தீண்டுமை

February 21st, 2017 வகைகள்: கட்டுரை, அறிவியல், அலசல் | மருமொழிகள் இல்லை » |

சுமார் 2500 வருடங்களுக்கு மெய்யியலில் ஒரு முக்கியமான கேள்வி எழுந்தது. ‘உணர்வுகளில் பிரதானமானது எது?’ பிளேட்டோவின் பக்கம் சிலரும் அரிஸ்டாட்டிலின் பக்கம் சிலருமாய் இந்த விவாதம் தொடர்ந்தது. இன்றும் மெய்யியலில் விவாதிக்கப்படும் ஒரு விஷயமாய் இது இருக்கிறது. பிளேட்டோ பார்வைத் திறனே முதன்மையானது என்றார். மெய்யியலின் வரலாற்றில் அதுவே வெற்றி பெற்ற தரப்பாகும். ஆனால் அரிஸ்டாட்டில் தொடுவுணர்வையே முதன்மையானது என்றார். தொடு உணர்வு உயிர்களுக்கெல்லாம் பொதுவானது, அடிப்படையானது என்றாலும் மனிதனில் அது மிக நுட்பமானதாக செயல்படுவதாலேயே மனிதன் […]


அறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து

February 21st, 2017 வகைகள்: கட்டுரை, கிறீத்துவம், அறிவியல், அலசல் | மருமொழிகள் இல்லை » |

கிறீத்துவத்தின் வரலாற்றை எழுதிய பால் ஜான்ஸன் அதை ஒரு சர்ச்சையிலிருந்து துவங்குகிறார். அவரது கணிப்பில் கி.பி 50க்கருகில் கூடிய ஜெருசலெம் சங்கம் (Council of Jerusalem1) முதல் அதிகாரபூர்வமான உலகளாவிய நோக்குகொண்ட கிறீத்துவம். அதில் ஜெருசலேமை மையமாகக் கொண்ட யூத கிறீத்துவர்களுக்கும் கிரேக்க பகுதிகளில் மதம் மாறியிருந்த ‘டயஸ்பரா’ கிறீத்துவர்களுக்குமிடையேயான சர்ச்சைக்கு தீர்வுகாணப்பட்டது. இதில் இயேசுவுக்குப்பின் கிறீத்துவத்தினை நிறுவி வளர்த்த இரு ஆளுமைகள் இராயப்பர் (Peter) மற்றும் சின்னப்பர் (Paul) நேரடியாக விவாதித்து, கலந்தாலோசித்து முடிவுகளை அடைந்தனர். […]


ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை

November 11th, 2011 வகைகள்: சமூகம், செய்தி விமர்சனம், தொழில் நுட்பம், ஜப்பான், இந்தியா, இயற்கை, கட்டுரை, அறிவியல், அலசல் | 4 மறுமொழிகள் » |

மீண்டுமொருமுறை கூடங்குளம் கொதிநிலையை அடைந்துள்ளது. இந்தமுறை இன்னும் அதிக வேகம், இன்னும் அதிக வெப்பம். இது இறுதிகட்டவாய்ப்பு என்பதை மக்கள் உணரந்துள்ளனர். கேள்விப்பட்டவரை அனைத்து தென் தமிழக மாவட்டங்களிலிருந்தும் பல தரப்பு மக்களும் ஒன்றாய் நின்று தங்கள் எதிர் குரலை எழுப்பிக்கொண்டிருக்கின்றனர். வயிறு வற்றிப்போய் மனம் பசித்துக் கொண்டிருக்க 140 பேர் பத்தாம் நாளாகஉண்ணாவிரதத்தில் இருக்கின்றனர், சிலர் நீர் கூட அருந்தாமல். ஊடகங்களோ பட்டும் படாமல் இதை வெறும் ஒரு பத்தி செய்திக்குறிப்பாக்கிக்கொண்டிருக்கின்றன. பலரும் ஏதோ திடீரென […]


பிறவி – சிறுகதை

July 22nd, 2008 வகைகள்: சிறுகதை, கதை, அறிவியல் | 16 மறுமொழிகள் » |

எனக்கு மறுபிறவியில நம்பிக்கையிருந்ததில்ல. நான் ஒரு கிரிஸ்ட்டியன். இயேசு மேகம் புடைசூழ கூசும் ஒளிக்கீற்றுக்களின் நடுவாப்ல, சுத்தியும் குட்டிச் சிறகு முளைத்த பச்சிழம் குழந்தைகள் தங்கள் இயல்புகளை மீறிய வாத்தியங்களை வாசிச்சிட்டிருக்கையிலே மறுபடியும் வந்து நம்மையெல்லாம் இரட்சிப்பார் என்பதை முழுமையாக நம்பினேன். நான் ஒரு அறிவியல் ஆய்வாளன் கூட. நாமெல்லாம் இறந்துபோய் நம்முடைய உடல் அணுவணுவா சிதைஞ்சி இந்த பூமியில் இருக்கும் எண்ணற்ற அனுக்களோடு கலந்து நிலைத்து நிற்போம் என்கிற அறிவியல் after life கருத்தோடு ஒத்துப்போனாலும் […]


வசியம்

July 9th, 2008 வகைகள்: சிறுகதை, கதை, அறிவியல் | 12 மறுமொழிகள் » |

சரியாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 2003ல் என் முன்னோர்கள் இங்கே வந்திருக்காங்க. அப்போ இந்த இடத்துக்குப் பெயர் அமெரிக்கா. இந்தியா எனும் ஒரு நாட்டிலிருந்து வெறும் ஏரோப்ளேன் என்கிற பழம் ஊர்தி ஒன்றில் 24 மணி நேரங்கள் பயணித்து இந்த இடத்துக்கு வந்து செட்டில் ஆயிருக்காங்க. நம்பவே முடியல. நியூ யார்க் எனறழைக்கப்பட்ட பகுதி இப்போ ஏரியா 911 ஆயிடுச்சு. இந்தியாவில் என் பெற்றோர்கள் வாழ்ந்த தென்பகுதி அப்போ கன்னியாகுமரி. இப்போ கடலில் மூழ்கியது போக மீதமிருக்கும் […]


ஏன்யா சண்ட போட்டுக்குறீங்க?

March 26th, 2008 வகைகள்: ஆன்மீகம், இயற்கை, குறும்படம், அறிவியல் | ஒரு மறுமொழி » |

இது அறிவியலா? ஆன்மிகமா?


E=MC^2 தொடரும் சிந்தனைகள்..

March 24th, 2008 வகைகள்: ஆன்மீகம், அறிவியல் | 10 மறுமொழிகள் » |

முந்தையப் பதிவுகள் http://cyrilalex.com/?p=400 http://cyrilalex.com/?p=401 இதுவரை எழுதிய இரண்டு பதிவுகளிலிருந்தும் ஆன்மிகமும் அறிவியலும் மனிதனின் கேள்விகளுக்கு விடைகளைத் தர முயல்கின்றன என எழுதியிருந்தேன். மனிதன் அறிதிறன் கொண்டவன் மட்டுமல்ல உணர்திறனும் கொண்டவன். கோபம், பொறாமை, காமம், மகிழ்ச்சி, சோகம் என இயல்பான உணர்ச்சிகளைக் கொண்டவன் மனிதன். வெறும் உணர்ச்சியை மட்டும் உடைய மனிதன் மிருகம் மட்டுமே. அறிவின் மூலமே அவன் மனிதத் தன்மையை அடைகிறான். பிறக்கும் குழந்தைக்கு இந்த உணர்ச்சிகள் எல்லாமே இருக்கின்றன. அறிவைச் சேர்க்க சேர்க்க […]


சற்றுமுன் உள்ளூர் செய்திகள்

February 19th, 2008 வகைகள்: சற்றுமுன், அறிவியல் | மருமொழிகள் இல்லை » |

சற்றுமுன் Feb 15 அன்று ஒரு வருட பிறந்த நாளை கொண்டாடியது. அதை முன்னிட்டு சற்றுமுன் உள்ளூர் செய்திகள் எனும் புது சேவையை உருவாக்கியுள்ளோம். இது நீங்கள் வசிக்கும் இடத்தில் நிகழும், உருவாகும் செய்திகளைப் பகிர்ந்து கொள்ள ஒரு தளம். இங்கே யார் வேண்டுமானாலும் ஒரு படிவத்தை பயன்படுத்தி செய்திகளை அனுப்ப முடியும். மட்டுறுத்தலுக்குப் பின் செய்தி வெளியிடப்படும். இந்த சேவை குறித்து உங்கள் கருத்துக்களை வரவேற்கிறோம். மிக எளிய முறையில் பயன்படுத்த ஏதுவானது. சற்றுமுன் ஒரு […]


பாடலாசிரியர்கள், பாடகர்கள் தேவை!

January 15th, 2008 வகைகள்: பதிவர்வட்டம், அறிவியல் | 7 மறுமொழிகள் » |

H1Bees, பாடல் என பல தமிழ் இசைத் தொகுப்புக்களை (Albums) உருவாக்கிய இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவராஜன் உங்கள் லிரிக்ஸ் ஐடியாக்களை, பாடல் வரிகளை வரவேற்கிறார். அண்மையில் அவரின் ஒரு ட்யூனுக்கு வரிகள் எழுதினேன். விரைவில் அது குறித்த பதிவு இடுகிறேன். எளிய மெலடிகளுக்கு அழகாய் பின்னணி சேர்த்து, மெட்டுக்கு முக்கியத்துவம் தரும் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த். புதியவர்களுடன் வேலை செய்வதில் ஆர்வம் காட்டுகிறார். இவரது ‘பாடல்’ தொகுப்பு குறித்த என் குரல் பதிவு இங்கே. ஸ்ரீகாந்தின் இணைய தளம் […]


உயிரின் நீட்சி (இன்னொரு நச் கதை)

December 17th, 2007 வகைகள்: சிறுகதை, கதை, அறிவியல் | 15 மறுமொழிகள் » |

முதல் நச் கதையில் நச் குறைவாக இருந்தது என்றும் ‘ஹாலிவுட் ஸ்டைலில்’ யோசிங்க என்றும் வந்த பின்னூட்டங்களின் விளைவாக இரண்டாவது நச் கதை. உயிரின் நீட்சி  ================================================  உலகின் கடைசி மனிதன் தாந்தான் என அவன் அறிந்து 7 வருடங்கள் ஆகிவிட்டன. செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட முதல் ஆள் ஆடம் ஸ்மித். மூன்று வருட மிஷன் அது. பல நாட்களுக்கு பூமியுடன் எந்தத் தொடர்புமில்லாதிருந்தது. அவன் பூமி திரும்புகையில் அவனுக்கு கிடைத்தது இங்கிருந்து அனுப்பப்பட்ட கடைசி செய்தி. “ஆடம்! […]