கடலெனும் அனுபவம்

February 17th, 2013 வகைகள்: சினிமா, திரை விமர்சனம், அனுபவம் | 4 மறுமொழிகள் » |

பல வருடங்களுக்கு முன்பு ‘ரீடர்ஸ் டைஜெஸ்ட்’ பத்திரிகையில் ஒரு கருத்துப்படம் வந்திருந்தது. இரு சிறுவர்கள் ஒரு ’மார்டன் ஆர்ட்’ படத்தின் முன்பு நின்றுகொண்டிருக்கிறார்கள். கீழே ’யாராவது நாமதான் இதை செஞ்சுட்டோம்ணு சொல்றதுக்கு முன்னால ஓடிரலாம் வா’ எனும் வரி. கடல் திரைப்படத்துக்கு வந்திருக்கும் பல விமர்சனங்களை படித்தபோது எனக்கு இதுவே நினைவுக்கு வந்தது. பல உன்னத கலை படைப்புகளும் குழந்தைகள் செய்தவற்றைப்போன்ற எளிமையுடனே இருக்கின்றன. ஒரு மாடர்ன் பெயிண்டிங்கைப்போலவே கடலும் நம் புரிதலைக் கோரி நிற்கும் ஒரு […]


‘கடலைக் காணாதவனின் அலை குறித்த குறிப்புக்கள்’ – ஊட்டி சந்திப்பு

August 31st, 2010 வகைகள்: இலக்கியம், அனுபவம் | 13 மறுமொழிகள் » |

மாபெரும் கடலொன்றிருந்தது. சிலருக்கு அந்தக் கடலில் நீந்தத் தெரிந்திருந்தது. சிலருக்கு அதில் மீன் பிடிக்கத் தெரிந்திருந்தது. சிலர் வலை கொண்டு, சிலர் தூண்டிலிட்டு. இன்னும் சிலர் அந்தக் கடலின் கரையில் நின்று இளைப்பாறிக்கொள்வர், சிலர் விளையாடி மகிழ்வர். ஆழமான, பரந்து விரிந்த, ஆபத்துக்களையும், கடின சவால்களையும், உயிரையே மாய்க்கும் சுழிகளையும் உள்ளோடைகளையும் பாறைகளையும் கொண்ட அந்த கடலில் குளித்து முத்தெடுத்து வந்தவர்கள் வெகுசிலரே. இன்னும் சிலர் அந்தக் கடலைக் குறித்து கேள்வி மட்டும் பட்டுள்ளனர். பலருக்கும் அந்தக் […]


பத்துத்தலைவலி!

July 19th, 2010 வகைகள்: திரை விமர்சனம், அனுபவம் | 21 மறுமொழிகள் » |

இந்த வார இறுதியில் ராவணன் படம் பார்க்கப் போயிருந்தோம். படம் முடிந்ததும் ‘வள வளண்ணு சொல்லாம ஒரே வார்த்தையில் சொல்லுங்க, படம் எப்படி?’ என்றார் நண்பர். ‘பத்துத்தலைவலி!’ என்றேன் விளையாட்டாக. இரு வாரங்களுக்கு முன்பு இயக்குனர் மணிரத்தினம் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டரை மணி நேரம் ஐந்து எழுத்துலக நண்பர்களுடன் இலக்கில்லா உரையாடல்கள். உரையாடலின்போது அங்கிருந்த நம் நண்பர் உத்தம எழுத்தாளர் (ஒருவர் உத்தமராக இருப்பது மோசமானதா என்ன? அப்படியே அழைப்போமாக.) “ஒருவர் ஒரு கருத்தை […]


சென்னை

July 8th, 2010 வகைகள்: தகவல், அனுபவம், அலசல் | 21 மறுமொழிகள் » |

செம ட்ராஃபிக். முகப்பேரில் இருந்து பள்ளிக்கரணை அலுவலகம் 22கி.மீ வந்து சேர ஒன்றரை மணி நேரம் ஆகிறது. வாகனங்கள் எல்லாவற்றிலும் குறைந்தபட்சம் ஒரு கீறலாவது உள்ளது. புத்தம் புதிய கார்களும் விலக்கில்லை. அவுட்டர் ரிங் ரோட்டில் முகப்பேரில் இருந்து தாம்பரத்துக்கு 20 நிமிடங்களில் வர முடிகிறது. ஆனால் மாலையில் கனரக யமன்கள் சுத்திக் கொண்டிருகின்றனர். மக்கள் higwayகளிலும் ராங் சைடில் வண்டி ஓட்டி வருகின்றனர். பளிச்சென்று ‘தலைப்பு விளக்கம்’ (head லைட்டை இப்படித்தன் அரசின் தகவல் பலகை […]


உங்கள் கதை எடிட்டருக்குப் பிடிக்கலைண்ணா என்ன செய்வார்?

July 22nd, 2008 வகைகள்: நிகழ்வு, நகைச்சுவை, கலாய்த்தல், அனுபவம் | 4 மறுமொழிகள் » |

நீங்க எழுதி அனுப்பிய சிறுகதை பத்திரிகை ஆசிரியருக்கு பிடிக்கலைண்ணா அவர் சிம்பிளா ‘போட முடியாதுயாண்ணு சொல்லலாம்.’ கூடவே ***** போடாத நாலு கெட்ட வார்த்தைய சேர்த்து கொஞ்சம் திட்டி மடல் அனுப்பலாம். உன் கதைய படிச்சதுல மூளையில 10 செல் அழிஞ்சு போச்சுண்ணு நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போடலாம். சைக்கோ கொலைககரனிடம் உங்க வீட்டு அட்ரஸத் தரலாம். பெருமையா ஃபோட்டோவ வச்சு அனுப்பியிருந்தீங்கண்ணா ஏதோ ஒரு ஆபிச்சுவரிக்கு உங்க படத்தப் போட்டு பழிவாங்கலாம். ஆனா எனக்கு […]


உறைந்து நிற்கும் காலம்

May 19th, 2008 வகைகள்: சிகாகோ, கட்டுரை, அனுபவம், அமெரிக்கா | 7 மறுமொழிகள் » |

காலத்தை உறையச் செய்வது எப்படி? நேற்று சிகாகோவின் ஃபீல்ட் அருங்காட்சியகத்தில் இதற்கு விடைகிடைத்தது. 65மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏதோ ஒரு நிலையில் பூமியில் புதைந்த சூ(sue) எனும் டைனசோர், சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சாட்டையடிகளின் சத்தத்தினூடே எழுந்த உளிகளின் புலம்பலில் உருவாக்கப்பட்ட எகிப்திய கற்சவப்பெட்டிகள், சில நூறாண்டுகளுக்கு முன்புவரை நாகரீகங்களின் நிலைகள் என அங்கே காலம் உறை நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. 65 மில்லியன் ஆண்டுகள் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. பிரபஞ்சத்தின் வயது 4.55 பில்லியன் […]