‘வார்த்தையில்லாமலே பாஷை உண்டாகலாம்’

March 4th, 2007 வகைகள்: சினிமா, திரை விமர்சனம் | 23 மறுமொழிகள் » |

‘மொழி’. வாவ். தமிழ் திரையுலகம் இயக்குனர் இமயங்களையும், மலைகளையும் கடந்து வெகுதொலைவுக்குச் சென்றுகொண்டிருக்கிறது என என்னை நம்பவைத்த இன்னுமொரு படம் ‘மொழி’. பின்னிரவில் தூங்கிய அசதியோடு, இப்படி ஒரு ‘சோகமான’ படத்துக்குப் போகிறோமே என சலித்துக்கொண்டேன். படம் துவங்கியதிலிருந்து வீடு வந்து இதை எழுதிக்கொண்டிருக்கும்வரை ஏதோ மூளையை சலவை செய்து வைத்ததுபோல ஒரு புத்துணர்ச்சி. படம் சோகமா? இருக்கலாம் இந்தப் படத்தில் வரும் பாத்திரங்களைப்போல நாம் மகிழ்ச்சியா இருக்கிறோமா என எண்ணினால் நிச்சயம் சோகம் வரலாம். அழுத்தமான […]


வெயில் – நிழலல்ல நிஜம்

January 3rd, 2007 வகைகள்: சமூகம், சினிமா, தன்னம்பிக்கை, திரை விமர்சனம், பொது | 18 மறுமொழிகள் » |

சன் டி.வி டாப் 10 ஸ்டைல்ல, ‘வேண்டிய அளவுக்கு ‘வெயில்’ படம் பற்றி பதிவர்கள் அலசிவிட்டதால’ எனக்குத் தோன்றிய சில எண்ணங்களை பகிர்ந்துக்கலாம்னு இந்தப் பதிவு.வெயில், சில கசப்பான நிஜங்களை வெளிச்சம் போட்டு காண்பித்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு ஆவணப் படம்போலவே, நிஜத்துக்கு வெகு அருகாமையில் எடுக்கப்பட்டிருக்கும் விதம் அருமை. தமிழ் திரைப்படங்கள் அசட்டுத்தனங்களை களைந்துவிட்டு உருப்படும் எனும் நம்பிக்கையை தரும் மற்றொரு படம் இது.வெயில், படத்தில் முக்கிய கதாபாத்திரமாய் வருகிறது. ஒரேமுறை தோன்றினாலும் கதையின் அடித்தளமே நாயகன் […]


புதுப்பேட்டை

June 26th, 2006 வகைகள்: சினிமா, திரை விமர்சனம், இணையம் | 2 மறுமொழிகள் » |

‘விளிம்பு மனிதர்களை’ படம்பிடிப்பதில் செல்வராகவன் திறமைசாலி. ஒன்று சமுதாயத்தின் விளிம்பில் அல்லது உணர்ச்சிகளின் விளிம்பில் இவரது படைப்புக்கள் திரை உலா வரும். புதுப்பேட்டையும் அப்படி ஒரு முயற்சியே.சேரியிலிருந்து பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் கொக்கி குமாரின் வாழ்க்கை ஏதோ சாக்கடையில் சிறுவர்கள் விட்ட காகிதக் கப்பல் போல பயணிக்கிறது. அவன் எண்ணிப்பார்த்திராத பரிமாணங்களில் ஒவ்வொரு நாளும் புலருகிறது. பிச்சைக்காரனாகி, அடியாளாகி, தாதாவாகி, கணவனாகி, தந்தையாகி … என பல திருப்பங்கள். சாக்கடையில் சில அழுகாத பழங்களும், சற்றுமுன் வீசப்பட்ட பூக்களும் […]


கொக்கி

June 2nd, 2006 வகைகள்: சினிமா, திரை விமர்சனம் | 7 மறுமொழிகள் » |

கரண் ஹீரோவாய் நடித்து வந்திருக்கும் படம் கொக்கி. எந்தக் கரண்? “செக் மேட்டுன்னு சொன்னேன் சார்” என வி.பி கமலை மிரட்டுனாரே அந்தக் கரண். ஆன்டி ஹீரோ கேள்விபட்டிருக்கோம் இவர் ஆர்டினரி ஹீரோ. படத்தில் ‘பக்கி’மாதிரி காட்சியளிக்கிறார். கிராமத்திலிருந்து பட்டணத்துக்கு பிழைக்க வரும் ஒரு சாதாரண இளைஞன் வாழ்க்கை பட்டணத்தில் சின்னாபின்னமாக்கப்படும் கதை. இப்பத்தானே இப்படி ஒரு படம் பார்த்தோம் என்பவர்களுக்கு குறிச்சொல் ‘ட்ரீட்மெண்ட்’. கதை சொல்லும் விதமும் காட்சியமைப்பும் படத்தை வித்தியாசப்படுத்துகின்றன. யதார்த்தமாய் காட்சியமைப்பது தமிழ் […]


பட்டியல்

March 21st, 2006 வகைகள்: சினிமா, திரை விமர்சனம், அலசல் | 7 மறுமொழிகள் » |

மீண்டும் ஒரு ரவுடிக் கதை என்று சொல்ல முடியாத படம். காட்சியமைப்புக்கள் உண்மைக்கருகிலுள்ளன. இசை, படத்தொகுப்பு, கலை என எல்லாமே முழுமையாய் ஒன்றிணைந்திருக்கின்றன.கதை ரெம்ப புதுசு என்றில்லை. காசுக்கு கொலை செய்யும் இரண்டு அடியாள் நண்பர்கள், அவர்களின் காதலிகள், இவர்களுக்கு ‘வேலை’ வாங்கித்தரும் ‘கொலை’த்தரகர் மற்றும் இவர்களால் கொல்லப்படுகிற சிலர் என சிறிய வட்டத்துக்குள் படமாக்கப்பட்டுள்ளது.வெறும் திரைக்கதையையும் காட்சியமைப்பையும் நம்பி எடுக்கப்பட்ட படம். கடைசிவரை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அடுத்து என்ன நடக்கும் என்கிற கேள்வி இல்லமல் […]