டிசம்பர்-தேன்கூடு போட்டி தலைப்பு

November 30th, 2006 வகைகள்: தேன்கூடு, நகைச்சுவை, பதிவர்வட்டம், பொது, போட்டி, அறிவிப்பு | 23 மறுமொழிகள் » |

கரும்பு விலை தன்னாலத்தான் ஏறிப்போச்சுன்னு ஜெ சொல்வது அரசியல் குறும்புப்ளூட்டோ திடீர்னு கோள் இல்லன்னு சொல்றது அறிவியல் குறும்புகைப்புள்ள சீறி எழுந்தா கிராமத்துக் குறும்புவிவேக் விசிலடிச்சாசிட்டிக் குறும்புஆபீசில் பிற பாலிடம் சில்மிஷக் குறும்புஸ்கூலில் ப்ரின்ஸ்பாலிடம் சின்னவயசுக் குறும்புகவுண்டமணி ஒதச்சா கர்வக் குறும்புசெந்தில் ஒதச்சா காமெடிக் குறும்புகாதலி லேட்டா வந்தா காதல் குறும்புகாதலன் லேட்டா வந்தா குறும்பில்ல குமுறுவெள்ளை சட்டை பாத்து கக்கா போவதுகுழந்தைக் குறும்புவெள்ளை சுவத்தோரம் கண்டதும் போவதுபெரியவர் குறும்புவிசிலோ, கண்ணோ அடிப்பதுவாலிபக் குறும்புவிட்டா ஆளையே அடிப்பதுவயோதிகக் […]


நன்றி

November 28th, 2006 வகைகள்: தேன்கூடு, பதிவர்வட்டம், அறிவிப்பு | 23 மறுமொழிகள் » |

நவம்பர் தேன்கூடு போட்டியில் வாக்களித்த நண்பர்கள் அனைவருக்கும் போட்டி நடத்திய தமிழோவியம் தேன்கூடு நிர்வாகிகளுக்கும் நன்றி. தேன்கூடு நடத்திய முதல் போட்டியில் எனக்கு இரண்டாம் பரிசும் பெனாத்தல் சுரேஷுக்கு முதல் பரிசும் கிடைத்தது. நவம்பரில் எனது ‘சொர்க்கம் இலவசம்’ கதைக்கு முதல் பரிசும் அவருக்கு இரண்டாம் பரிசும் கிடைத்துள்ளது. (நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆர்னர்). மக்கள்ஸ் அனைவருக்கும் நன்றி.கூடவே ஒரு சின்ன போட்டி. அடுத்த மாதப் போட்டிக்கு ஒரு நல்ல தலைப்பை பின்னூட்டுங்கள். கடைசி போட்டி […]


சொர்க்கம் இலவசம்

November 3rd, 2006 வகைகள்: சிறுகதை, தேன்கூடு, நகைச்சுவை, போட்டி, இலக்கியம், கிறீத்துவம் | 66 மறுமொழிகள் » |

செயிண்ட் பீட்டர் சிணுங்கும் அலைபேசியை பார்த்தார். ‘சித்ரகுப்தன் காலிங்’ கோணலாய் சிரித்துக்கொண்டிருக்கும் சித்ரகுப்தன் படத்தோடு சேதி சொன்னது செல்போன். ‘காலையிலேயா?’ பீட்டர் முணுமுணுத்தார். நாயர்கடைக்கே கூகிள் மேப்பில் வழிதேடி, அதை செல்போனில் இறக்கி, உலகளாவிய சுட்டும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி (அதான் ஜிபிஎஸ்), போய் ஹோம் டெலிவரி ஆர்டர் செய்துவிட்டு வர்றமாதிரி காலம் மாறியிருக்கு. பூமியில மட்டுந்தான் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்குமா என்ன? சுவர்க்கமும் மின்னணு எந்திரமயமாகியிருந்தது. ஏக்கர் கணக்கில் மெயின்ஃப்ரேம்களை நிர்மாணித்திருந்தனர். பாவக்கணக்கு புண்ணியக் கணக்கு என […]


தேன்கூடு பெட்டகம்

October 18th, 2006 வகைகள்: தொழில் நுட்பம், தேன்கூடு, பொது, வலைப்பதிவுகள், இணையம், உதவி | 11 மறுமொழிகள் » |

டெலிஷியஸ் எனும் சேவை பற்றி முன்பு பதிவுகள் எழுதியிருந்தேன். எத்தனைபேர் பயன்படுத்த ஆரம்பித்தார்கள் தெரியவில்லை. தேன்கூடு குழுமம் ‘பெட்டகம்’ எனும் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. உங்களுக்கு பிடித்த சுட்டிகளை குறிச் சொற்களோடு சேகரித்து பயன்படுத்த உதவும் சேவை. டெலிஷியசை மிஞ்சும் ஒரு அருமையான பயனோடு வந்துள்ளது(பின்னர் இதைச் சொல்கிறேன்).இதன் அடிப்படை பயன் என்ன?Favorites என உங்கள் உலவியில்(Browser) சுட்டிகளை சேகரிக்க ஒரு வசதி அதைப் போல பெட்டகத்தில் உங்களுக்கு பிடித்த சுட்டிகளை சேகரிக்கலாம்.இதுபோல ஏற்கனவே Favourites சேகரிக்கும் […]


விடுதலை

September 30th, 2006 வகைகள்: தேன்கூடு, இலக்கியம், கதை | 29 மறுமொழிகள் » |

அறிவிப்பு வந்ததிலிருந்து மகிழ்ச்சியைவிட குற்ற உணர்வே அதிகமாயிருந்தது. இந்த மாதப் போட்டியில் மூன்றாம் இடம் கிடைத்திருந்தது. சுமாராய்த்தான் என் முயற்சி இருந்தது. வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவு என சில சக போட்டியாளர்களின் முயற்சிகளைப் பார்த்ததுமே தெரிந்துகொண்டேன். மனைவியிடம் போட்டி பற்றி சொல்லிவிட்டேன், பிள்ளைகள் கூட எதிர்பார்ப்போடு இருந்தார்கள். ரெம்ப தயக்கத்தோடத்தான் ஜேம்சிடம் அந்த ஐடியாவச் சொன்னேன். அவனுக்கு தயக்கமேயில்ல. அப்புறமம வேணாம்டான்னேன். ‘இல்லடா ரெம்ப சிம்பிள், நீ ஒண்ணும் பண்ணவேண்டாம் நான் பாத்துக்கிறேன்.’ னு சொன்னான். […]


லிஃப்ட்

September 1st, 2006 வகைகள்: சமூகம், சிறுகதை, தேன்கூடு, இலக்கியம், கதை | 46 மறுமொழிகள் » |

சாலை ஆறாய் உருகியோடிக்கொண்டிருந்தது. உருவங்கள் செம்மையாகத் திரிக்கப்பட்டு வண்ணங்கள் வழிந்தோடும் ஒரு நவீன ஓவியமாய் கானல் வரைந்த கோலங்களை வியப்போடு ரசித்துக்கொண்டிருந்தார் பெரியவர். ‘அங்க பஸ் வர நேரமாகும். கொஞ்சம் தள்ளி முக்குல நின்னீங்கண்ணா யாராவது டூ வீலர்ல வரும்போது லிஃப்ட் கேக்கலாம்.’ மகன் சொல்லியிருந்தான். முதலில் வந்த மாட்டுவண்டியில் உரம் ஏற்றப்பட்டிருந்தது. “பெரியவரே.. பஸ் வர நேரமாகுமே. வண்டியில வர்றீங்களா?” மாட்டுவண்டிக்காரர் கேட்டார். எளிய மக்களின் உபசரிப்பும் கருணை மனமும் படித்தவர்கள் பலருக்கும் இருப்பதில்லை. அடுக்குமாடி […]


தேன்கூடு போட்டி டாப் 10 – சீரியசா

August 10th, 2006 வகைகள்: தேன்கூடு, வலைப்பதிவுகள், அலசல் | 9 மறுமொழிகள் » |

பாபா போட்டி படைப்புக்களை அழகாய் விமர்சிக்கிறார். விகடன் விமர்சனக்குழு போல மதிப்பெண்கள் தருகிறார். சில நேரம் அதிகமாக எதிர்பார்க்கிறார் (விமர்சனத்துக்கே விமர்சனமா?) என்றபோதிலும் பொதுவில் ஏமாற்றவில்லை..இதுவரை அவர் மொத்தம் 4க்கு அளித்துள்ள மதிப்பெண்கள் வரிசைப்படி. ராசபார்வை… : என்ன உறவு ? – ————————‘கொங்கு’ ராசா——-சொந்தக்கதை—3.25பினாத்தல்கள்: கீழ்நோக்கியே பாயும் நீர்வீழ்ச்சி – சுரேஷ்—————–சிறுகதை———3.25உறவுகள் – —————————————————-ராசுக்குட்டி———–புதுக்கவிதை— -3.25 அஞ்சல் நெஞ்சுல – ———————————-அபுல் கலாம் ஆசாத்–ஒலிக்கவிதை—-3 உறவும் பிரிவும் ——————————————-ராசுக்குட்டி ———–சிறுகதை——–3சாயல் ——————————————————–ஜெயந்தி சங்கர்——சிறுகதை———3 எனக்கேற்ற தமிழச்சிகள்: […]


தேன்கூடு போட்டி டாப் 10

August 9th, 2006 வகைகள்: தேன்கூடு, நகைச்சுவை, கலாய்த்தல் | 19 மறுமொழிகள் » |

தேன்கூடு உறவுகள் போட்டியில் தற்போது 39 படைப்புக்கள் வந்துள்ளன. பாஸ்ட்டன் பாலா, வட்டக்குறிச்சி வாத்தியாராக மாறி எல்லோருக்கும் மதிப்பெண்கள் வழங்குகிறார். என் பங்குக்கு..டாப் 10 படைப்புக்கள் என்ன என்பதைப் பார்ப்போம். 1. உறவுகள் SK 2. உறவுகள் நிர்மல் 3. பொன்னியின் செல்லம்மா …! (சிறுகதை) கோவி.கண்ணன் 4. நவீன விக்ரமாதித்தனும், வைரஸ் வேதாளமும்! luckylook 5. உறவுகளே! (கட்டளைக் கலித்துறை) – போட்டிக்காக அபுல் கலாம் ஆசாத் 6. உறவுகளின் வேர்! K. Selvaperumal 7. […]


2060 தேர்தல்

May 12th, 2006 வகைகள்: சிறுகதை, தேன்கூடு, கதை, அறிவியல் | 11 மறுமொழிகள் » |

நாயர் டீ கடையில் கூட்டம் அவ்வளவாக இல்லை. நண்பர்களை தேடினேன். லாங்டன் மட்டும்தான் கிடைத்தான். அமெரிக்கன். இந்தியாவைத் தெரிந்துகொள்வதில் அதிகம் பிரியம் காட்டுவான். worldmovies கோப்பில் பழைய தமிழ் படங்களை பார்த்துவிட்டு எனக்கே தெரியாத விஷயங்களை அலசுவான். சிலநேரம் எரிச்சலூட்டுமளவுக்கு கேள்வி கேட்பான். தியாகராஜ பாகவதர் என்கிற யாரோ ஒரு பழம் பெரும் நடிகர், இவனுக்கு அவர்மேல் உயிர். என் தாத்தா அவரைப்பற்றி சொல்ல கேள்விபட்டிருக்கிறேன். இவன் நக்கலாய் பேசுகிறானா இல்லை உண்மையிலேயே புகழ்கிறானா என பலமுறை […]