‘யார் இந்த வள்ளுவன்?’ – திருவள்ளுவர் மீது ஒரு அவதூறு

July 14th, 2009 வகைகள்: நகைச்சுவை, நையாண்டி | 28 மறுமொழிகள் » |

[மாதம் மும்மாரி பொழிகிறதோ இல்லையோ தமிழ் எழுத்தாளர்கள் மாறி மாறி பொழிந்துகொண்டிருக்கிறார்கள். இந்தப் பொழிதல்களில் தெரியும் இலக்கியத் தன்மையும் சுவாரஸ்யமும் எந்த காப்பியத்திலும் இல்லை. வசை, அவதூறு என்பதை ஒரு இலக்கிய வகையாகவே வருங்காலத்தில் கருதக் கூடும். அவ்வகைக்கு நோபல் பரிசொன்றை தந்தார்களென்றால் தமிழன் நோபல் வாங்குவது உறுதி. வள்ளுவர் காலத்தில் திருவள்ளுவரை ஒருத்தர் சமகால முறையில் ‘விமர்சித்திருந்தால்’ எப்படி இருந்திருக்கும் எனும் அதீத கற்பனைதான் இது. ] சமகால இலக்கியத்தில் எனக்கிருக்கும் முக்கியத்துவத்தை எனக்கு தினமும் […]


பாலபாரதி குறித்த தீர்க்கதரிசனம்!!!

August 28th, 2008 வகைகள்: நிகழ்வு, நகைச்சுவை, நையாண்டி, பதிவர்வட்டம், வலைப்பதிவுகள், கலாய்த்தல் | 5 மறுமொழிகள் » |

“இப்படியெல்லாம் அடங்காபிடாரித்தனமா கேள்வி கேட்கற பெண்ணியவாதியா நீ? இரு இரு உன்னையெல்லாம் யாரு கல்யாணம் பண்றங்கன்னு பார்க்கறேன். அப்படி எதுனா இளிச்சவாயன் வந்து கட்டினாலும் அவன் உன்கிட்ட ரொம்ப அவஸ்தைப்படறான்னு எதுனா ஒரு தண்ணி பார்ட்டியில உளறுவான்.” இதை எழுதியது வேற யாரும் இல்லீங்க. நம்ம தல பாலபாரதியின் துணைவியார்தான். பதிவர்கள் இருவர் இல்வாழ்வில் இணைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் (பலருக்கும்) நம்பிக்கையயும் அளிக்கிறது. பாலாவின் பதிவில் இனி ஒரு பின்னூட்டமாவது விழும். அம்மணி பதிவில் பல பின்னூட்டங்கள் […]


ஜார்ஜ் புஷ்ஷின் சமையல் குறிப்புக்கள்

May 5th, 2008 வகைகள்: நகைச்சுவை, நையாண்டி, புஷ், கலாய்த்தல், அமெரிக்கா, அலசல் | 9 மறுமொழிகள் » |

இந்தியன் மிடில்கிளாஸ் டின்னர்: ஒருவருக்கு ஒரு அரிசி வீதம் எடுத்துக்கொள்ளவும். அதை குழந்தைகள் விளையாட வைத்திருக்கும் சமையல் பாத்திரத்தில் இட்டு நன்றாக வேகவைக்கவும். அதிலிருந்து வடித்தெடுத்த கஞ்சியை ஒரு கப்பில் சேமித்து வைத்துக்கொள்ளவும். அமெரிக்க பஃபே ஒன்றின் படத்தை இணையத்திலிருந்து பதிவெடுத்து வைத்துக்கொள்ளவும். இப்போது நன்கு வெந்த அரிசியை எடுத்து அந்த பஃபே படத்தை பார்த்துக்கொண்டே சாப்பிடவும். பசி அதிகமாயிருந்தால் ஒருவருக்கு இரண்டு பருக்கைகள் எடுத்துக்கொள்ளலாம். வடித்த கஞ்சியுடன் முந்தநாள் மழையில் ஓட்டில் வழிந்த மழைத்தண்ணியை சேமித்து […]


இரண்டாமவன் – இரண்டு நாள் முதல்வன்

April 23rd, 2008 வகைகள்: நகைச்சுவை, நையாண்டி, கலாய்த்தல் | 15 மறுமொழிகள் » |

காட்சி: டி.வி நேர்காணல் அர்ஜுன்: வணக்கம் இன்றைக்கு நம்கூடப் பேசப் போறவருக்கு அறிமுகமே தேவையில்லை. முதல்வர்: இருந்தாலும் சொல்லிடுங்க. அர்ஜுன்: நம்ம முதல்வர். ஐயா தமிழ்நாட்ல… முதல்வர்: ஏ..ஏ.. நீ என்ன சொல்லப் போறேண்ணு தெரியும். அதே பழைய இண்டர்வ்யூ, அதே ம்யூசிக்.. சுத்தி வர்ற செட்.. அதே கேள்வி.. நானும் உனக்கு அதே சவால் விடுறேன்.. ரெண்டு.. ரெண்டு நாள் என் சீட்ல உக்காந்து பாரு அப்ப தெரியும்? (அர்ஜுன் எந்திரிக்கிறார்) முதல்வர்: யோவ் இந்த சீட்ல […]


சாஃப்ட்வேர் இஞ்சினியர்களால் மோசமான தெப்பக்குளம்

March 19th, 2008 வகைகள்: நகைச்சுவை, நையாண்டி, கலாய்த்தல் | 23 மறுமொழிகள் » |

சாஃப்ட்வேர் இஞ்சினியர்களால் சமூகம் பல்வேறு அவலங்களை சந்தித்துள்ளது. லஞ்சம் வாங்கும் அரசியல்வாதிகள் ஆப்பீசர்கள், ஆயுதம் தாங்கிய கைக்கூலிகள், மக்களை ஏமாற்றும் மதபோதகர்கள், சாமியார்களுக்கு அடுத்தபடியாக சமூகத்தை சீரழிப்பது சாஃப்ட்வேர் எஞ்சினியர்கள்தான் என அண்மையில் அடிதடிக்குப்பின் மூடப்பட்ட சில கருத்துக் கணிப்புக்கள் சொல்லியிருக்கின்றன. இதைத் தொடர்ந்து சாஃப்ட்வேர் இஞ்சினியர்களால் தொடர்ந்து பாதிப்பில் உள்ளாகிவரும் சிலர் பதிவுலகிலும் பல உபயோகமான விவாதங்களில் ஈடுபட்டுள்ளனர். இனி வரப்போகும் நாட்களில் எத்தகைய பதிவுகளை எதிர்பார்க்கலாம் என யோசித்ததில்.. சாஃப்ட்வேர் எஞ்சினியர்களால்… …எங்க ஊர் […]


டுபுக்கு வீடியோவுக்கு எதிர் வீடியோ

March 14th, 2008 வகைகள்: நகைச்சுவை, நையாண்டி, கலாய்த்தல், குறும்படம் | 16 மறுமொழிகள் » |

டுபுக்கு The Door என ஒரு குறும்படம் போட்டிருக்காரு. அதுக்கு பதில் வீடியோ. கீழ பாருங்க. எஞ்சாய் மாடி.


‘அறச்சீற்றம்’ குறித்த அறச்சீற்றம்

March 6th, 2008 வகைகள்: நகைச்சுவை, நையாண்டி, பதிவர்வட்டம், வலைப்பதிவுகள், கட்டுரை, கலாய்த்தல் | 20 மறுமொழிகள் » |

அறச்சீற்றம் எனும் வார்த்தையின் புகழ் மேலோங்கி வருகிறது. இது வெறும் வார்த்தையாக இல்லாமல் ஒரு இயற்காட்சியாகவும்(Phenomenon) இருப்பதால் இது குறித்த நுண்ணிய அலசல் ஒன்றின் தேவையை உணர்ந்து இந்தக் கட்டுரை எழுதபடுகிறது. அறச்சீற்றம் என்பது எழுத்தாளர்களுக்கு குறிப்பாக இலக்கியவாதிகளுக்கு எழும் கோபம். டீயில் கிடக்கும் ஈ துவங்கி, ஈ யில் நடித்த நயன் வரைக்கும் எழுத்தாளர்களின் கோபத்தை, சீற்றத்தை தூண்டுகிற விஷயங்கள் எண்ணிக்கையில் அடங்காது. அப்போது வாளினும் வலியதொரு ஆயுதத்தை எடுத்து அவர்கள் விளாச ஆரம்பிக்கையில் அதிலிருந்து […]


நுண்ணரசியலின் நுண்ணரசியல்

December 20th, 2007 வகைகள்: நகைச்சுவை, நையாண்டி, பதிவர்வட்டம், வலைப்பதிவுகள், இணையம், கலாய்த்தல் | 15 மறுமொழிகள் » |

நச் கவிதை எழுதியாச்சா?>>>>>>> நுண்ணரசியலின் நுண்ணரசியல் =============================== இந்த வருடத்தின் மிகச் சிறந்த இணையத் தமிழ் வார்த்தையாக நான் தேர்ந்தெடுத்திருப்பது ‘நுண்ணரசியல்’. வருடக் கடைசி என்றாலே ‘சிறந்த’ எனும் அடைமொழிக்கு ஒரு தனி சிறப்பு வந்துவிடுகிறது. அஜித் ரசிகர்கள் ‘தலை’ சிறந்த என்று கூறுவதுவும் வழக்கம். இந்த வருடத்தின் சிறந்த மனிதர் என ஒரு தேர்வு, இந்த வருடத்தின் சிறந்த திரைப்படம் என இன்னொன்று, சிறந்த பாடல், சிறந்த முதல்வர், சிறந்த மாணவர் என ‘சிறந்த’ இல்லாத […]


கடவுளின் வலைப் பதிவு

November 5th, 2007 வகைகள்: நடனம், நகைச்சுவை, நையாண்டி, மதம், இணையம், கடவுள், கலாய்த்தல் | 27 மறுமொழிகள் » |

ஏதாச்சும் காமெடி கீமெடி பண்ணி ரெம்ப நாளாச்சு. அதனால கடவுள் தமிழ் வலைப்பதிவு ஒண்ண ஆரம்பிச்சார்னா எப்படி இருக்கும்னு ஒரு கற்பனை. தடித்த எழுத்தில் இருப்பது பதிவின் தலைப்பு அப்புறம் பதிவின் சாரம். ஜீரோ ரூபாயை காணிக்கை பெட்டியில் போடாதீர்கள் பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள். ஜீரோ ரூபாயை காணிக்கை பெட்டிக்குள் போடவேண்டாம். பல போலீஸ்காரர்களும் அரசு அதிகாரிகளும் தாங்கள் வாங்கும் லஞ்சப் பணமான புதிய ஜீரோ ரூபாய் நோட்டுக்களை உண்டியலில் போடுகிறார்கள். இப்படிச் செய்பவர்களின் வேண்டுகோள்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. […]


ஷங்கரின் அடுத்த படம் கதை தயாராகிவிட்டது

July 2nd, 2007 வகைகள்: சினிமா, நகைச்சுவை, நையாண்டி | 21 மறுமொழிகள் » |

இயக்குநர் ஷங்கர் சிவாஜிக்கு அடுத்ததாக எடுக்கப்போகும் படத்தின் கதை இப்போதே லீக் ஆகிவிட்டது. ஒன் லைனர்: தேவைக்கதிகமாக காசு போட்டு சினிமா எடுக்கும் சினிமாக் காரர்களை ஒரு ‘பாதிக்கப்பட்ட’ உதவி இயக்குநர் ‘தட்டிக்’ கேட்டால் எப்படி இருக்கும். திரக்கதை: எடுத்த உடனே புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் திரையில் தோன்றுகிறார். ‘நான் ஆணையிட்டால்’ பாட்டுக்கு சாட்டையை சுழற்றுகிறார். அதே செட், கொஞ்சம் பழையதாயிருக்கிறது. தூணில் ஒருவரை சங்கிலியில் கட்டிவைத்திருக்கிறார்கள். அவரை சரமாரியாக சாட்டையால் அடிக்கிறார். பாடல் பாதியிலேயே நிற்க. புரட்சித் […]