அலுவலத்துக்கு வெளியே எடுத்த படம். அலுவலத்துக்கு வரும் வளியில் தோன்றிய கவிதைகள். காலநிலை நொடிக்கு மூன்று கார்கள் செல்லும் இந்தச் சாலையோரத்தில் இரண்டடி பனிக்குவியலில் கால்தடங்கள். நடுங்கியபடியே அங்கே நடந்து சென்றவர் யார்? வேலி தாண்டி ஓடி வந்த மெக்சிக்கரா? வீடற்ற கறுப்பரா? வாய்ப்புகளை மறுத்து விட்ட வெள்ளைக்காரரா? அந்த வெள்ளைத் தாளில் தெரிவது ஏழ்மையின் காலெழுத்துதானா? இல்லை இன்னும் ஓட்டுநர் உரிமம் வாங்காத இந்திய மென்பொருளாளரின் இயலாமையா? சற்று நேரத்தில் அதுவும் அழிந்து போகும் என்கிறது [...]
