கவி தந்த விதை -5: உன்னைப் பார்த்த பின்பு

March 22nd, 2007 வகைகள்: க.த.வி, கவிதை | 6 மறுமொழிகள் » |

உன்னைப் பார்த்தபின்பு…உன்னைப் பார்த்தபின்பு,அத்தைப் பெண்கள் ராட்சஷியாயினர்.முத்தச் சத்தம் மந்திரமானதுஅப்பா திட்ட சிரிப்பு வந்ததுஅம்மாவின் கோலம் கிறுக்கலானதுஅண்ணியும் அண்ணனும் அன்னியராயினர்.நண்பனின் கேலி வாழ்த்தாய்ப் போனதுநண்பிகளெல்லாம் தங்கைகளாயினர்.அறத்துப்பாலும் ‘இன்பம்’ தந்ததுதிறந்த விழிகளில் கனவுகள் தோன்றினகாக்கைச் சத்தம் பாடலானதுகாகித மலர்களும் தேனைச் சொறிந்தனகட்டில், மெத்தை கல்லறையானதுகனவும் நினைவும் ஒன்றாய்ப் போயினகவிதைப் புத்தகம் நிரம்பி வழிந்ததுஆயிரம் பென்சில்கள் உயிரை இழந்தனகுளியலறையில் சீட்டியடிக்கிறேன்விடியும் பொழுதுதான் உறங்கப் போகிறேன் அலையும் விழிகள் உனையேத் தேடும்கலையும், பாட்டும் அற்பமாய்த் தோன்றும்நிலவும் சிறுக்கும், இரவை வெறுக்கும்உயிரை உனது உருவம் […]


கவி தந்த விதை -4: காதல் மாய உலகம்

February 26th, 2007 வகைகள்: சினிமா, க.த.வி, கவிதை | 8 மறுமொழிகள் » |

காதல் மாய உலகம் சிலந்தி வலையில் சிறுத்தை மாட்டும் வரம்கொடுக்கும் தேவதைகள் உலாவரும் காடு, காதலெனும் மாய உலகம். அங்குள்ள குரங்குகளும் அழகானவை.சிறகுமுளைத்த சிறுவர்களின் கூட்டமொன்று எப்போதும் இசையெழுப்பிக்கொண்டிருக்கும். அங்கே, பெண்மயில்கள் தோகை விரிக்கும் கவிஞர்கள் வாயடைக்கக் கற்கள் கவிபாடும் வானங்கள் பூமியில் இயங்கும் நட்சத்திரங்களைப் பறிக்க இயலும். மான்கள் வேட்டையாட ஆண்கள் மாட்டிக்கொள்வர். புத்தகங்களுக்குள் இறகிருக்காது பறவையே இருக்கும். ஓடுமீன் எல்லாமே உறுமீன்கள் இங்கே. நிலவுகள் தேய்வதில்லை! ஆம், காதல் தேசத்தில் பல்லாயிரம் நிலவுகள். வருடங்கள் […]


கவி தந்த விதை -3: வெள்ளிக் கொலுசொலி வீதியில் கேட்டால்

February 20th, 2007 வகைகள்: க.த.வி, கவிதை | 4 மறுமொழிகள் » |

உன் வெள்ளிக்கொலுசொலிவீதியில் கேட்டால்அத்தனை ஜன்னலும் திறக்கும்.உன் பார்வைகொஞ்சம்விலகிவிட்டால்ஆயிரம் கண்கள் துளைக்கும்.உன் எச்சில் சோற்றைகாகம் தின்றால்சாபம் பட்டே இறக்கும்.நீ செதுக்கிப் போட்டபென்சில் துகள்கள்கவிதையை விடஇனிக்கும்.உன் வீட்டுப் பூனைஇங்கு வந்தால் என்தட்டுச் சோறு கிடைக்கும்.ஒட்டுப்பொட்டைதவறவிட்டாய்என் புத்தகம் தேடுஇருக்கும்.நீமருதாணியை பூசிக்கொண்டால்மருதாணிச் செடிசிவக்கும்.நீமொட்டை மாடிக்குவந்து நின்றால்எங்கும்தலைகள் முளைக்கும். நீ அழகிப் போட்டியில்கலந்துகொண்டால்அழகே தோற்றுப் போகும்.நீ முடி விலக்கும்நளினம் கண்டுமேகம் விலகிப் போகும்.நீ சூடிய பூவைமீண்டும் விற்கும்பூக்கடைகளில்கூட்டம்.நிலவை நீயும்கேட்டுக்கொண்டால்நிதமும் பிறையாய்ப்போகும்.உன் வீட்டுக்கதவுதிறந்திருந்தால்வைகுண்ட ஏகாதசி.உன் முகத்தைக்கூந்தல் மறைத்ததனால்பகலில் நடுநிசி.விதைத்தவர்: வைரமுத்துவளர்த்தவர்: சிறில் அலெக்ஸ் இந்தப் பாடல் […]


கவி தந்த விதை -2: தந்தாலே காதல் காதல் இல்லை

February 16th, 2007 வகைகள்: இலக்கியம், க.த.வி, காதல், கவிதை | 17 மறுமொழிகள் » |

தருகின்ற பொருளாய் காதல் இல்லைதந்தாலே காதல் காதல் இல்லையாசகமா காதல்?நான் கேட்கவும்நீ கொடுக்கவும்.உன் வெட்கமும்என் கர்வமும்பலியாகும்யாகம் காதல்.எடுத்தேன்கொடுத்தேன்காதலல்ல.பூவுக்கு வண்டைப்போலவண்டுக்குப் பூவைப்போலஎடு தேன்கொடு தேன்காதல்.தவத்தில் விளையும்வரமே காதல்.தாடிவைத்தஇளைஞரெல்லாம்தவம் கலைத்தஞானிகள்.தேடலில் விளையும்தெளிவு காதல்.உன்னில் என்னையும்என்னில் உன்னையும்.உன் பேரைக்கேட்டால்நான் திரும்பிப் பார்ப்பதுஎன் பேரைக் கேட்டால்நீ பூமி பார்ப்பது.கவிதை தாங்கியகாகிதமல்ல காதல்காகிதம் காணாகவிதைகளே காதல்.வேண்டிப் பெறுவதா காதல்?வேள்வியில் பெறுவது காதல்.முத்தத் தீயில்முனகல் மந்திரங்கள்தானமல்ல காதல்.தாகம்.தீரத் தீரத்தீரா தாகம்.காதல்,நிகழ்வல்லஇருப்பு.நீ நானாகவும்நான் நீயாகவும்.நீ வென்றபோதும்நானே வெல்கிறேன்.நீ தோற்றபோதும்நானே தோற்கிறேன்.நீ தோற்பதில்லைநான் வெல்வதில்லைஇதுதான் காதல்.எனை ஏற்றுக்கொள்என்பதில்லை காதல்.உனை […]


கவி தந்த விதை -1: கட்டிலில் தாலாட்டு

February 14th, 2007 வகைகள்: சினிமா, இலக்கியம், க.த.வி, காதல், கவிதை | 25 மறுமொழிகள் » |

(முன்பு சொன்னதுபோல கவிதைகள் எனக்குப் புதியவை. எழுத்தே எனக்குப் புதிது. எனவே என் முயற்சிகளில் குறைகளை சுட்டிக்காட்டத் தவறாதீர்கள்.)‘கவி தந்த விதை’ என ஒரு குறுகிய தொடரில், திரைப்பாடல்களில் வந்த சில வரிகளை மூலமாகக் கொண்டு சில கவிதைகளை புனையப் போகிறேன். திரைப்பாடல்களில் கவித்துவம் நிறைந்த வரிகள் ஏராளம். மனதைத் தொட்ட சில வரிகளை விரித்திருக்கிறேன் கவிதை நடையில். காதலர்களுக்கு நல்வாழ்த்துக்கள். கவி தந்த விதை -1: கட்டிலில் தாலாட்டு கன்னித்தமிழ் தொண்டாற்று அதை முன்னேற்றுபின்பு கட்டிலில் […]