பதிவர் சிந்தாநதிக்கு அஞ்சலி

July 8th, 2009 வகைகள்: சற்றுமுன், நல்லவர், நிகழ்வு, பதிவர்வட்டம், வலைப்பதிவுகள் | 4 மறுமொழிகள் » |

பதிவர் சிந்தாநதி மறைந்த செய்தி டிவிட்டரிலும் பின்னர் அவரது வலைத்தளத்திலும் பார்த்தபோது நம்பமுடியவில்லை. இன்று காலை மின்னஞ்சலில் அவரது சகோதரர் அந்த சோக செய்தியை உறுதிசெய்தார். சிந்தாநதியிடம் பலமுறை பேசியிருக்கிறேன். சற்றுமுன் தளத்தை வடிவமைத்ததில்(ரவிஷங்கருடன்), கட்டியெழுப்பியதில் அவருக்கும் பெரும்பங்குள்ளது. வலையில் பல புதிய முயற்சிகளை செய்தவர். வலைச்சரம் மிகவும் வெற்றிகரமாக அமைந்தது. அவரது திரட்டிகளின் திரட்டியை (தமிழ் கணிமை)கொஞ்ச நாள் பயன்படுத்தி வந்தேன். ஜெயமோகன் தளத்தின் லோகோவை உருவாக்கியவர் சிந்தாநதிதான். அண்மையில் அவர் மீண்டும் பதிவுக்கு வந்த […]


சற்றுமுன் உள்ளூர் செய்திகள்

February 19th, 2008 வகைகள்: சற்றுமுன், அறிவியல் | மருமொழிகள் இல்லை » |

சற்றுமுன் Feb 15 அன்று ஒரு வருட பிறந்த நாளை கொண்டாடியது. அதை முன்னிட்டு சற்றுமுன் உள்ளூர் செய்திகள் எனும் புது சேவையை உருவாக்கியுள்ளோம். இது நீங்கள் வசிக்கும் இடத்தில் நிகழும், உருவாகும் செய்திகளைப் பகிர்ந்து கொள்ள ஒரு தளம். இங்கே யார் வேண்டுமானாலும் ஒரு படிவத்தை பயன்படுத்தி செய்திகளை அனுப்ப முடியும். மட்டுறுத்தலுக்குப் பின் செய்தி வெளியிடப்படும். இந்த சேவை குறித்து உங்கள் கருத்துக்களை வரவேற்கிறோம். மிக எளிய முறையில் பயன்படுத்த ஏதுவானது. சற்றுமுன் ஒரு […]


தீபாவளி ரிலீஸ்

November 13th, 2007 வகைகள்: சற்றுமுன், புதுமை, அறிவியல் | 5 மறுமொழிகள் » |

என்னங்க. தீபாவளி ரிலீஸ் எல்லாம் ஒவ்வொண்ணா பாத்துட்டே இருக்கீங்களா? சற்றுமுன் குழுவும் ஒரு தீபாவளி ரிலீஸ் விட்டிருக்கு. இதுவரை விமர்சனங்களெல்லாம் நல்லாயிருக்குதுன்னு சொல்லுது. நீங்களும் ஒரு எட்டு போய் பாக்கலாம். பயன்படுத்தலாம். இணைய வரி விளம்பரங்கள் மூலம் பொருட்களை, சேவைகளை விற்பதுவும் வாங்குவதும் உலகளவில் பிரபலமாகி வருகிறது. இந்த சேவையை தமிழில் வழங்குவது சற்றுமுன் வரி விளம்பரம்.(சுட்டிகள் கீழே) பயன்படுத்தப்பட்ட பொருட்களை விற்கும் பழக்கம் நம்ம ஊர்ல இன்னும் பிரபலமாகவில்லை. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் இதற்கென […]


சற்றுமுன் பின்னூட்ட வசதி

October 10th, 2007 வகைகள்: சற்றுமுன், அறிவிப்பு, அறிவுப்பு | 7 மறுமொழிகள் » |

சற்றுமுன் தளத்தின் பின்னூட்ட வசதி திறந்துவிடப் பட்டுள்ளது. இனி அங்கு பின்னூட்டமிட புகுபதியத்(log in) தேவையில்லை. இருப்பினும் தங்கள் பயனர் கணக்கை பதிவு செய்ய விரும்புபவர்கள் தொடர்ந்து செய்யலாம்.