ஜெகத் கஸ்பாரின் முனைப்பில் உலகப்புகழ்பெற்ற சில கிறிஸ்துமஸ் பாடல்களுக்கு தமிழில் வரி எழுதி ’மார்கழியின் மடியில்’ எனும் பாடல் தொகுப்பொன்று வெளியாகியுள்ளது. அதில் Silent Nightன் மெட்டுக்கு கனிமொழி எழுதியுள்ள பாடல் வரிகள் கீழே. மார்கழியின் மடியிலே மாடடையும் குடிலிலே மானுடத்தின் மீட்பனாய் அன்னை மரியின் அணைப்பினிலே இதழில் புன்னகை பூத்திருக்க நிலவின் கதிர்போல கண்வளராய் அழகே. மார்கழியின் மடியிலே வானின் வெள்ளி அழைக்குதந்த அழைத்து வந்த ஞானியர் உன்னை வணங்கி நின்றார் காலமே உறைந்ததை மறந்து [...]
