங்கிட்ட வாங்க..வாங்க ..வாங்க’. அப்புறமா என்னோட சொந்த கம்போசிஷன் ‘பூவானது மனம்’ அவருக்கு அனுப்பி வைத்தேன். பாராட்டினார். சில மாதங்கள் கழித்து track ENCLOSED என ஒரு மடல் வந்தது. கூடவே பாடலின் பின்னணி குறித்த ஒரு சில வார்த்தைகள். the song is about missing close friends in life. […]


பவிளம்போல் பவிளாதரம்போல்

December 11th, 2007 வகைகள்: பாடல், இசை | 5 மறுமொழிகள் » |

நாலைந்து நாட்களாக இந்த மலையாளப் பாடலைக் கேட்டுக்கொண்டேயிருக்கிறேன். கேட்கக் கேட்க இனிக்கும் ஒரு பாடல். யேசுதாஸ் அவர்களின் குரலில் ஜான்சன் என்பவர் இசையமைத்த ஒரு மெட்டு. இரண்டு முறையாவது கேட்டுப் பாருங்க உங்களுக்கும் பிடிக்கலாம். Get this widget | Track details | eSnips Social DNA படம்: நமக்குப் பார்க்கான் முந்திரி தோப்புகள்(1986) பவிளம் போல் பவிளாதரம் போல் பனிநீர் பொன் முகுளம் போல் புது சோபையிடும் நிற முந்திரி நின் முக சௌரபவமோ […]


பூவானது மனம்

May 23rd, 2007 வகைகள்: நகைச்சுவை, பதிவர்வட்டம், பாடல் | 34 மறுமொழிகள் » |

எச்சரிக்கை: இது ஒரு சுய தம்பட்டப் பதிவுஅன்புடன் இணையக் குழுமத்தின் கவிதைப் போட்டியில் இசைக்கவிதை என வித்தியாசமான ஒரு பிரிவு இருந்தது. கவிதைக்கு மெட்டமைத்து பாடி அனுப்பவேண்டும். இதுதாண்டா சேலஞ்னு மானசீக குரு இளையராஜாவ நெனச்சுகிட்டே ஒரு பாட்டப் போட்டு அனுப்பினேன். இரண்டாம் பரிசும் வாங்கிட்டேன். பாடலுக்கு நம்ம இன்னொரு மானசீக குரு ஏ.ஆர்.ரெஹ்மான நெனச்சிகிட்டே பின்னணி இசை சேர்த்து, மானசீக பாடகர் குரு எஸ்பிபிபோல குரல் உள்ள ஒருத்தர பாட வச்சிருந்தா கொஞ்சம் முன்னேற்றம் தெரிஞ்சிருக்கும். […]


ஒரு சிந்தசைசரும் மகாகவியும்

January 29th, 2007 வகைகள்: தமிழ், தமிழோவியம், தகவல், பாடல், இலக்கியம், அறிவிப்பு | 4 மறுமொழிகள் » |

பாரதி, இந்தப் பெயரே கவிதையாய் ஒலிக்கிறது. பாரதியின் வார்த்தை வார்ப்புகளை வாசிக்கும்போது இயல்பாய்த் தோன்றும் உணர்வுகளை தவிர்க்க இயலுவதில்லை.ஸ்ரீகாந்த் தேவராஜன் என்பவரின் இனிய இசையில் பாரதி பாடல்களை கேட்கக் கேட்க ஆனந்தமாயிருக்கிறது.எஸ்.பி. பி, சுஜாதா, ஸ்ரீனிவாஸ், ஹரீஷ் ராகவேந்த்ரா போன்றவர்களின் இனய குரலில் மெல்லிய மெட்டுக்கள் மனதை வருடுகின்றன. மெல்லிசையில், மேற்கும் கிழக்கும் சந்திக்கும் பாடல்களாய் இவை அமைந்துள்ளன. சின்னஞ்சிறு கிளியே – எஸ். பி. பாலசுப்ரமணியம்காக்கைச் சிறகினிலே – சுஜாதாமோகத்தை கொன்றுவிடு – ராஜா கோவிந்தராஜா […]


நரகாசுரன்

September 28th, 2006 வகைகள்: சினிமா, தகவல், பாடல், ஆளுமை, இந்துமதம், அலசல் | 3 மறுமொழிகள் » |

நரகாசுரன் என்று தலைப்பை தந்துவிட்டு என்ன எழுதுவதென்றே தெரியவில்லை. தலையை சொறிந்துகொண்டிருக்கும்போது தோன்றிய சில சிந்தனைத் துளிகள்.வரலாறு வல்லவர்களால் எழுதப் படுகிறது. வெற்றிக்களிப்பே வரலாற்றில் மேலோங்கி நிர்க்கிறது தோல்வியில் காயப்பட்டவர்களின் முனகல்கள் அவர்களின் நெரிக்கப்பட்ட தொண்டைகளிலேயே நின்றுபோகின்றன.விடாது கறுப்பு தன் பதிவொன்றில் நரகாசுரனின் கதை/வரலாறுபற்றிய மாற்று செய்தி ஒன்றை தந்திருக்கிறார்.இடைக்குறிப்பு: விடாது கறுப்பிவின் பதிவுகளில் தனிமனித/இன எதிர்ப்புகளை நீக்கிவிட்டால் சில நல்ல தகவல்கள் இருக்கின்றன. அவரை ஒதுக்கிவிட்டவர்கள் மீண்டும் படிக்கவேண்டும், நேர் அல்லது எதிர்வினைகள் ஆற்றவேண்டும் என […]


தீட்டு

September 11th, 2006 வகைகள்: சமூகம், பாடல், இந்தியா, கவிதை | 10 மறுமொழிகள் » |

திரு அவகளின் ‘மாடு தீண்டலாம் ஆடு தீண்டலாம்’ பதிவில் பா(சா)டல் ஒன்றை பதித்திருக்கிறார். பாடல் வரிகள் கீழே.மாடு தீண்டலாம் உங்கள ஆடு தீண்டலாம் – நாங்கமனுசன் மட்டும் தீண்டக்கூடாதா?நாடு என்பதா இதை நரகமென்பதா? – இங்கேசேரியெல்லாம் சிறைகளானதே.கோட்டை கட்டினோம் கோயில் மேளம் கொட்டினோம் – சவக்குழிகள் கூட நாங்க வெட்டினோம்கோட்டைவிட்டும் கோயில் விட்டும் தூர நிற்கிறோம் -புதைக்கும்சுடுகாடும் இல்ல நாங்க தவிக்கிறோம்பாரதத்தாய் மேனியிலே பாதி உடல் சீழ்பிடித்தால்மீதி உடல் நோயில்லாமல் வாழுமோ? – இந்தஜாதிபேதம் எந்த நாளில் […]


காலையில் கேட்டது

May 26th, 2006 வகைகள்: பாடல் | 14 மறுமொழிகள் » |

காலையில் எழுந்ததும் க்ரியேட்டிவ் நொமாடில், (நமது MP3 ப்ளேயர்) ‘Play any track’ என சொடுக்கினேன்.‘மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழக் கூடுமோ….’ பாலு குரல் கொடுத்தார். அதுக்கென்னாங்கறீங்களா? இன்று என் திருமண நாள்.அடுத்து Phil Collins வந்தார்… ‘You always have to hear both sides of the story…’ எதுக்கு சொல்றாருன்னு புரிந்தது.Garfunkal குரல் கொடுத்த ‘Bridge over troubled water’ அடுத்தபாடல்.காலையிலேயே அருமையான அனுபவம். இதுக்கு அடுத்ததா பல குத்து வெட்டு […]