Time Top 10: யூ ட்யூப் வீடியோக்கள்

December 15th, 2007 வகைகள்: டி.வி, இணையம், குறும்படம் | மருமொழிகள் இல்லை » |

டைம் பத்திரிகை இந்த வருடத்தின் சிறந்த 10 யூ ட்யூப் வீடியோக்களாகத் தேர்ந்தெடுத்த வீடியோக்காளில் சில. அப்படியே தமிழில் சிறந்த வீடியோக்களையும் பட்டியலிடுங்களேன். டைமின் முழு டாப்10 பட்டியல் இங்கே. வீடியோ இல்லை


இயேசு சொன்ன கதைகள் – 3

January 29th, 2007 வகைகள்: டி.வி, தமிழோவியம், ஆன்மீகம், இயேசு, கடவுள், கதை | மருமொழிகள் இல்லை » |

மருத்துவன் நோயுற்றவனுக்கேயன்றி நலமாயுள்ளவனுக்கல்ல.” இயேசு தன்னைப்பற்றி கூறிய உவமை இது.”பாவிகளை மீட்கவே வந்தேன்.” என்பது அவரது பொன்மொழி. கடவுள் பாவிகளையே தேடுகிறார், நீதிமான்களையல்ல என வெளிப்படையாகச் சொன்னவர் இயேசு. பாவி ஒருவனின் மனதிருத்தம் எத்தகையது? “உங்களில் யார் ஒருவன் தன் நூறு ஆடுகளில் ஒன்று காணாமல் போக, தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் விட்டுவிட்டு தொலைந்த ஆட்டை தேடிப்போகாமைலிருப்பான்? அதை அவன் கண்டதும் குதூகுலத்துடன் தன் தோள்களில் போட்டுக்கொள்வான். வீட்டுக்கு வந்ததும் தன் நண்பர்களையும் அண்டைவீட்டாரையும் அழைத்து,”என்னோடு கொண்டாடுங்கள், தொலைந்துபோன […]


நடையிழந்த கால்கள்தன்னில்…

January 18th, 2007 வகைகள்: சமூகம், சினிமா, டி.வி, தன்னம்பிக்கை, பொது | 7 மறுமொழிகள் » |

‘நடையிழந்த கால்கள்தன்னில் நளினத்தை பார்க்கிறேன்’. டி. ராஜேந்தரின் இந்த வரிகளை நியாபகப் படுத்தியது (நடன)இயக்குநர் லாறன்ஸ் இராகவேந்திரா தந்த பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி. ஊனமுற்றவர்கள் ஆடிய நடன நிகழ்ச்சி. ஊனம் உடலிலேதான் மனதிலல்ல என ஒவ்வொரு அசைவிலும் காண்பித்தனர். ‘காலுக்கு செருப்பில்லை எனக் கவலைப்பட்டேன் காலில்லாதவனைக் காணும்வரை’ என்பதுபோல, இத்தனை குறைகளுக்கு மத்தியுலும் வென்றுகாட்டும் இவர்கள்தான் இன்றைய தலைமுறைக்கு ஊக்கமருந்து.ஊனம் தெரியும்படியாய் உடையணிந்திருந்ததை என் மனைவி சுட்டிக் காட்டினார். ஒருவகையில் அதுதான் அவர்கள் தரும் செய்தி. கீழ்நிலைகளிலிருந்து […]


பாக்கிஸ்த்தானில் புஷ் பின்லாடன்

September 27th, 2006 வகைகள்: செய்தி விமர்சனம், டி.வி, புஷ், அமெரிக்கா, உலகம் | மருமொழிகள் இல்லை » |

பர்வேஷ் முஷ்ராஃப் ஜான் ஸ்டேவர்ட்டின் டெய்லி ஷோவில் சிறப்பு விருந்தினராய் நேற்று (9/26/2006) தோன்றினார். ஜான் ஸ்டிவர்ட்டின் டெய்லி ஷோ தினசரி செய்திகளை நகைச்சுவையோடு விவாதிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி. Fake செய்தி விவரணைகளும், செய்திப்படங்களும் சுவாரஸ்யமாகத் தருவார்கள். ஜார்ஜ் புஷ்தான் இவர்களின் ஹீரோ. ஹீரோன்னா பாட்ஷா ரஜினிமாதிரியில்ல இம்சை அரசன் வடிவேலுமாதிரி. பாக்கிஸ்தான் வழக்கப்படி (?) தேனீர் கொடுத்து வரவேற்றார் ஜான் ஸ்டிவர்ட். முதல் கேள்வியே பின் லாடன் எங்கே இருக்கிறாரரென்றுதான். அடுத்து பர்வேஷ் முஷ்ரஃபின் சுய […]


வஞ்சப் புகழ்ச்சி

July 29th, 2006 வகைகள்: டி.வி, குறும்படம், அமெரிக்கா, அறிவிப்பு | மருமொழிகள் இல்லை » |

அமெரிக்காவில் ஆட்டோக்கள் இல்லை என்கிற தைரியத்தில் ஸ்டீவன் கோல்பேர் அதிபர் புஷ்ஷை தாளிக்கும் உரை. பலர் பார்த்திருக்கலாம். இந்தமாதிரி உரைகளை ‘ரோஸ்ட்’ என்பார்கள். நம்ம ஊர்ல ‘வறுத்தெடுப்பது’.இதை பார்க்கும்போது முதலில் தோன்றுவது ‘நம்ம ஊர்ல…’ எனும் சிந்தனைதான். உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


"அம்மா, இந்த ஸ்பைடர்மேனப் பாரேன்…"

February 2nd, 2006 வகைகள்: செய்தி விமர்சனம், டி.வி, கட்டுரை, அலசல் | 10 மறுமொழிகள் » |

சன் டி.வியின் சிறப்புப்பார்வையில் ‘கணிணியில் விளையாடுவது குழந்தை, சிறுவர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு’ போன்றதொரு தொகுப்பைப் பார்த்தேன்.ஒரு அம்மாவும் அவர் மகளை கையில் வைத்துக்கொண்டு கணிணி விளையாட்டுக்கள் எப்படி பள்ளியில் விவாதிக்கப்பட்டு வீட்டில் கெஞ்சலோ கூச்சலோ போட்டு வாங்கப்பட்டு விளையாடப்படுகின்றன என்றும், இதை விளையாடுவதால் வரும் அறிவு வளர்ச்சி பற்றியும் பேட்டி கொடுத்தார்.ஒரு தலமை ஆசிரியையும் இதைப்பற்றி உயர்வாகப் பேசினார். தொகுப்பாளர், ‘இனிமேல் குழந்தைகளை வெளியே அழைத்துச்செல்லாமல் வீட்டிலேயே பொழுது போக்கவைக்கலாம்’ என ஏதோ ‘அப்படியே சாப்பிடலாம்’ தொனியில் […]


படுக்கை அறையில்…

January 18th, 2006 வகைகள்: டி.வி, தகவல், பொது, ஆளுமை | மருமொழிகள் இல்லை » |

சி. என். என் டாட் காமில் (CNN.COM) சில மாதங்களாக இலவச வீடியோ செய்தித்தொகுப்புகள் வழங்கப் படுகின்றன, அமெரிக்காவில் வசிப்பவரானால் இந்த சேவை மிகவும் பயனுள்ளதாகும். இதில் ஜெனீ மூ (JEANNE MOOS) வழங்கும் சுவையான செய்தித்தொகுப்பு வந்தவுடன் பார்த்துவிடுவேன். சில எளிய செய்திகளை, நகைச்சுவையோடும் சிலசமயம் நக்கலோடும் தொகுத்து அற்புதமாய் வழங்குகிறார். இவர் ஒவ்வொரு தொகுப்பையும் முடிக்கும் போது சொல்லும் பஞ் லைன்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். ‘படுக்கை அறையில் டி. வி பார்ப்பது கலவியைக் […]


ஒரு ஊர்ல ஒரு இளையராஜா

January 17th, 2006 வகைகள்: சினிமா, செய்தி விமர்சனம், டி.வி, பாடல், அலசல் | 6 மறுமொழிகள் » |

இளையராஜாவின் சமீபத்திய இன்னிசை நிகழ்ச்சி ஒரு ஆத்மார்த்த அனுபவமாக இருந்தது. ‘ஜனனி ஜனனி’ என ராஜா பாட ஆரம்பித்ததும் எழுந்த கரகோஷங்களைவிட கண்ணீர்த்துளிகள் அதிகம். சில தலைமுறைகளை தன் ஆர்மோனிய விரல்களில் கட்டிப்போட்டிருக்கிறார் ராஜா. இவர் வேண்டுகோளுக்கிணங்கி கூட்டம் குறைவாகவே கைதட்டியது என்றால் பாத்துக்கொளுங்கள். இளையராஜாவின் எத்தனையோ பாடல்களில் ஏதோ ஒரு மலையாளப்பாடலின் ஹம்மிங் தலைப்பு இசையாகப் பயன்படுத்தியிருந்தது எரிச்சலாகவே இருந்தது. பாரதிராஜா வந்து ஏன் இளையராஜா கர்வம்பிடித்தவராக இருகிறார் என்பதற்கு விளக்கம் அளித்துச்சென்றார். இந்த நிகழ்சிக்கும் […]