மணிகண்டன் கேள்விகளுக்கு என் பதில்

February 14th, 2007 வகைகள்: நகைச்சுவை, நையாண்டி, விளையாட்டு, கலாய்த்தல் | 20 மறுமொழிகள் » |

மணிகண்டன் கிரிக்கட் கேள்விகளக் கேட்டு ஒரு பதிவு போட்டிருக்கார்…பின்னூட்டமாய் நான் அளித்த பதில்கள்.எல்லாமே சரியான விடைகள்.1. டெஸ்ட் போட்டிகளில் முதல் சதம் அடித்த வீரர் யார்?அந்த மேட்சின் மேன் ஆஃப் த மாட்ச் 2. முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி எந்த நாடுகளுக்கிடையே நடைபெற்றது?ஜெயிச்ச டீமுக்கும் இந்தியாவுக்கும் அல்லதுஅமிர்கான் டீமுக்கும் ஆங்கிலேயர் டீமுக்கும் 3. எத்தனை விதமான முறைகளில் ஒரு பேட்ஸ்மெனை அவுட்டாக்க முடியும்?ஒரே வழிதான் அவர விளையாட வைக்கணும். விளையாடாத பேட்ஸ்மேன் அவுட் ஆக மாட்டார் […]


ஸ்ரீசாந்த் அடிக்காத சிக்சர்

February 11th, 2007 வகைகள்: நகைச்சுவை, போட்டி, விளையாட்டு, இந்தியா, அலசல் | 30 மறுமொழிகள் » |

சரியாக இரண்டரை ஆண்டுகளுக்குப்பின் ஒரு கிரிக்கட் போட்டியை முழுதாக நேற்று பார்த்தேன். 50″ ப்ளாஸ்மா டிவியிலும் இந்திய க்ரிக்கட் பழையமாதிரிதான் தெரிந்தது. இப்படி ஒரு மேட்ச்சை தோற்பது நம்ம மக்களுக்குத்தான் சாத்தியம். கமண்ட்ரி மட்டும் இல்லாமல் போயிருந்தால் மிட் நைட் மசாலாவுக்கு மாறியிருப்பொம். அதுவும் சிவராமகிரிஷ்ணன், பந்தை சுழற்றுவதைவிட நாக்கை நன்றாகவே சுழற்றுகிறார்.இரண்டு ஓவர்களே இருக்கும் நிலையில் ஒரு கமெண்ட் விட்டார். “இனி (விளையாட்டின்) எல்லா முடிவுகளும் சாத்தியம். 1. இலங்கை ஜெயிப்பது 2. இந்தியா ஜெயிப்பது. […]


போக்கர் ஆடுவது எப்படி?

November 25th, 2006 வகைகள்: சினிமா, பொது, விளையாட்டு | 17 மறுமொழிகள் » |

கசினோ ராயேல் பார்த்துவந்த பாதிப்பில் எழுதும் பதிவு இது. படம் அசத்தலாக உள்ளது. தீவிர பாண்ட் ரசிகர்களை படம் ஏமாற்றலாம்(?) ஆனால் பொதுவாக நல்ல சண்டை படங்களை விரும்புவர்களுக்கு விருந்துதான். எப்போதும் சாதுவாய், ரீஜண்ட்டாய் நடந்துகொள்ளும் பாண்ட் இந்தப்படத்தில் பேட்டை தாதாவாட்டம் குமுறுகிறார். லேசர் முதல் ராக்கெட் லாஞ்சர்கள் சகிதம் உள்ளடக்கிய கார்களில்லை, உலகை ஆட்கொள்ள விரும்பும் வில்லனில்லை. உரையாடல்களில்கூட பழைய பாண்ட்தனம் இல்லை. பாண்ட் பற்றிய உங்கள் முன் அபிப்பிராயங்களையெல்லாம் தகர்த்தெறியும் படம் ‘காசினோ ராயேல்’. […]


இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கட்

September 16th, 2006 வகைகள்: விளையாட்டு | 8 மறுமொழிகள் » |

நள்ளிரவைத் தாண்டி விடியலுமில்லாமல் இரவுமில்லாமல் நரிகளோடு நரிகளாக விழித்திருந்து மேட்ச் பார்த்துக்கொண்டிருக்கிறோம். காலியான பியர் புட்டிகளின் எண்ணிக்கை கடந்துபோன ஓவர்களின் எண்ணிக்கைகைகளை சமன் செய்துள்ளது.மணி 2:16 அதிகாலை. (அதி அதி காலை)11 ஓவர்களுக்குப்பின் ஆஸ்த்ரேலியா 67 ரன்கள் எடுத்துள்ளது 1 விக்கட் இழப்பு.ஜாக்ஸ் அவுட் ஆக பாண்டிங் களத்தில் இறங்கியுள்ளார். உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


ஒருநாள் கழிந்தது.

September 13th, 2006 வகைகள்: தகவல், புதுமை, விளையாட்டு, இணையம், அலசல் | 9 மறுமொழிகள் » |

மாங்கு மாங்குன்னு ப்ளாக் எழுதியும் பொழுது போகலியா? கீழேயுள்ள சுட்டிகளைச் சொடுக்குங்க. ‘பண்ணி’யஸ்ட் விளம்பரங்கள். வாங்கும்போது குறைந்தபட்சம் விளம்பரத்த நெனச்சாவது சிரிக்கலாம். “The Product was crappy, but the ad was funny as hell”. தூசி படர்ந்திருந்த காரின்மேல் உங்க பேரை எழுதியிருக்கீங்களா? _____ உன்னை காதலிக்கிறேன் என பொறித்திருக்கிறீர்களா? குறைந்த பட்சம் ஒரு கோடாவது கிழித்திருக்கிறீர்களா? இவர் என்ன செய்திருக்கிறார் பாருங்க… லிட்டில் ஜானின் சொந்தக்காரங்கள மாடலா வச்சு சில படங்கள் எடுத்திருக்கார் […]


அறிவிருக்கா?

June 10th, 2006 வகைகள்: விளையாட்டு | 13 மறுமொழிகள் » |

பொதுவாக பள்ளி கல்லூரியில் விளையாட்டுகளில் ஈடுபாடுள்ளவர்கள் படிப்பில் சிறப்பதில்லை. பல நேரங்களில் ஆசிரியர்கள் இவர்களை சிறுமைப் படுத்துவதை பார்க்கலாம். ஏனோ ஸ்போர்ட்ஸ் என்றால் மூளைக்கு வேலைஇல்லை எனும் நினைப்பே இதற்கு காரணம். உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை பார்த்துக்கொண்டிருக்கும்போது ஒரு வினாடிக்கும் மிகக்குறைவான மணித்துளியில் எத்தனை தகவல்களை ஆராய்ந்து இவர்கள் முடிவுகளை எடுக்கவேண்டியுள்ளது என எண்ணத்தோன்றுகிறது. இப்படி அதிவேகமுடிவுகளை எடுக்கும் இவர்களின் மூளை எவ்வளவு கூர்மையானதயிருக்கும்? நாம் ஏனோ படிப்பறிவுதான் பெரியது என நினைக்கிறோம். ஈக்குயேடர் போலந்தை 2-0 […]


குளிர்கால ஒலிம்பிக்ஸ் – கண்ணோட்டம்

February 14th, 2006 வகைகள்: தகவல், பனிக்காலம், விளையாட்டு, கட்டுரை, உலகம் | 10 மறுமொழிகள் » |

2006-குளிர்கால ஒலிம்பிக்ஸ்(Winter Olympics) இத்தாலியில் டொரினோ நகரில் நடைபெற்று வருகின்றன. உறைந்த பனியில் விளையாடப்படும் விளையாட்டுகளுக்கான ஒலிம்பிக்ஸ். இதில் சில ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா, ரஷ்யா உட்படி சில நாடுகளே பங்கேற்கின்றன. குளிர்கால ஒலிம்பிக்ஸில் விளையாடப்படும் சில விளையாட்டுக்கள்பற்றிய விவரம் கீழே. பையாத்லான்(Biathlon) பனியில் ஸ்கீ(Ski – கால்களில் பட்டைகளை மாட்டிக்கொண்டு சறுக்குவது ) செய்தபடியே குறிப்பிட்ட இலக்குகளை(Target) துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துவது. வடக்கு ஐரோப்பிய போர் முறைகளிலிருந்து உருவான விளையாட்டு. பெண்கள் 7.5 கிலோ […]