ரெம்ப நாளைக்கப்புறம் ஒரு சிறுகதை எழுதினேன். இந்த வார தமிழோவியத்தில் வந்துள்ளது செல்வம்.——————————- ‘மதுரை 20 கி.மீ’. ஊரை விட்டு வெகுதூரம் வந்துவிட்டதை உணர்ந்தான் செல்வம். காலையில் வாங்கிய அடி இன்னும் முதுகில் வலித்தது. அல்லது வெறும் தோன்றலா தெரியவில்லை. ‘மதுரையில எறங்கி ஊருக்குத் திரும்பப் போயிரலாமா’ யோசித்தான். சட்டை பாக்கெட்டில் இருந்த காசை எடுத்து கால்சட்டை பாக்கெட்டில் வைத்துவிட்டு பேருந்தின் சன்னலோரம் தலை சாய்த்தான். விழிக்கும்போது தாம்பரம் வந்திருந்தது. விடியலிலேயே பரபரப்பாகிவிட்ட சென்னையை வேடிக்கைபார்த்துக்கொண்டிருக்கையில் இங்கே […]