எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களை நான் முதன் முதலில் சந்தித்தது ஊட்டி இலக்கிய சந்திப்பின் போது. ‘உங்கள் முட்டம் படித்தேன்’ என்பது அவரின் முதல் வாக்கியமாயிருந்தது. அவர் எத்தகைய ஆர்வத்துடன் அந்த புத்தகத்தை கையில் எடுத்து படித்திருக்கக் கூடும் என்று என்னால் ஊகிக்க முடிந்தது. அந்த ஆர்வத்தை ஒரு சிறு அளவேனும் நிவர்த்தி செய்ய முடிந்திருந்தால் அது ஒரு பேறுதான் என்று நினைத்திருந்தேன். அவரோ நான் எப்படியோ ஒரு விபத்தைப்போல எழுதி முடித்துவிட்ட அந்த மெலிந்த புத்தகத்தை [...]
