திருக்குறள் குழுமம்

December 15th, 2006 வகைகள்: இலக்கியம், குறள், அறிவிப்பு | 19 மறுமொழிகள் » |

பதிவுகளில் குறள் விளக்கங்களை ‘மயிலை மன்னார்’ தருவதுபோல வேறு யாரும் தரவில்லை. திருக்குறளுக்கென்றே ஒரு பதிவைத் துவங்கி ஒவ்வொரு பதிவிலும் ஒரு அதிகாரமென எளிமையாய் இனிமையாய் விளக்கம் அளிக்கலாம் எனும் எண்ணத்தில் ஒரு பதிவை துவங்கியுள்ளேன்.இதை தனியாய் செய்வதைவிட குழுவாய் செய்வதே எளிதானதாகும் என்பதால் இந்த அறிவிப்பு.‘குறள் பக்கங்கள்’ எனும் இந்த புதிய குழுமப் பதிவில் பங்குபெற விரும்புபவர்கள் cvalex at yahoo .com அல்லது cyril.alex@gmail.com ற்கு தனிமடல் அனுப்பவும். விரைவில் எதிர்பாருங்கள் ‘குறள் பக்கங்கள்’. […]


நட்பு வாரம் – இளக்கியப் பதிவு

August 3rd, 2006 வகைகள்: தமிழ், நகைச்சுவை, இணையம், இலக்கியம், குறள் | 23 மறுமொழிகள் » |

நடப்பு வாரம் நட்பு வாரமாமே? இணைய நண்பர்களுக்கும் ஏனைய நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். நட்புக்கு நன்றி. ஐயம் நீக்கும் ஐயன் வள்ளுவன் ‘இணைய நட்பு’ பற்றி என்ன சொல்லியிருக்கிறார் எனப் பார்க்கலாம். 781. செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு. (தொடர்ந்து) நல்ல பின்னூட்டம் வழங்கும் நண்பர்களைப் பெறுவதைப்போல வேறெந்த கடினமான செயலும் இல்லை? தனிநபர் தாக்குதலிலிருந்து நம்மைக் காக்க வேறென்ன வழி? 782. நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு. அறிவுசீவி […]