தீபாவளி ரிலீஸ்

November 13th, 2007 வகைகள்: சற்றுமுன், புதுமை, அறிவியல் | 5 மறுமொழிகள் » |

என்னங்க. தீபாவளி ரிலீஸ் எல்லாம் ஒவ்வொண்ணா பாத்துட்டே இருக்கீங்களா? சற்றுமுன் குழுவும் ஒரு தீபாவளி ரிலீஸ் விட்டிருக்கு. இதுவரை விமர்சனங்களெல்லாம் நல்லாயிருக்குதுன்னு சொல்லுது. நீங்களும் ஒரு எட்டு போய் பாக்கலாம். பயன்படுத்தலாம். இணைய வரி விளம்பரங்கள் மூலம் பொருட்களை, சேவைகளை விற்பதுவும் வாங்குவதும் உலகளவில் பிரபலமாகி வருகிறது. இந்த சேவையை தமிழில் வழங்குவது சற்றுமுன் வரி விளம்பரம்.(சுட்டிகள் கீழே) பயன்படுத்தப்பட்ட பொருட்களை விற்கும் பழக்கம் நம்ம ஊர்ல இன்னும் பிரபலமாகவில்லை. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் இதற்கென […]


2007ன் சிறந்த கண்டுபிடிப்புக்கள்

November 5th, 2007 வகைகள்: புதுமை, அறிவியல் | 4 மறுமொழிகள் » |

டைம் பத்திரிகை 2007ன் தலைசிறந்த கண்டுபிடிப்புக்கள் சிலவற்றை பட்டியலிட்டுள்ளது. எனக்குப் பிடித்த சில. இந்த வருடத்தின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பாக ஐஃபோன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அட! நம்ம ஃபோன். தொலைபேசி என்றொரு சாதாரண உபகரணம் இன்று பல்பயன் உபகரணமாகிவிட்டது. ஐஃபோன் கையடக்க எந்திரங்களின்  அதிமுக்கிய முன்நகர்வு.  ஐஃபோனின் முதல் சில பயனர்களில் நானும் ஒருவன் என்கிற வகையில் மகிழ்ச்சியென்றாலும், பட்டியலில் இடம்பெற்றுள்ள பல கண்டுபிடிப்புக்களை காண்கையில் ஐஃபோன் ஒரு சிறிய படிக்கல்லாகவே தோன்றுகிறது. காற்று(சுழல் விசை) மற்றும் சூரிய ஒளியின் சக்தியால் மட்டுமே இயங்கக் கூடிய சிற்றுந்து நகர்வலம் வர மின்விசை சிற்றுந்து.  வெறும் காற்றில் ஓடக் கூடிய சிற்றுந்து. இந்தியாவின் […]


வருக! வருக! என வரவேற்கிறேன்.

September 17th, 2007 வகைகள்: அறிவியல் | 21 மறுமொழிகள் » |

புதுமனை புகுவிழாவுக்கு வாங்க. மொய்யாகவோ மெய்யாகவோ அல்லது பொய்யாகவோ ஒரு பின்னூட்டம் போடுங்க. வந்ததுக்கு நன்றி.


2006ன் அரிய கண்டுபிடிப்புக்கள்/உருவாக்கங்கள்

November 7th, 2006 வகைகள்: செய்தி விமர்சனம், வியாபாரம், இணையம், அறிவியல் | 9 மறுமொழிகள் » |

இந்த வார டைம் 2006ன் அரிய கண்டுபிடிப்புக்கள்/உருவாக்கங்களை பட்டியலிட்டுள்ளது. காற்றிலிருந்து குடிநீர் பெறுவது முதல் காணாமல் போனவற்றை கண்டுபிடிப்பது வரை பல புதிய கருவிகளை கண்டுபிடித்திருக்கிறார்கள். பாயன்பபட்டுக்கு உதவும் பொருட்களையே இதில் பட்டியலிட்டுள்ளார்கள். என்னை கவர்ந்த சில கீழே.1. குடும்ப இஸ்திரிசூடான இஸ்திரி பெட்டியை துணிகளின்மேல் வைத்துவிட்டு போய் ராங் கால் அழைப்பை துண்டித்துவிட்டு வருமுன் அது எரிந்து போனதால் வரும் பயங்கர விளைவுகளை (நன்றி தமிழ் சினிமாக்கள்) இனி தவிர்க்கலாம். இந்த இஸ்திரி பெட்டியை துணிமேல் […]


2060 தேர்தல்

May 12th, 2006 வகைகள்: சிறுகதை, தேன்கூடு, கதை, அறிவியல் | 11 மறுமொழிகள் » |

நாயர் டீ கடையில் கூட்டம் அவ்வளவாக இல்லை. நண்பர்களை தேடினேன். லாங்டன் மட்டும்தான் கிடைத்தான். அமெரிக்கன். இந்தியாவைத் தெரிந்துகொள்வதில் அதிகம் பிரியம் காட்டுவான். worldmovies கோப்பில் பழைய தமிழ் படங்களை பார்த்துவிட்டு எனக்கே தெரியாத விஷயங்களை அலசுவான். சிலநேரம் எரிச்சலூட்டுமளவுக்கு கேள்வி கேட்பான். தியாகராஜ பாகவதர் என்கிற யாரோ ஒரு பழம் பெரும் நடிகர், இவனுக்கு அவர்மேல் உயிர். என் தாத்தா அவரைப்பற்றி சொல்ல கேள்விபட்டிருக்கிறேன். இவன் நக்கலாய் பேசுகிறானா இல்லை உண்மையிலேயே புகழ்கிறானா என பலமுறை […]