“இப்படியெல்லாம் அடங்காபிடாரித்தனமா கேள்வி கேட்கற பெண்ணியவாதியா நீ? இரு இரு உன்னையெல்லாம் யாரு கல்யாணம் பண்றங்கன்னு பார்க்கறேன். அப்படி எதுனா இளிச்சவாயன் வந்து கட்டினாலும் அவன் உன்கிட்ட ரொம்ப அவஸ்தைப்படறான்னு எதுனா ஒரு தண்ணி பார்ட்டியில உளறுவான்.” இதை எழுதியது வேற யாரும் இல்லீங்க. நம்ம தல பாலபாரதியின் துணைவியார்தான். பதிவர்கள் இருவர் இல்வாழ்வில் இணைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் (பலருக்கும்) நம்பிக்கையயும் அளிக்கிறது. பாலாவின் பதிவில் இனி ஒரு பின்னூட்டமாவது விழும். அம்மணி பதிவில் பல பின்னூட்டங்கள் [...]
