கனவுக் களவாணி ~ Inception

July 27th, 2010 வகைகள்: சினிமா, திரை விமர்சனம் | 10 மறுமொழிகள் » |

உலக கார்ப்பரேஷன்கள் பச்சைக் காசுக்காக எதையும் செய்யத் துணிந்துவிட்ட காலம் இது. உலகின் பலம்வாய்ந்த அரசாங்கங்கள் இன்று கார்பரேஷன்களின் கைப்பொம்மைகள். நமூரில் சாதி ஓட்டுக்காக செய்யப்படும் அரசியல் சமரசங்கள் பெரிய நாடுகளில் கார்பரேட் ஆதரவுக்காக செய்யப்படுகின்றன. இந்த சர்வாதிகார வியாபாரிகளின் அதிமுக்கிய மூலப்பொருள் ‘தகவல்’. இன்று பல வழிகளில் நம்மைப்பற்றிய தகவல்களை கார்ப்பரேஷன்கள் பெற்றுக்கொண்டேயிருக்கின்றன. கருத்துக்கணிப்புக்களில் சாதாரணமாகத் தோன்றும் கேள்விகளுக்கு நாம் பதிலளிக்கிறோம். ஆனால் அதிலிருந்து பலவிதமான தகவல்களை அவர்கள் பிரித்தெடுக்கிறார்கள். அவற்றின் அடிப்படையில் வியாபார முடிவுகளை [...]


ஸ்ருதி ஹாசனின் பாசமிகு அங்கிள்களுக்கு…

September 30th, 2009 வகைகள்: ஆளுமை, சினிமா | 23 மறுமொழிகள் » |

டிஸ்கி எண் 1: அமெரிக்காவிலும் சில த்ராபை சினிமா தியேட்டர்கள் உள்ளன. அவற்றில் தான் அநேகம் தமிழ் படங்கள் வெளியாகின்றன. டிஸ்கி எண் 2: நான் கமல் படங்களை விரும்பி பார்ப்பேன். கமல் படங்கள் மற்ற தமிழ் படங்களை விட பொதுவாக மேலானவை என நம்புபவன். டிஸ்கி எண் 3: உன்னைப்போல் ஒருவன் பார்க்கும்போது கொஞ்சம் சளியும் இருமலும் காய்ச்சலும் இருந்தது. எவ்வளவோ முயன்றும் உன்னைப்போல் ஒருவன் படத்துடன் ஒன்ற முடியவில்லை. படத்தின் முதல் சறுக்கலே அங்கேதான் [...]


நான் கடவுள்

February 18th, 2009 வகைகள்: சினிமா, திரை விமர்சனம் | 11 மறுமொழிகள் » |

“மோசமாக எழுதப்படும் விமர்சனங்கள் சரியாக எடுக்கப்படாத படங்களைவிட மோசமானவை”. சும்மா ஏதோ ஒரு பாராவில்(Paragraph) படிச்சத மாத்தி எழுதி பார்த்தா எப்படி இருக்கும்ணு ஒரு கற்பனை. நல்லாத்தான் இருக்குது. எந்த பெரிய அர்த்தமுமில்லைண்ணாலும் ஏதோ பெரிய தத்துவம் மாதிரி தெரியுதுல்ல? ஒரு திரைப்படத்துக்கு எத்தனை விமர்சகர்கள்? எத்தனைபேர் அதை பார்க்கிறார்களோ அத்தனை விமர்சனங்கள். (படம் பார்க்காமலே விமர்சிப்பவர்களும் உண்டென்றாலும்). நான் கடவுள் விமர்சனங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கருத்து முன்நிற்கிறது. ஆன்மிகமும் இதுபோலவே! உலகில் எத்தனை நம்பிக்கையாளர்கள் உண்டோ [...]


தசாவதாரமும் கமலின் சாபமும்

June 13th, 2008 வகைகள்: அலசல், சினிமா, திரை விமர்சனம் | 30 மறுமொழிகள் » |

பழங்காலத்துக் கதைகளில் இரு சுவாரஸ்யமான விதயங்களைக் காணலாம். ஒன்று ஒருவரின் உயிர் ஏதோ ஒரு அபத்தமான பொருளில், ஆபத்தான இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும். ‘ஏழுகடல் தாண்டி ஒரு குட்டித் தீவில் சிறு குருவிக் கூட்டீல் இருந்த சங்கினுள் வசித்து வந்த குள்ள மனிதர்களிடமிருந்த பூத்தொட்டியில் வாழ்ந்த மண்புழு ஒன்றில் மன்னனின் உயிர் மறைத்து வைக்கப்பட்டிருந்தது…’. இன்னொன்று ஒருவரின் உருவம் மாறிவிடும்படி சாபம் கிடைக்கும். தவளையாகிவிட்ட இளவரசன், பறவையாகிவிட்ட இளவரசி, பாதி விலங்கும் பாதி மனிதனுமாக உருமாறித் திரிபவை [...]


ரஜினி – காந்தமா? மெழுகா?

April 17th, 2008 வகைகள்: இணையம், சினிமா, நகைச்சுவை | 20 மறுமொழிகள் » |

லண்டனில் உள்ள மேடம் டுசா(வ்)ட் மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் சிலையையும் வைக்க வேண்டி ஒரு விண்ணப்பம் உருவாக்கப்பட்டுள்ளது. rajinifans.com வழியாகக் கண்டடைந்தேன். உங்கள் விருப்பத்தையும் சேர்த்து, ஒரு குறிப்போடு கையெழுத்திட விண்ணப்பத்தில் வசதியுள்ளது. இங்கே சென்று காணுங்கள். இங்கே சென்று கையெழுத்திடுங்கள். பல இந்தியர்களும் இந்த அருங்காட்சியகத்திற்கு செல்வதுண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இப்போ விஷயம் என்னண்ணா அந்த விண்ணப்பத்தில் நான் எனது குறிப்பாக A great personality that has touched many [...]


தரைவாழ் தாரகைகள்

February 11th, 2008 வகைகள்: கட்டுரை, சினிமா | 5 மறுமொழிகள் » |

ஆமிர் கானின் ‘தாரே ஜமீன் பர்’ இந்திய சினிமாவின் அதிமுக்கிய படைப்புகளில் ஒன்றாய் மிளிர்கிறது. குழந்தைகளுக்கான கேளிக்கைகளே அரிதான இந்தக் காலத்தில் குழந்தைகளை முன்வைத்து சிறியவர்கள் இரசிக்கும் வகையிலும் பெரியவர்கள் சிந்திக்கும் வகையிலும் ஒரு காவியத்தை தந்திருக்கிறார் ஆமிர். நாம் கேட்க மறந்த சில கேள்விகளை, பெறத் தவறிய அல்லது பெற்றும் மறந்துவிட்ட சில படிப்பினைகளை தாரே ஜமீன் பர் கோடிட்டுக் காட்டுகிறது. நம் கல்வி முறையை வசை பாடாதவர்கள் இருக்கவே முடியாது. படித்த அனைவருமே அதால் [...]


Time Top 10: யூ ட்யூப் வீடியோக்கள்

December 15th, 2007 வகைகள்: இணையம், குறும்படம், டி.வி | மருமொழிகள் இல்லை » |

டைம் பத்திரிகை இந்த வருடத்தின் சிறந்த 10 யூ ட்யூப் வீடியோக்களாகத் தேர்ந்தெடுத்த வீடியோக்காளில் சில. அப்படியே தமிழில் சிறந்த வீடியோக்களையும் பட்டியலிடுங்களேன். டைமின் முழு டாப்10 பட்டியல் இங்கே. வீடியோ இல்லை


Rush Hour 3 – No rush

August 11th, 2007 வகைகள்: சினிமா, திரை விமர்சனம் | 8 மறுமொழிகள் » |

அமெரிக்கத் திரையரங்கில் சிவாஜிக்கு அடுத்தபடியாக வரிசையில் நின்று பார்த்தபடம் ரஷ் ஹவ்ர் 3. படத்தில் கதை எனப் பெரிதாய் ஒன்றுமில்லை. எதிர்பாராத திருப்பங்களுமில்லை. வழக்கமாக ஜாக்கிசான் படங்களுக்கு் ரூம் போட்டு கதை எழுதும் பழக்கமில்லை எனத் தெரியுமென்பதால் இதில் பிரச்சனையில்லை. ஆனா் படத்தில் பழைய ஜாக்கிசான் இல்லவே இல்லை. பழசான ஜாக்கிதான் இருக்கிறார். சண்டைக்காட்சிகள் மிகவும் சாதாரணமானதாயுள்ளன. அவ்வப்போது வெடிக்கிறது க்ரிஸ்டக்கரின் காமெடி. சிவாஜிக்கும் ரஷ் அவர் 3க்கும் சிவாஜிக்கும் அப்படி ஒரு ஒற்றுமை(வரிசையில் நிற்பதை் தவிர்த்து). [...]


ஷங்கரின் அடுத்த படம் கதை தயாராகிவிட்டது

July 2nd, 2007 வகைகள்: சினிமா, நகைச்சுவை, நையாண்டி | 21 மறுமொழிகள் » |

இயக்குநர் ஷங்கர் சிவாஜிக்கு அடுத்ததாக எடுக்கப்போகும் படத்தின் கதை இப்போதே லீக் ஆகிவிட்டது. ஒன் லைனர்: தேவைக்கதிகமாக காசு போட்டு சினிமா எடுக்கும் சினிமாக் காரர்களை ஒரு ‘பாதிக்கப்பட்ட’ உதவி இயக்குநர் ‘தட்டிக்’ கேட்டால் எப்படி இருக்கும். திரக்கதை: எடுத்த உடனே புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் திரையில் தோன்றுகிறார். ‘நான் ஆணையிட்டால்’ பாட்டுக்கு சாட்டையை சுழற்றுகிறார். அதே செட், கொஞ்சம் பழையதாயிருக்கிறது. தூணில் ஒருவரை சங்கிலியில் கட்டிவைத்திருக்கிறார்கள். அவரை சரமாரியாக சாட்டையால் அடிக்கிறார். பாடல் பாதியிலேயே நிற்க. புரட்சித் [...]


சிவாஜிக்கென தனி திரட்டி

June 15th, 2007 வகைகள்: இணையம், சினிமா, புதுமை | 4 மறுமொழிகள் » |

சிவாஜி பற்றிய பதிவுகள், விமர்சனங்கள், செய்திகளை ஒரே இடத்தில் படிக்க ஒரு திரட்டி செய்துள்ளேன். கூடவே சிவாஜி புகைப்படங்களும், வீடியோக்களும். ரஜினி ரசிகர்களுக்கு சமர்ப்பணம். கீழே க்ளிக்குங்க. வாஜி வாஜி வாஜி உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.