கடலெனும் அனுபவம்

February 17th, 2013 வகைகள்: சினிமா, திரை விமர்சனம், அனுபவம் | 4 மறுமொழிகள் » |

பல வருடங்களுக்கு முன்பு ‘ரீடர்ஸ் டைஜெஸ்ட்’ பத்திரிகையில் ஒரு கருத்துப்படம் வந்திருந்தது. இரு சிறுவர்கள் ஒரு ’மார்டன் ஆர்ட்’ படத்தின் முன்பு நின்றுகொண்டிருக்கிறார்கள். கீழே ’யாராவது நாமதான் இதை செஞ்சுட்டோம்ணு சொல்றதுக்கு முன்னால ஓடிரலாம் வா’ எனும் வரி. கடல் திரைப்படத்துக்கு வந்திருக்கும் பல விமர்சனங்களை படித்தபோது எனக்கு இதுவே நினைவுக்கு வந்தது. பல உன்னத கலை படைப்புகளும் குழந்தைகள் செய்தவற்றைப்போன்ற எளிமையுடனே இருக்கின்றன. ஒரு மாடர்ன் பெயிண்டிங்கைப்போலவே கடலும் நம் புரிதலைக் கோரி நிற்கும் ஒரு […]


எவன் இவன்?

June 18th, 2011 வகைகள்: சினிமா, திரை விமர்சனம் | 5 மறுமொழிகள் » |

அமெரிக்காவிலிருந்து வரும்போது என் மகனின் கெலைடோஸ்கோப் ஒன்றையும் எடுத்து வந்தோம். வண்ணத் தகர வெளிப்புறம் கொண்டது. கெலைடோஸ்கோப்கள் முதலில் பார்க்கும்போது அற்புதமான அனுபவத்தை தருகின்றன. வடிவங்கள் நம் கண்முன்பே உருமாறி உருமாறி ஆச்சரியமூட்டுகின்றன. உள்ளே நாம் காண்பவை கட்டுக்கோப்பான கணித வடிவங்கள், ஆனாலும் குழப்பமும் அழகும் கொண்டவை. பார்வைக்கும், அறிவுக்கும் அகத்தூண்டல்களைத் தருகிறது ஒரு கெலைடோஸ்கோப். நாட்கள் ஆக ஆக, கெலைடோஸ்கோப்பை மீண்டும் மீண்டும் பார்க்கும்போது வண்ண வடிவங்களைத் தாண்டி கெலைடோஸ்கோப்பின் உள்ளே கிடக்கும் பொருட்கள் ஒவ்வொன்றாகத் […]


இதயம் தொடாத இரும்பு!

October 8th, 2010 வகைகள்: சினிமா, திரை விமர்சனம் | 9 மறுமொழிகள் » |

எட்டு மணி நேரம் கொட்டோ கொட்டென்று கணிணியை கொட்டிவிட்டு அதற்குப் பின்னும் ஒரு சொலூஷன் கிட்டாத ஒரு சோர்வான மாலையில் போய் சேர வேண்டிய இடம் வீடு அல்லது ஒரு மதுவிடுதி. எந்திரன் டிக்கட் இலவசமாகக் கிடைக்கிறதே என்று தேவிக்குப் போய் உட்கார்ந்தேன்.  ‘பரப்புக்’ கலைகளைக் குறித்து கருத்து சொல்வதில் மிகக் கவனம் தேவை என்கிறன தற்போதைய நிகழ்வுகள். கோட்பாட்டாளர்களும் விற்பன்னர்களும் நுண்ரசனையாளர்களும் வந்து முதுகுப் பரப்பை ஒரு பரப்பு பரப்பிவிடுவார்களென்கிற பயம்தான். இதையே ஒரு டிஸ்கிளெய்மராக […]


கனவுக் களவாணி ~ Inception

July 27th, 2010 வகைகள்: சினிமா, திரை விமர்சனம் | 10 மறுமொழிகள் » |

உலக கார்ப்பரேஷன்கள் பச்சைக் காசுக்காக எதையும் செய்யத் துணிந்துவிட்ட காலம் இது. உலகின் பலம்வாய்ந்த அரசாங்கங்கள் இன்று கார்பரேஷன்களின் கைப்பொம்மைகள். நமூரில் சாதி ஓட்டுக்காக செய்யப்படும் அரசியல் சமரசங்கள் பெரிய நாடுகளில் கார்பரேட் ஆதரவுக்காக செய்யப்படுகின்றன. இந்த சர்வாதிகார வியாபாரிகளின் அதிமுக்கிய மூலப்பொருள் ‘தகவல்’. இன்று பல வழிகளில் நம்மைப்பற்றிய தகவல்களை கார்ப்பரேஷன்கள் பெற்றுக்கொண்டேயிருக்கின்றன. கருத்துக்கணிப்புக்களில் சாதாரணமாகத் தோன்றும் கேள்விகளுக்கு நாம் பதிலளிக்கிறோம். ஆனால் அதிலிருந்து பலவிதமான தகவல்களை அவர்கள் பிரித்தெடுக்கிறார்கள். அவற்றின் அடிப்படையில் வியாபார முடிவுகளை […]


பத்துத்தலைவலி!

July 19th, 2010 வகைகள்: திரை விமர்சனம், அனுபவம் | 21 மறுமொழிகள் » |

இந்த வார இறுதியில் ராவணன் படம் பார்க்கப் போயிருந்தோம். படம் முடிந்ததும் ‘வள வளண்ணு சொல்லாம ஒரே வார்த்தையில் சொல்லுங்க, படம் எப்படி?’ என்றார் நண்பர். ‘பத்துத்தலைவலி!’ என்றேன் விளையாட்டாக. இரு வாரங்களுக்கு முன்பு இயக்குனர் மணிரத்தினம் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டரை மணி நேரம் ஐந்து எழுத்துலக நண்பர்களுடன் இலக்கில்லா உரையாடல்கள். உரையாடலின்போது அங்கிருந்த நம் நண்பர் உத்தம எழுத்தாளர் (ஒருவர் உத்தமராக இருப்பது மோசமானதா என்ன? அப்படியே அழைப்போமாக.) “ஒருவர் ஒரு கருத்தை […]


நான் கடவுள்

February 18th, 2009 வகைகள்: சினிமா, திரை விமர்சனம் | 12 மறுமொழிகள் » |

“மோசமாக எழுதப்படும் விமர்சனங்கள் சரியாக எடுக்கப்படாத படங்களைவிட மோசமானவை”. சும்மா ஏதோ ஒரு பாராவில்(Paragraph) படிச்சத மாத்தி எழுதி பார்த்தா எப்படி இருக்கும்ணு ஒரு கற்பனை. நல்லாத்தான் இருக்குது. எந்த பெரிய அர்த்தமுமில்லைண்ணாலும் ஏதோ பெரிய தத்துவம் மாதிரி தெரியுதுல்ல? ஒரு திரைப்படத்துக்கு எத்தனை விமர்சகர்கள்? எத்தனைபேர் அதை பார்க்கிறார்களோ அத்தனை விமர்சனங்கள். (படம் பார்க்காமலே விமர்சிப்பவர்களும் உண்டென்றாலும்). நான் கடவுள் விமர்சனங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கருத்து முன்நிற்கிறது. ஆன்மிகமும் இதுபோலவே! உலகில் எத்தனை நம்பிக்கையாளர்கள் உண்டோ […]


எடுத்தேன் கொடுத்தேன் 06/24/2008

June 24th, 2008 வகைகள்: சமூகம், செய்தி விமர்சனம், திரை விமர்சனம், தேன், நிகழ்வு, அஞ்சலி, அமெரிக்கா, அலசல் | 15 மறுமொழிகள் » |

பாலபாரதியின் விடுபட்டவை போல ‘எடுத்தேன் கொடுத்தேன்’ அவ்வப்போது எழுதலாம் என எண்ணம். சில செய்திகளை சுருங்கச் சொல்லிச் செல்வதுதான் சிறப்பு. வலைப்பதிவுக்கு ஏற்றதொரு வடிவமும்கூட. எடுத்தேன் கொடுத்தேனை இப்படியும் வாசிக்கலாம் எடு தேன் கொடு தேன். தசாவதாரம் – II இரண்டாம் முறையாக தசாவதாரம் பார்த்தேன். இதுவரை தசாவதாரத்திற்கான மொத்த செலவு $200 க்கருகில். இரண்டாம் முறை படம் முன்பை விட நன்றாக இருந்தது. இப்போது கமலின் முகத்தை தவிர்த்து படத்தில் மற்ற அம்சங்களில் கவனம் செல்கிறது. […]


தசாவதாரமும் கமலின் சாபமும்

June 13th, 2008 வகைகள்: சினிமா, திரை விமர்சனம், அலசல் | 30 மறுமொழிகள் » |

பழங்காலத்துக் கதைகளில் இரு சுவாரஸ்யமான விதயங்களைக் காணலாம். ஒன்று ஒருவரின் உயிர் ஏதோ ஒரு அபத்தமான பொருளில், ஆபத்தான இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும். ‘ஏழுகடல் தாண்டி ஒரு குட்டித் தீவில் சிறு குருவிக் கூட்டீல் இருந்த சங்கினுள் வசித்து வந்த குள்ள மனிதர்களிடமிருந்த பூத்தொட்டியில் வாழ்ந்த மண்புழு ஒன்றில் மன்னனின் உயிர் மறைத்து வைக்கப்பட்டிருந்தது…’. இன்னொன்று ஒருவரின் உருவம் மாறிவிடும்படி சாபம் கிடைக்கும். தவளையாகிவிட்ட இளவரசன், பறவையாகிவிட்ட இளவரசி, பாதி விலங்கும் பாதி மனிதனுமாக உருமாறித் திரிபவை […]


Rush Hour 3 – No rush

August 11th, 2007 வகைகள்: சினிமா, திரை விமர்சனம் | 8 மறுமொழிகள் » |

அமெரிக்கத் திரையரங்கில் சிவாஜிக்கு அடுத்தபடியாக வரிசையில் நின்று பார்த்தபடம் ரஷ் ஹவ்ர் 3. படத்தில் கதை எனப் பெரிதாய் ஒன்றுமில்லை. எதிர்பாராத திருப்பங்களுமில்லை. வழக்கமாக ஜாக்கிசான் படங்களுக்கு் ரூம் போட்டு கதை எழுதும் பழக்கமில்லை எனத் தெரியுமென்பதால் இதில் பிரச்சனையில்லை. ஆனா் படத்தில் பழைய ஜாக்கிசான் இல்லவே இல்லை. பழசான ஜாக்கிதான் இருக்கிறார். சண்டைக்காட்சிகள் மிகவும் சாதாரணமானதாயுள்ளன. அவ்வப்போது வெடிக்கிறது க்ரிஸ்டக்கரின் காமெடி. சிவாஜிக்கும் ரஷ் அவர் 3க்கும் சிவாஜிக்கும் அப்படி ஒரு ஒற்றுமை(வரிசையில் நிற்பதை் தவிர்த்து). […]


300

March 16th, 2007 வகைகள்: திரை விமர்சனம் | 13 மறுமொழிகள் » |

வீரவரலாறுகளுக்கு உலக கலாச்சாரங்களில் பஞ்சமேயில்லை. அதிலும் பலமிழந்தவன் பலசாலியை வீழ்த்தும் கதைகள். ஹாலிவுட்டிற்கு பிடித்தமான கதைவகைகளில் முதன்மையானது இதுதான். 2,50,000 பேர் கொண்ட பெர்ஷியர்களின்(இந்தக்கால ஈரான் பகுதி) படையை வெறும் 300பேர் மூன்று நாட்கள் தடுத்து நிறுத்தி பின்னடையச் செய்தார்கள் என்றால் நம்பமுடிகிறதா?இது கிரேக்க வரலாறு. கிரேக்க புராணக்கதையல்ல. ஸ்பார்ட்டா கிரேக்க நாட்டின் தெற்கிலுள்ள ஒரு நகரம். இங்கு பிறக்கும் ஆண்மகவின் உடல் போருக்குகந்ததா என பிறந்த சூட்டோடேயே பார்க்கப்படுகிறது. குழந்தையின் உடற்கூறு ஒவ்வாததாயிருப்பின் கீழே எலும்புக் […]