முதலில். தாமதத்திற்கு (மிக X மிக X மிக) வருந்துகிறேன். எழுத்தாளர் ஜெயமோகனின் மடல் கீழே. பரிசு அனுப்ப வேண்டிய முகவரியை மின்னஞ்சல் செய்யவும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்கள். அன்புள்ள சிறில் நான் மூன்று அளவுகோல்களைக் கைக்கொண்டேன். ஒன்று , கதைகளை வாசித்தபின் கொஞ்சநாள் கழித்து அது நினைவில் நிற்கிறதா என்பது. இரண்டு, கதைகளின் கரு வழக்கமான அறிவியல்கதைக்கருகக்ளான உலக அழிவு, அறிவியல்கண்டுபிடிப்பு தவறாகப்போவது போன்றவற்றில் இருந்து சற்றேனும் வேறுபடுகிறதா என்பது. மூன்று, என்னால நம்பவே முடியலை போன்ற […]