e-த்திச் சூடி

December 31st, 2006 வகைகள்: தமிழ், நட்சத்திரம், புதுமை, இலக்கியம் | 29 மறுமொழிகள் » |

e-த்திச் சூடி அமேசானில் ஆர்டர் செய்ஆர்க்கூட்டில் பழகுஇணைப்பை கைவிடேல்ஈபேயில் விற்றுவிடுஉரல்களை சேமிஊரெல்லாம் நண்பர்கொள்எண்ணியதை கூகிள் தரும்‘ஏ’ த்ளங்கள் பாப் அப் தரும்ஐயம் தீர்க்கும் விக்கிப்பீடியாஒரே மெயில் ஐடி கொள்ளேல்ஓசியிலேயே ப்ரவுசிங் செய்ஔவ் ஆர் யூவில் துவங்கு(How are you?)இஃதே e-நயம். சும்மா டைம் பாஸ் மச்சி (மச்சினி?) உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


2007 தமிழ் திரைப்படங்கள் முன்னோட்டம்

December 29th, 2006 வகைகள்: சினிமா, நட்சத்திரம், நகைச்சுவை, நையாண்டி, புதுமை | 29 மறுமொழிகள் » |

இதுக்கு முன்னால போட்ட இந்தப் பதிவ படிச்சிட்டீங்களா?தமிழ் திரையுலகத்துக்கு இது பொற்காலம். 2007ல் வெளிவர(மாட்டாத) படங்கள் பற்றிய முன்னோட்டம் நோ (Sக்கு எதிர்சொல்) ப்ரொடக்சன்ஸ் வழங்கும் ‘நிழல்':நிழல், ரெண்டு பணக்காராப் பசங்களோட கதை. அண்ணன், தம்பி, ரெண்டுபேர். ஒருத்தன் வாழ்க்கைய கொஞ்சமா எஞ்சாய் பண்றான் இன்னொருத்தன் ரெம்ப டூ மச்சா எஞ்சாய் பண்றான். அண்ணன் தியேட்டர் ஓணர். தம்பி இந்தியாவிலேயே பெரிய விளம்பரக்கம்பெனி வச்சிருக்காரு. ரெம்ப உல்லாசமான வாழ்க்கை. கடைசில யார் இதுல எயிட்ஸ் வராம சர்வைவ் […]


சுட்டமீனும் சுறாபுட்டும்

December 29th, 2006 வகைகள்: சமூகம், நட்சத்திரம், பொது, முட்டம், மீன், கட்டுரை, உணவு | 12 மறுமொழிகள் » |

(நட்சத்திரப் பதிவில் மீள் பதிவு தேவை எனும் விதிக்கேற்ப… அலைகள்..பாறைகளிலிருந்து..)நமக்கு இல்லாத பழக்கங்களை நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை. பொதுவாக நமக்கு விளங்காதவைகளை நாம் வெறுக்கவே செய்கிறோம். நம் மூளை செய்யும் வேலை அது. ஒருவருக்கு தெய்வீகமாகப்படும் விஷயங்கள்கூட மற்றவருக்கு அருவறுப்பகத் தோன்றுகிறது. நாம் சிறு வயது முதல் பழக்கப்பட்டு வந்தவைகள்தான் உயர்ந்தது என நமக்கு எண்ணத்தோன்றுகிறது. மதம், ஜாதி சார்ந்த நம் தீவிர (fanatic) மனப்பாங்குகளும் இதைப்போலத்தான்.பலநேரங்களில் ஒரு மனிதனை மதிப்பிட அவரின் பழக்கவழக்கங்களை நாம் […]


நாவல் எழுதுறேங்க….

December 28th, 2006 வகைகள்: நட்சத்திரம், முட்டம், இலக்கியம், கதை, அறிவிப்பு | 7 மறுமொழிகள் » |

(அப்படா ஒருவழியா நட்சத்திரம்னு தலைப்பில்லாத பதிவு)ஒரு நாவல் எழுதணும்னுதான் பதிவு எழுதத் துவங்கினேன். பின்பு அதையே மாற்றி முட்டம் பற்றிய பதிவாக எழுதினேன். மீண்டும் நாவல் முயற்சியில் இறங்கியுள்ளேன். இறங்கினேன்னு சொல்லலாம். ஐந்து அத்தியாயங்களுக்குப் பிறகு கிடப்பில் கிடக்கிறது நாவல்.இதுவரைக்கும் எழுதுனதுலேர்ந்து சில அத்தியாயங்கள் உங்கள் பார்வைக்கு.நாவல் தற்காலத்துல நடக்குற கதை ஒரு அத்தியாயமும், நடந்து முடிந்த கதை இன்னொரு அத்தியாயமுமாய் போகுது. (எச்சரிக்கை: கொஞ்சம் நீளமான பதிவு. )அத்தியாயம் ஒன்று : விடியல் கடலும், வானமும் […]


(மூள) நட்சத்திரம்

December 28th, 2006 வகைகள்: தமிழோவியம், நட்சத்திரம், பொது, வலைப்பதிவுகள், இணையம், அறிவிப்பு | 8 மறுமொழிகள் » |

இந்த வாரம் பாபா(Boston Balaji) விடுமுறையில் இருக்கிறதால வழக்கமா அவர் போடுறத நான் போடவேண்டியதாயிடுச்சு. ஆமாங்க. நான்தாங்க இந்த வார தமிழோவிய சிறப்பாசிரியர். நட்சத்திர வாரம், கிறிஸ்துமஸ் சிறப்பிதழ்னு எழுதி எழுதி மூளைல சரக்கு தீந்து போச்சு. (அப்பாடா தலைப்ப ஜஸ்டிபை பண்ணியாச்சு). இந்தவாரம் எல்லாத்தையும் நானே எழுதி போர் அடிக்காம நம்ம பதிவுலக நண்பர்கள் சிலரை எழுதக் கேட்டிருந்தேன். வெடி – பிரபு ராஜதுரை எங்கள் வீட்டிலெல்லாம் கிறிஸ்மஸ் ஏற்பாடுகள் தீபாவளிக்கு முன்னரேஆரம்பித்து விடும். அம்மா […]


(சிரி) நட்சத்திரம்

December 27th, 2006 வகைகள்: சமூகம், நட்சத்திரம், நிகழ்வு, நகைச்சுவை, புதுமை, இணையம், கலாய்த்தல், உலகம் | 44 மறுமொழிகள் » |

எரி நட்சத்திரம் தெரியும் அதென்ன சிரி நட்சத்திரம். கீழே படியுங்க கிச்சு கிச்சு வருதாங்க?.ஹலோ ஹவ் ஆர் யூங்க,என் பேரு A. மாந்தவன், ‘ந்’ சைலண்டுங்க. இணையத்துல வாழ்க்கை நடத்துற ஆட்களுல நானும் ஒருத்தருங்க. நிஜ வாழ்கையில எனக்கு நண்பர்கள் ரெம்ப கம்மிங்க. ஆனா எனக்கு தினம் தினம் மெயில் அனுப்புற இணைய நண்பர்கள் ஏராளமுங்க. இணையத்துல எனக்கு கெடச்ச அனுபவங்கள ஒங்களோட பகிர்ந்துக்கிறேனுங்க.முதல்ல நான் அமெரிக்காவுல தனியா இருந்தப்போ எங்கம்மா சொன்னாங்க,”ஒரு வேலக்காரப் பொண்ண வச்சுக்கடா. […]


(விண்) நட்சத்திரம்

December 26th, 2006 வகைகள்: நட்சத்திரம், பொது, ஆன்மீகம், இயேசு, இலக்கியம், கவிதை | 3 மறுமொழிகள் » |

விண்ணில் தோன்றியது வால் நட்சத்திரம்மண்ணில் விண்ணவனே நட்சத்திரம் – மன்னன்உறங்க இடமில்லா சத்திரம்உலகில் இதுவன்றோ விசித்திரம்?மாட்டுதொழுவம் மாளிகையானதுஆடும் கோழியும் தோழர்களாயினர்கந்தல் ஆடைக்கு கண்ணியம் வந்ததுகொசுவின் பாடலே தேவகானமாம்.செவியுள்ளோர்க்கு விண் பாடல் கேட்டது‘விண்ணகத்தில் இறைவன் போற்றப் படுகமண்ணகத்தில் நல்மனத்தோர் அமைதிபெறுக’இதுவே இவர் பிறப்பின் தத்துவமானது.இடையர்களுக்குத்தான் கிடைத்தது முதல் செய்திஇறைவன் பிறந்துள்ளான் என்கிற புது செய்தி – இருள்விலகிடும் என்பதே அந்நற்செய்தி.ஏரோது அரசன் கொல்லத் தேடினான்ஏழைமக்கள் காணத்தேடினர்கிழக்கின் அரசர் மூவர் வந்தனர்கிடையில் குழந்தையை வணங்கிநின்றனர்.மாளிகை பலவும் உன் பேரில் இருக்குது […]


(வாள்) நட்சத்திரம்

December 26th, 2006 வகைகள்: சமூகம், சினிமா, நட்சத்திரம், வலைப்பதிவுகள், கட்டுரை, உலகம் | 34 மறுமொழிகள் » |

போர்வாள்அரிது அரிது மானிடராய் பிறப்பதரிது எனப்பாடிய பாட்டி இன்றிருந்தால் போர், கலகம் இல்லாத இடத்தில் பிறப்பதரிதுன்னு சொல்வாங்களோ என்னவோ? போர் பூமியில் வாழும் சாமான்யர்களை எண்ணிப்பார்க்கவைத்தது மணிரத்தினத்தின் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’.அமுதா, போர் காரணமாய் புலம் பெயர்ந்து, தன் உறவுகளையும், உணர்வுகளையும் பிறந்தமண்ணில் புதைத்துவிட்டு எங்கோ அடைக்கலம்புகும் ஆயிரக்கணக்கானோரின் பிரதிநிதியாகத் தெரிகிறாள். அமுதாவுக்கு கிடைத்ததுபோல போகும் இடத்தில் எத்தனை வசதிகள் வந்தபோதும் உள்ளே எரிந்துகொண்டிருக்கும் உணர்வுகளை எவராலும் தொலைக்க முடிவதில்லை. புலம் பெயர்ந்தவர்களின் ஏக்கமயமான துயரம் ஒருபக்கமிருக்க போர்க்களங்களின் […]


(வால்) நட்சத்திரம்

December 25th, 2006 வகைகள்: சமூகம், நட்சத்திரம், பொது, அறிவிப்பு | 68 மறுமொழிகள் » |

(மீள்)அறிமுகம் வலைப்பதிவு துவங்கி ஒரு வருடம் ஆகிறது. நூத்தி சில பதிவுகள், சில பரிசுகள், பல பாராட்டுக்கள், அப்பப்ப ஏச்சுக்கள் என வருடம் ஓடினதே தெரியவில்லை. தமிழ் பதிவுக்கு எப்படி வந்து சேர்ந்தேன் என்பதே மறந்துவிட்டது. நண்பர் ஜோவின் உதவி மடல்களை நன்றியுடன் நினைவுகூறுகிறேன். முதலில் துவங்கியது ஒரு ஆங்கிலப் பதிவு. ரெம்ப கஷ்டப்பட்டு அதில் சில பதிவுகள் அப்பப்ப போட்டுவிடுகிறேன். (அட பத்து பதிவத் தாண்டிடுச்சுங்க). அடுத்ததாக நான் அப்பப்ப நினைத்து வியப்புறும் அலைகள் பாறைகள் […]