அமெரிக்கத் தேர்தல் களம்

May 23rd, 2008 வகைகள்: புஷ், அமெரிக்கா, அலசல் | ஒரு மறுமொழி » |

இரண்டு பெரிய கட்சிகள். கட்டுக்கோப்பான உட்கட்சி ஜனநாயகம். பெரும்பாலும் இடதும் வலதுமான வாக்காளர்கள், நடுவில் சில கட்சி சார்பற்றவர்கள். முதல் பார்வையில் எளிதாகவும், சிக்கலற்றதாகவும் தெரியும் அமெரிக்கத் தேர்தல் களத்தின் மேல்திரையை விலக்கிப்பார்த்தால் அதன் குழப்பம் மிகுந்த நிலை உலகின் வேறு ஜனநாயகங்களிலிருந்து வேறுபட்டதல்ல என்பதை உணரலாம். அமெரிக்காவில் பல அரசியல் கட்சிகள் இருந்தும் குடியரசுக்கட்சி(Republican Party) மற்றும் ஜனநாயகக் கட்சி(Democratic Party) இரண்டும் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்டவையாகவும் அமெரிக்க அரசியலை நிர்ணயிப்பவையுமாக உள்ளன. பொதுவாகக் குடியரசுக் […]


Flippancy என்றால் என்ன? – ஓ பக்கங்களை முன்வைத்து

May 16th, 2008 வகைகள்: இணையம், கட்டுரை, அலசல் | 22 மறுமொழிகள் » |

வலையுலகின் மீதான ஊடகங்கள், ஊடகவியலாளர்களின் பார்வைகள் பொத்தம் பொதுவாக வலைப்பதிவுகளின் சில எதிர்மறைக் கூறுகளை முன்வைத்தே அமைந்துள்ளன என எண்ணத்தோன்றுகிறது. அரசு பதில், ஜூனியர் விகடன் ரிப்போர்ட் என வலைப்பதிவுகளில் சில நேரங்களில் பளிச்சென கண்ணுக்குத் தெரியும் கறைகளை மட்டுமே இவர்கள் கண்டுகொள்கிறார்கள். இப்படி இணையம் குறித்த எதிர்மறை கருத்துக்களை உருவாக்குவது மக்களிடம் ஒருவித ஆர்வத்தை தூண்டிவிடும் என்றே நினைக்கிறேன். என்னதான் எழுதுகிறார்கள் இணையத்தில் என மக்கள் தேட ஆரம்பிக்கலாம். ஞானி இந்த வார ஓ பக்கங்களில் […]


ஜார்ஜ் புஷ்ஷின் சமையல் குறிப்புக்கள்

May 5th, 2008 வகைகள்: நகைச்சுவை, நையாண்டி, புஷ், கலாய்த்தல், அமெரிக்கா, அலசல் | 9 மறுமொழிகள் » |

இந்தியன் மிடில்கிளாஸ் டின்னர்: ஒருவருக்கு ஒரு அரிசி வீதம் எடுத்துக்கொள்ளவும். அதை குழந்தைகள் விளையாட வைத்திருக்கும் சமையல் பாத்திரத்தில் இட்டு நன்றாக வேகவைக்கவும். அதிலிருந்து வடித்தெடுத்த கஞ்சியை ஒரு கப்பில் சேமித்து வைத்துக்கொள்ளவும். அமெரிக்க பஃபே ஒன்றின் படத்தை இணையத்திலிருந்து பதிவெடுத்து வைத்துக்கொள்ளவும். இப்போது நன்கு வெந்த அரிசியை எடுத்து அந்த பஃபே படத்தை பார்த்துக்கொண்டே சாப்பிடவும். பசி அதிகமாயிருந்தால் ஒருவருக்கு இரண்டு பருக்கைகள் எடுத்துக்கொள்ளலாம். வடித்த கஞ்சியுடன் முந்தநாள் மழையில் ஓட்டில் வழிந்த மழைத்தண்ணியை சேமித்து […]


இயேசுவின் பின்னால்…

March 31st, 2008 வகைகள்: சமூகம், மதம், ஆன்மீகம், இயேசு, கிறீத்துவம், அலசல் | 10 மறுமொழிகள் » |

கிறீத்துவம் பரவலாகத் தீண்டாமைக் கொடுமையிலிருந்து பல சாதிகளை மீட்டெடுத்து அவர்களுக்கு ஒன்றுமில்லையென்றாலும் கல்வியை மட்டுமேனும் வழங்கியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆயினும் சாதி அடையாளங்களை கிறீத்துவர்கள் முற்றிலும் துறக்கவில்லை என்பது கிறீத்துவத்தின் அடிப்படைகளை மீறிய செயலே. கிறீத்துவம் பரவிய நாட்க்களிலேயே சாதி அடையாளத்துடன் கிறீத்துவர்கள் செயல்படக்கூடாது என்கிற தீர்க்கமான முடிவு இருந்திருக்குமானால் இன்று எறையூர் போன்ற பிரச்சனைகள் இருந்திருக்காது. அதே நேரம் அப்படி ஒரு நேர்மையான முயற்சி இருந்திருக்குமானால் கிறீத்துவம் இந்தியாவில் இத்தனை தூரம் பரவியிருந்திருக்காது. […]


E=MC^2 அல்லது Oh! My God!

March 20th, 2008 வகைகள்: ஆன்மீகம், அலசல் | 30 மறுமொழிகள் » |

அறிவியல் கடவுளின் இருப்பை நிரூபிக்கிறது எனும் புத்தகத்தின் அட்டைப் படத்தோடு நம் நட்சத்திரம் கண்ணபிரான் ஒரு சீரியல் பதிவப் போட்டு சில சிந்தனைகளை முன்வைத்திருக்கிறார். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு அது நகைச்சுவைப் பதிவாகவும் உள்ளவர்களுக்கு அது ஆன்மீகப் பதிவாகவும் தோன்றி, அவ்வாறே வகைப்படுத்தப்பட வாய்ப்புக்கள் உண்டு. (ச்சும்மா அப்பப்ப நக்கல எடுத்து விடுவேன் கண்டுக்காதீங்க. ப்ளாக்ல எதிர்வினைகளெல்லாம் நக்கலோடத்தான் இருக்கணுமாம்.) இந்த இடத்துல ஒரு டிஸ்கி :அதாவது கீழே சொல்லப்படுபவை அனைத்தும் நம்ம சொந்தக் கருத்துங்க(Unless expressly […]


தகாத வார்த்தைகள்

February 1st, 2008 வகைகள்: பதிவர்வட்டம், வலைப்பதிவுகள், கட்டுரை, அலசல் | 45 மறுமொழிகள் » |

என்ன ஆயிடுச்சுன்னு எல்லாரும் இப்டி காலிலே சிறுநீர் கொட்டின மாதிரி துடிக்கிறீங்க? யோனி, ஆண்குறி என்பவை கெட்ட வார்த்தைகளா? அவை கெட்டதைச் செய்யும் உடலுறுப்புக்களா? இவற்றை தகுந்த இடங்களில் தாராளமாகப் பயன்படுத்தலாம். இன்றைய தமிழ் இலக்கியத்தில் அந்தரங்கங்கள் பரவலாகப் பேசப்படுகின்றன. இது வரவேற்கத் தகுந்த பழக்கம்தான். அந்தரங்கங்களை மறைத்து வைத்துவிட்டதாலேயே அங்கு குற்றங்கள் மிக அதிகமாக நடக்கின்றன. ஏனெனில் அக்குற்றங்களை எளிதில் வெளியில் சொல்ல முடியவில்லை. கொங்கை, முலை எனும் வார்த்தைகள் நம் பழம் இலக்கியங்களில் தாராளமாகப் […]


செய்திகள் வாசிப்பது … – 2

February 13th, 2007 வகைகள்: செய்தி விமர்சனம், குரல் பதிவு, அலசல் | 11 மறுமொழிகள் » |

முந்தைய குரற்பதிவு அலசலில் இன்று… 1. தேன்கூடு கல்யாண் – ஒன்றுபடுவோம், செயல்படுவோம் 2. கர்நாடக பந்த் ஆங்காங்கே கலவரங்களோடு நிறைவுற்றது 3. உலகக் கோப்பைக்கான இந்திய டீம் அறிவிக்கப்பட்டுள்ளது 4. அமிதாப் குடியரசு தலைவராக பரிந்துரைக்கப்படலாம் 5. ஜல்லிக்கட்டில் இருவர் பலி 6. ஹெல்மட் கட்டாயமாக்கும் சட்டம் வரையப்பட இருக்கிறது 7. சர்வேசனின் பாட்டுக்குப் பாட்டு தொடர்ச்சி உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


ஸ்ரீசாந்த் அடிக்காத சிக்சர்

February 11th, 2007 வகைகள்: நகைச்சுவை, போட்டி, விளையாட்டு, இந்தியா, அலசல் | 30 மறுமொழிகள் » |

சரியாக இரண்டரை ஆண்டுகளுக்குப்பின் ஒரு கிரிக்கட் போட்டியை முழுதாக நேற்று பார்த்தேன். 50″ ப்ளாஸ்மா டிவியிலும் இந்திய க்ரிக்கட் பழையமாதிரிதான் தெரிந்தது. இப்படி ஒரு மேட்ச்சை தோற்பது நம்ம மக்களுக்குத்தான் சாத்தியம். கமண்ட்ரி மட்டும் இல்லாமல் போயிருந்தால் மிட் நைட் மசாலாவுக்கு மாறியிருப்பொம். அதுவும் சிவராமகிரிஷ்ணன், பந்தை சுழற்றுவதைவிட நாக்கை நன்றாகவே சுழற்றுகிறார்.இரண்டு ஓவர்களே இருக்கும் நிலையில் ஒரு கமெண்ட் விட்டார். “இனி (விளையாட்டின்) எல்லா முடிவுகளும் சாத்தியம். 1. இலங்கை ஜெயிப்பது 2. இந்தியா ஜெயிப்பது. […]


செய்திகள் வாசிப்பது சிறில் அலெக்ஸ்

February 7th, 2007 வகைகள்: செய்தி விமர்சனம், இந்தியா, குரல் பதிவு, அலசல் | 42 மறுமொழிகள் » |

என் முதல் குரல் பதிவு. பிழைகளை பொறுக்கவும் (சொல் + கருத்து)உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடவும் (எழுத்தில் ஹி ஹி) உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


நரகாசுரன்

September 28th, 2006 வகைகள்: சினிமா, தகவல், பாடல், ஆளுமை, இந்துமதம், அலசல் | 3 மறுமொழிகள் » |

நரகாசுரன் என்று தலைப்பை தந்துவிட்டு என்ன எழுதுவதென்றே தெரியவில்லை. தலையை சொறிந்துகொண்டிருக்கும்போது தோன்றிய சில சிந்தனைத் துளிகள்.வரலாறு வல்லவர்களால் எழுதப் படுகிறது. வெற்றிக்களிப்பே வரலாற்றில் மேலோங்கி நிர்க்கிறது தோல்வியில் காயப்பட்டவர்களின் முனகல்கள் அவர்களின் நெரிக்கப்பட்ட தொண்டைகளிலேயே நின்றுபோகின்றன.விடாது கறுப்பு தன் பதிவொன்றில் நரகாசுரனின் கதை/வரலாறுபற்றிய மாற்று செய்தி ஒன்றை தந்திருக்கிறார்.இடைக்குறிப்பு: விடாது கறுப்பிவின் பதிவுகளில் தனிமனித/இன எதிர்ப்புகளை நீக்கிவிட்டால் சில நல்ல தகவல்கள் இருக்கின்றன. அவரை ஒதுக்கிவிட்டவர்கள் மீண்டும் படிக்கவேண்டும், நேர் அல்லது எதிர்வினைகள் ஆற்றவேண்டும் என […]