கொசுபுடுங்கி கவிதை

February 15th, 2007 வகைகள்: நகைச்சுவை, நையாண்டி, கலாய்த்தல், கவிதை | 7 மறுமொழிகள் » |

கொசு புடுங்கி ஒரு கொசு காதல் கவிதை போட்டிருந்தார் அதில் உள்குத்து ஏதோ இருக்கும்போலிருக்கு இருந்தாலும் ஐடியா நல்லா இருந்ததால கீழ உள்ள கவிதையப் போட்டேன். (அடடா பின்னூட்டங்கள பதிவாப் போட்டாலே சீக்கிரம் 400 போட்டிரலாம்போல).காதல் பரிசாய்உறிஞ்சிக் கொடுத்தேன்ஒரு துளி இரத்தம்தியேட்டர் போகலாம் என்றாள்.மூட்டை பூச்சிகளோடு மோத வேண்டாம்என்றேன்.பீச்சுக்கு? என்றாள்ஈக்கள் இருப்பது போதாதா அங்கேபார்க்?காதலர்கள் அங்கே கூடினால்காவல்துறை நசுக்கிவிடும்அவள் சொன்னாள்come on darling B+. + = (Positive)============ உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் […]


கவி தந்த விதை -1: கட்டிலில் தாலாட்டு

February 14th, 2007 வகைகள்: சினிமா, இலக்கியம், க.த.வி, காதல், கவிதை | 25 மறுமொழிகள் » |

(முன்பு சொன்னதுபோல கவிதைகள் எனக்குப் புதியவை. எழுத்தே எனக்குப் புதிது. எனவே என் முயற்சிகளில் குறைகளை சுட்டிக்காட்டத் தவறாதீர்கள்.)‘கவி தந்த விதை’ என ஒரு குறுகிய தொடரில், திரைப்பாடல்களில் வந்த சில வரிகளை மூலமாகக் கொண்டு சில கவிதைகளை புனையப் போகிறேன். திரைப்பாடல்களில் கவித்துவம் நிறைந்த வரிகள் ஏராளம். மனதைத் தொட்ட சில வரிகளை விரித்திருக்கிறேன் கவிதை நடையில். காதலர்களுக்கு நல்வாழ்த்துக்கள். கவி தந்த விதை -1: கட்டிலில் தாலாட்டு கன்னித்தமிழ் தொண்டாற்று அதை முன்னேற்றுபின்பு கட்டிலில் […]


தேன்கூடு கல்யாண்

February 12th, 2007 வகைகள்: கவிதை, அஞ்சலி, அறிவிப்பு | 13 மறுமொழிகள் » |

எத்தனையோ மனநிலைகளில் பல பதிவுகளும் இட்டிருக்கிறேன் இப்படி சோகத்தோடு எதையும் எழுதியதில்லை. ஒரு இளைஞன், அதுவும் சாதிக்கப் பிறந்த, சாதித்துக் காட்டிய, பிறர் சாதிக்க வழிவகுத்த ஒரு இளைஞன் நம்மைவிட்டு நிரந்தரமாகப் பிரிந்துவிட்டார்.தேன் உண்ணத் தந்துவிட்டு தேனீக்கள் பறந்துவிடும்மழைநீரைப் பொழிந்துவிட்டுமேகங்கள் கலையும்பாதைக்கு வழிகாட்டிபகலவனும் மறையும்சுடர் ஏற்றி வைத்தவர்சுடராகி நிற்கிறார் இணையம் தந்த இனிய நண்பர்.இனி எங்கே தேடுவதுஇந்த ராஜாத் தேனீயை தனக்குச் சாவில்லை எனும் கர்வத்தில்தான் கடவுள்மரணத்தை அளிக்கிறான்போலும்.கொல்லக் கிறுக்கர்கள் ஆயிரம் இருக்ககொண்டுபோனதேன் எங்கள் நண்பரை?செல்லாக் காசுகள் […]


நீ இல்லாத நான்

February 8th, 2007 வகைகள்: கவிதை | 41 மறுமொழிகள் » |

கவனித்துக்கொண்டிருக்கும்கள்வனைப்போலநீ சென்றதும்தொற்றிக்கொண்டது தனிமை. நீயில்லா என்னை, நானே வெறுக்கிறேன். வெற்றிடம் நோக்கிப்பாயும் காற்றாய் மனதைஅழுத்தும் நினைவுகள். பசியிருக்கிறதுபதார்த்தமுமிருக்கிறதுபரிவுதான் இல்லை. தொலைக்காட்சித் தொடர்களில்அழுதுவடியும் பெண்களைப்பார்த்து சிரிக்கின்றேன்உன் பிரிவைவிடப் பெரிய சோகமா? சுவற்றில் நகச்சுரண்டலின்தடம் தேடிப் பொழுதைக் கழிக்கிறேன்கழுவிவைத்துச் சென்ற பாத்திரத்தில்கை ரேகையை பாதுகாக்கிறேன் சோலையின் அழகை உணராதப் பூவைப்போலநீ இருக்கும்போது தெரியவில்லை உனதருமை. இன்று மட்டும்,தொட்டி ரோஜாவில் இரட்டைப் பூக்கள் ஏன்?சிட்டுக்குருவி, துணையோடு வந்தது ஏன்?மெட்டுருகும் பாடல் மட்டும் வானொலியில் கேட்பது ஏன்?கிட்டக் கிடக்கும் உன் தலையணைகள் தூரமாய்த் […]


(விண்) நட்சத்திரம்

December 26th, 2006 வகைகள்: நட்சத்திரம், பொது, ஆன்மீகம், இயேசு, இலக்கியம், கவிதை | 3 மறுமொழிகள் » |

விண்ணில் தோன்றியது வால் நட்சத்திரம்மண்ணில் விண்ணவனே நட்சத்திரம் – மன்னன்உறங்க இடமில்லா சத்திரம்உலகில் இதுவன்றோ விசித்திரம்?மாட்டுதொழுவம் மாளிகையானதுஆடும் கோழியும் தோழர்களாயினர்கந்தல் ஆடைக்கு கண்ணியம் வந்ததுகொசுவின் பாடலே தேவகானமாம்.செவியுள்ளோர்க்கு விண் பாடல் கேட்டது‘விண்ணகத்தில் இறைவன் போற்றப் படுகமண்ணகத்தில் நல்மனத்தோர் அமைதிபெறுக’இதுவே இவர் பிறப்பின் தத்துவமானது.இடையர்களுக்குத்தான் கிடைத்தது முதல் செய்திஇறைவன் பிறந்துள்ளான் என்கிற புது செய்தி – இருள்விலகிடும் என்பதே அந்நற்செய்தி.ஏரோது அரசன் கொல்லத் தேடினான்ஏழைமக்கள் காணத்தேடினர்கிழக்கின் அரசர் மூவர் வந்தனர்கிடையில் குழந்தையை வணங்கிநின்றனர்.மாளிகை பலவும் உன் பேரில் இருக்குது […]


இ.இ.ஆ முதல் பரிசு எனக்கே எனக்கே

November 10th, 2006 வகைகள்: பதிவர்வட்டம், போட்டி, இலக்கியம், கவிதை, அறிவிப்பு | 35 மறுமொழிகள் » |

நம்ம தமிழ் சங்கத்துல நடந்த கவிதைப்போட்டியில நம்ம கவிதைக்கு முதல் (சர்)ப்ரைஸ் குடுத்துருக்காங்க.நடுவராய் மு. மேத்தா அவர்கள் தேர்ந்தெடுத்திருப்பது எனக்கு தலைகால் புரியாத சந்தோஷமாயிருக்குதுங்க. ரெம்ப எளிமையான ஒரு கருத்த வச்சு எளிமையா எழுதின கவிதை. பொதுவா கவிதைன்னா நமக்கு அவ்வளவு தன் நம்பிக்கை கிடையாது. இனிமேல் முயல நம்பிக்கை வந்திருக்கு. கொஞ்ச வருஷத்துக்கு முன்னால என் மீனவ உறவினர் ஒருவரோடு பேசிக்கொண்டிருக்கும்போது ஆகாயம் ஒரு திடமான இடமென பேசினனர். அவருக்கு என்ன சொல்லி புரியவைப்பது? சில […]


பசி-சுப்பையா சார் கவிதை

October 29th, 2006 வகைகள்: தமிழ், கவிதை | 3 மறுமொழிகள் » |

பசி—————SP.VR. சுப்பையாபணம்உள்ளவனுக்குத்தெரிந்த ‘பசி’நிதியமைச்சர்ப.சி!கன்னிமாராவிற்குள்காலடி வைப்பவனுக்குஅங்கிருக்கும் நூல்களால்ஏற்படுவதுஅறிவுப் பசி!கலங்கவைக்கும் நிகழ்வுகளைஎழுதியவுடன்அடங்குவதுகவிஞனின்உள்ளத்துப் பசி!கட்சிவிட்டுகட்சிதாவச் செய்வதுஅரசியல்வாதியின்அகோரப்பசிபதவிப் பசி!நான்கு லார்ஜிற்குப் பின்வரும் பசிபாருக்குப்போகிறவனுக்குப்பழகிவிட்ட பசி!உறவு பேதமின்றிஎந்தப் பெண்ணுமேஅழகாகத் தெரிவதுநெறிகெட்ட மனிதனின்நிலையில்லாதகாமப் பசிபதிவைப்போட்டுவிட்டுக்காத்திருப்பவனுக்குஏற்படுவதுபின்னூட்டப் பசி!என்னய்யாபெரிய பின்னூட்டம்என்றிருப்பவனுக்குஎன்றுமே வராதுஏக்கப் பசி!பாதி உணவோடுஇலையை மடக்குபவனுக்குஏற்படுவதுஎன்றும் அவனோடுள்ளஅஜீரணப் பசி!ஒரு வேளைஉணவிற்குத்தவமிருப்பவனுக்குஏற்படுவதுஉண்மையான பசி! உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


தீபாவளி வாழ்த்துக்கள்

October 20th, 2006 வகைகள்: பொது, இலக்கியம், கவிதை | 23 மறுமொழிகள் » |

வாழ்த்தும்போது வாழ்வை வாழ்த்துவோம் – இனிப்பு வழங்கும்போது நட்பை வழங்குவோம்வெடிக்கும்பேது வெறுப்பை வெடிப்போம் – இன்றுஒருநாளேனும் ஒழுங்காய் குளிப்போம். தெய்வங்கள் என்றும் காத்திருக்கும் சிலைகளாகமனிதன்தான் கண்ணிமைக்கும் முன் மறைந்து போகிறான்ஏழையின் வயிறும் கோயில் உண்டியல்தான் புண்ணியம் சேர்ப்பதில்பகிர்வோம்.பதார்த்தம் பகிர்வோம்,பண்டிகையைப் பகிர்வோம்.கண்களை மூடிக்கொண்டு இருட்டென்கிறோமாயின்கண்களில் விளக்கேற்றுவோம் – குறைந்தபட்சம்கண்களை திறப்போம்.காற்றில் பொருட்டென்றில்லாமல் மிதக்கும் தூசிபோலஇயற்கையில் நாம் என உணர்வோம்அகந்தைஎனும் அரக்கனை அழிப்போம்,அன்பை மட்டுமே விதைப்போம்.பண்டிகைகள் Funடிகைகளாகஅந்த Sun டி.வியை அணைப்போம் -அன்பில் குடும்பம் நண்ர்களை இணைப்போம்அரவணைப்போம்.இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். […]


கோமாளி-கவிதை-SK

October 16th, 2006 வகைகள்: தமிழ், பொது, கவிதை | மருமொழிகள் இல்லை » |

கோமாளி தலைப்பில் எஸ்.கே பின்னூட்டமாய் எழுதிய கவிதை.. கோமாளிக்கும் ஏமாளிக்கும்மயிரிழைதான் வேறுபாடு கோமாளி தான் செய்வதுஇன்னதெனச் செய்கிறான் மற்றவரை ஏமாற்றிஅவன் அடிபடுவதில்லை ஏமாளியோ தன்னையும் வருத்திமற்றவரையும் வருத்துவான் ஏமாளிக்குகோமாளியே மேல்என்னமோ போங்க! ஆடுகள் மோதுவதுகொம்பெனும் திமிரால் அவரவர்க்கு ஓர் கொம்புண்டுஅதுவும் புரியும் அவர்க்கே கொம்பைச்சீவிவிட்டுமோதவிடும் கூட்டம் இருபக்கமும் உண்டுஇதுதானே உண்மைஇங்கு தனக்கா வலிக்கிறதுஅடிபடுவது ஆடுதானே இதில் இதென்னஉசத்திஅதென்ன தாழ்த்தி அத்தனையும் போலிஉணர்வெல்லாம் பொய்யே உன்னையும் தாண்டிஎன்னையும் தாண்டி புரிதல் எனும் அந்தப்பெருமையை உணர்ந்தால் யாரும் இங்கு கோமாளியல்லயாரும் […]


இலையுதிர் காலம் ஆரம்பம்

October 7th, 2006 வகைகள்: புகைப்படம், இயற்கை, கவிதை, அமெரிக்கா | 6 மறுமொழிகள் » |

அமெரிக்காவில் எனக்கு பிடித்த ஒரு அம்சம் நான்கு காலங்களிலும் ஏற்படும் உணரத்தக்க, இரசிக்கத்தக்க சூழ்நிலை மாற்றங்கள். அதிலும் குளிர்காலத்துக்கு முந்தைய இலைஉதிர்காலத்தில் மரங்கள் காட்டும் வண்ண ஜாலங்கள் அருமையிலும் அருமை. நம்ம ஊரில் கவிஞர்கள்மட்டும்தான் இலையுதிர் காலம் பார்க்கிறார்கள்.பச்சையிலிருந்து…கிளிப்பச்சையாகிமஞ்சளாகிபழுப்பாகிகுப்பையாகிஅழுகி உரமாகி தன் தாய்மரத்துக்கே உணவாகும் தியாகச் செம்மல்கள் இந்த இலைகள்.தன் உயிரைக் காக்கஉடையைக் களையும்மானங்கெட்ட மரங்கள்.இதனால்தான்தமிழ் நாட்டு மரங்கள் இலை உதிர்ப்பதில்லையோ?(ஒரு வாக்கியத்த உடைத்துப் போட்டால் கவிதையாகிவிடுகிறதில்ல?)வெளியே வாக்கிங் சென்றபோது செல்போனில் சுட்ட படங்கள். ஜன்னலுக்கு வெளியே […]