ஒரு கிறிஸ்துமஸ் கதை!

January 6th, 2011 வகைகள்: சிறுகதை, ஆன்மீகம், இயேசு, கடவுள், கதை, கிறீத்துவம் | 13 மறுமொழிகள் » |

மரியாளும் சூசையும் நீண்ட பயணத்தின் பின் பெத்லகேமுக்குள் நுழையும்போதே மிகவும் சோர்வுற்றிருந்தனர். பயணத்தில் ஆடைகள் அழுக்காகி கசங்கியிருந்தன. மரியாள் நிறைமாதக் கர்பிணியானதால் மிகவும் சோர்வுற்று தான் பயணித்து வந்த கழுதையின் மீதே படுத்திர்ந்தாள். பெத்லகேமில் பல்வேறு ஊர்களிலிருந்தும் யூதேயாவுக்கு வரி கட்ட வந்தவர்களின் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. இருவரும் ஒவ்வொரு விடுதியாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தனர். எங்கேயும் தங்க இடம் கிடைக்கவில்லை. கடைசியாக ஊரின் ஒதுக்குப்புறமிருந்த விடுதி ஒன்றிற்கு வந்து சேர்ந்தனர். சூசைக்கு அந்த விடுதியில் அறைகள் காலியாக இருந்ததைப் […]


கனி’வான’மொழி!

December 24th, 2009 வகைகள்: பாடல், ஆன்மீகம், இசை, இயேசு, கவிதை | 6 மறுமொழிகள் » |

ஜெகத் கஸ்பாரின் முனைப்பில் உலகப்புகழ்பெற்ற சில கிறிஸ்துமஸ் பாடல்களுக்கு தமிழில் வரி எழுதி ’மார்கழியின் மடியில்’ எனும் பாடல் தொகுப்பொன்று வெளியாகியுள்ளது. அதில் Silent Nightன் மெட்டுக்கு கனிமொழி எழுதியுள்ள பாடல் வரிகள் கீழே. மார்கழியின் மடியிலே மாடடையும் குடிலிலே மானுடத்தின் மீட்பனாய் அன்னை மரியின் அணைப்பினிலே இதழில் புன்னகை பூத்திருக்க நிலவின் கதிர்போல கண்வளராய் அழகே. மார்கழியின் மடியிலே வானின் வெள்ளி அழைக்குதந்த அழைத்து வந்த ஞானியர் உன்னை வணங்கி நின்றார் காலமே உறைந்ததை மறந்து […]


பாதிரியார்களுக்கு பத்து கட்டளைகள் – ஒரு பிரசங்கம்

April 1st, 2008 வகைகள்: சமூகம், மதம், ஆன்மீகம், இயேசு, கடவுள், கிறீத்துவம் | 27 மறுமொழிகள் » |

கத்தோலிக்க கிறீத்துவனாக இதுவரை ஆயிரம் பிரசங்கங்களாவது பாதிரியார்களிடமிருந்து கேட்டிருப்பேன். இதோ ஒன்று அவர்களுக்கென. பாதிரியார்களுக்கு பத்து கட்டளைகள் 1. ஏழ்மை வேண்டாம் எளிமையைக் கடைபிடியுங்கள். பல வசதி வாய்ப்புக்களும் சாதாரணமாய்விட்ட காரணத்தினால் இன்று வாகன வசதிகள், தொலைக்காட்சி, செல்போன் ஆகியவை அத்தியாவசியமாகிவிட்டன. இவை இல்லாத நிலை ஏழ்மை என்றால் இவற்றை பயன், வசதி கருதி உபயோகிப்பதுவே எளிமை. எளிமையான வாகன வசதி செய்துகொள்ளுங்கள். விலை உயர்ந்த செல்ஃபோனுக்கு பதில் ஒரு சாதாரண மாடலைத் தேந்தெடுங்கள். ஏழ்மையின் அடையாளங்கள் […]


இயேசுவின் பின்னால்…

March 31st, 2008 வகைகள்: சமூகம், மதம், ஆன்மீகம், இயேசு, கிறீத்துவம், அலசல் | 10 மறுமொழிகள் » |

கிறீத்துவம் பரவலாகத் தீண்டாமைக் கொடுமையிலிருந்து பல சாதிகளை மீட்டெடுத்து அவர்களுக்கு ஒன்றுமில்லையென்றாலும் கல்வியை மட்டுமேனும் வழங்கியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆயினும் சாதி அடையாளங்களை கிறீத்துவர்கள் முற்றிலும் துறக்கவில்லை என்பது கிறீத்துவத்தின் அடிப்படைகளை மீறிய செயலே. கிறீத்துவம் பரவிய நாட்க்களிலேயே சாதி அடையாளத்துடன் கிறீத்துவர்கள் செயல்படக்கூடாது என்கிற தீர்க்கமான முடிவு இருந்திருக்குமானால் இன்று எறையூர் போன்ற பிரச்சனைகள் இருந்திருக்காது. அதே நேரம் அப்படி ஒரு நேர்மையான முயற்சி இருந்திருக்குமானால் கிறீத்துவம் இந்தியாவில் இத்தனை தூரம் பரவியிருந்திருக்காது. […]


கத்தோலிக்கம் ஜெயமோகனுக்கு கடிதம்

February 28th, 2008 வகைகள்: மதம், வகைப்படுத்தாதவை, ஆன்மீகம், இந்துமதம், இயேசு, கட்டுரை, கிறீத்துவம் | 24 மறுமொழிகள் » |

தொடர்புள்ள ஜெ.மோ பதிவு கத்தோலிக்கமதம் பெண்ணுரிமை-ஒரு கடிதம்  அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு, பெண்ணியம் குறித்த உங்கள் பதிவுக்கு, பதிலுக்கு நன்றி. //பெண்ணுரிமை பேசப்படும் மேலைநாட்டில் கத்தோலிக்கமதம் இன்றும் பெண்ணடிமைக்கருத்துகளின் தொகையாகவே உள்ளது.// இது நீங்கள் முன்பு கேள்விபதில் ஒன்றில் எழுதியிருப்பது. கத்தோலிக்கம் (பைபிளில்) பெண்ணுக்கு இரண்டாம் இடம் தரப்பட்டுள்ளது எனும் உங்கள் பதிலில் எனக்கு ஒப்புதலே. ஆதாம் ஏவாளின் கதையிலிருந்தும் அதிலிருந்து பெறப்படும் பிந்தைய புரிதல்களிலிருந்தும் (1 Corinthians 11:9) இது தெளிவாகிறது. இதில் எந்த பிரச்சனையுமில்லை. ஆனால் கத்தோலிக்கம் […]


இயேசுவின் கல்லறை

March 14th, 2007 வகைகள்: செய்தி விமர்சனம், தமிழோவியம், ஆன்மீகம், இயேசு | 9 மறுமொழிகள் » |

The lost tomb of Jesus எனும் ஆவணப் படம் போன ஞாயிறன்று டிஸ்கவரி தொலைக்காட்சியில் காண்பிக்கப் பட்டது. இயேசுவின் குடும்பக் கல்லறை என நம்பப்படுகிற கல்லறை ஒன்றிலிருந்து கிடைக்கப்பெற்ற (சவப்)பெட்டிகள், அவற்றின்பேரில் நிகழ்ந்த ஆய்வுகளை ஆவணப்படம் முன்வைக்கிறது.இயேசுவின் காலத்தில் இறந்தவர் உடலை முதலில் ஒரு கல்லறையில் வைத்துவிட்டு ஒரு வருடம் கழித்து மிச்சமிருக்கும் எலும்புகளை ஒரு பெட்டியில் போட்டு குடும்ப கல்லறைகளில் வைப்பது வழக்கமாம். இப்படிப் பட்ட கல்லறையின்றில் கண்டெடுக்கப்பட்ட பெட்டிகள்தான் ஆவணப்படத்தின் அடிப்படை ஆதாரம்.டிஸ்கவரி […]


இயேசு சொன்ன கதைகள் – 4

February 6th, 2007 வகைகள்: தமிழோவியம், ஆன்மீகம், இயேசு, கதை | 5 மறுமொழிகள் » |

கேளுங்கள் தரப்படும் கடவுளுக்கும் மனிதனுக்கும் உண்டான உறவின் முக்கியக் கூறாக இருப்பது வேண்டுதல். கேட்டதைக் கொடுப்பவனாய், கையேந்துபவர்களுக்கு இல்லை எனச் சொல்லாதவனாய் கடவுள் எண்ணப்படுகிறார். மனித உதவிகள் மறுக்கப்படும்போது கடவுளைத் தேடுவது மனித இயல்பு.இயேசு தன் சீடர்களுக்கு ஒரு செபத்தை கற்பித்தார். ‘பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே. உமது பெயர் போற்றப்படுவதாக உமது அரசு வருக. உமது எண்ணம் விண்ணகத்தில் செயல்படுவதுபோல பூவுலகிலும் செய்யப்படுவதாக. எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்குத் தீமை செய்தவர்களை […]


இயேசு சொன்ன கதைகள் – 3

January 29th, 2007 வகைகள்: டி.வி, தமிழோவியம், ஆன்மீகம், இயேசு, கடவுள், கதை | மருமொழிகள் இல்லை » |

மருத்துவன் நோயுற்றவனுக்கேயன்றி நலமாயுள்ளவனுக்கல்ல.” இயேசு தன்னைப்பற்றி கூறிய உவமை இது.”பாவிகளை மீட்கவே வந்தேன்.” என்பது அவரது பொன்மொழி. கடவுள் பாவிகளையே தேடுகிறார், நீதிமான்களையல்ல என வெளிப்படையாகச் சொன்னவர் இயேசு. பாவி ஒருவனின் மனதிருத்தம் எத்தகையது? “உங்களில் யார் ஒருவன் தன் நூறு ஆடுகளில் ஒன்று காணாமல் போக, தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் விட்டுவிட்டு தொலைந்த ஆட்டை தேடிப்போகாமைலிருப்பான்? அதை அவன் கண்டதும் குதூகுலத்துடன் தன் தோள்களில் போட்டுக்கொள்வான். வீட்டுக்கு வந்ததும் தன் நண்பர்களையும் அண்டைவீட்டாரையும் அழைத்து,”என்னோடு கொண்டாடுங்கள், தொலைந்துபோன […]


இயேசு சொன்ன கதைகள் – 2

January 16th, 2007 வகைகள்: தமிழோவியம், பொது, ஆன்மீகம், இயேசு, கட்டுரை, கதை | 2 மறுமொழிகள் » |

முகம் தெரியாத அன்னியருக்கு உதவுவது தெய்வீகமான அனுபவம். சகமனிதனுக்கு உதவுவது நம் கடமையே என்கிற போதும், இயல்பாகவே பலனை எதிர்பாராமல் நாம் எதையும் செய்ய விளைவதில்லை. நான் சென்னை லயோலாவில் படித்துக்கொண்டிருக்கும்போது, ஆண்டுவிழாவில், ஒரு மாணவர் சிறப்பு பாராட்டை பெற்றார். அவர் செய்ததென்ன? இவர் சர்ச் பார்க் பள்ளியின் முன் பஸ்ஸுக்கு நின்றுகொண்டிருக்கும்போது அங்கே உடலெங்கும் சீழ்வடியும் புண்களோடு ஒருவர் அனாதையாகக் கிடந்தார். அவரைப் பார்த்து எல்லோரும் முகம் சுளித்துக்கொண்டு, எங்கே அவன் உடலில்லிருந்து சீழும், கிருமியும், […]


இயேசு சொன்ன கதைகள் – 1

January 12th, 2007 வகைகள்: தமிழோவியம், பொது, ஆன்மீகம், இயேசு, கட்டுரை, கதை | 7 மறுமொழிகள் » |

கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்இயேசு என்னும் வரலாற்று நாயகனை பல கோணங்களில் தரிசிக்கலாம். குருவாய், தியாகியாய், புரட்சிக்காரனாய், சீரமைப்பாளராய், மக்கள் நாயகனாய், கடவுளாய், அதிசயங்கள் புரிந்த ஒரு சாதரண மனிதனாய் இன்னும் பலவாய் காட்சிதருகிறார் இயேசு. தெய்வீகக் கூறுகளை விலக்கிவிட்டு இயேசுவைப் பார்ப்பவர்கள் குறைவே. ஒரு போதகராக அவர் விட்டுச்சென்ற கருத்துக்கள் மத போதனைகளாக்கப்பட்டுவிட்ட நிலையில், அவரின் வாழ்வியல் கருத்துக்கள் பலரையும் சென்றடையவில்லை என்பது சற்றே சோகமான உண்மை. இந்தப் போதனைகள் எல்லோருக்கும் போய் சேர்ந்திருந்தால் இன்னும் சில […]