நட்பு வாரம் – இளக்கியப் பதிவு

நடப்பு வாரம் நட்பு வாரமாமே? இணைய நண்பர்களுக்கும் ஏனைய நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். நட்புக்கு நன்றி.

ஐயம் நீக்கும் ஐயன் வள்ளுவன் ‘இணைய நட்பு’ பற்றி என்ன சொல்லியிருக்கிறார் எனப் பார்க்கலாம்.

781. செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.


(தொடர்ந்து) நல்ல பின்னூட்டம் வழங்கும் நண்பர்களைப் பெறுவதைப்போல வேறெந்த கடினமான செயலும் இல்லை? தனிநபர் தாக்குதலிலிருந்து நம்மைக் காக்க வேறென்ன வழி?

782. நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.

அறிவுசீவி பதிவர்களின் நட்பு வளர் பிறை; மற்றவர்களின் நட்பு தேய்பிறை.

783. நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.

பதிவுகளைப் படிக்கப் படிக்க வெறுப்பு வளர்வது போல பின்னூட்டம் இட இட நட்பு சுகம் தரும்.

784. நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.

எப்பவுமே ‘சூப்பர் சார்’, ‘கலக்கல் பதிவு’, ‘பின்னிட்டீங்க’ மற்றும் :) போடாம அப்பப்ப ‘என்னடா பதிக்கிற’, ‘சோம்பேறி’, ‘கஸ்மாலம்’ :( போன்ற பின்னூட்டங்களும் இடுவதே நல்ல நட்பு.

785. புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.

வலைப்பதிவர் சந்திப்பு, ஜிகர்தண்டட பகிர்வு, எல்லாம் தேவையில்ல சும்மா இணையத்திலே பதிவுகளைப் படித்து பின்னூட்டம் போட்டாலே பொதும் நட்பு தானா வளரும்.

786. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.

சும்மா :) – ஸ்மைலி- போட்டுக்கிட்டு அலையிறது நட்பில்ல உள்ளத்துல இருக்குறத வார்த்தையில எழுதுவதே நட்பு. (கவனிக்கவும் – பாய்ஸ் படப் பாடலிலிருந்து ஐயன் காப்பி செய்துள்ளார்)

787. அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.

சகிக்க முடியாம பதிவு போட்டுக்கொண்டு பின்னூட்டமே பெறாத ஒரு பதிவரை நல்ல பதிவு போடுவதற்கு 784ல் சொன்னமாதிரி பின்னூட்டம் போட்டு வழிநடத்துவதே நட்பு

788. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

பின்னூடமெனும் ஆடையிழந்த பதிவருக்கு கைகொடுத்து பின்னூட்டமிடுவதே நல்ல நட்பாகும்.

789. நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.

நட்சத்திரமாய் மின்னும்போது மட்டுமில்லாமல் தேன்கூடு போட்டியில் தோற்று வருந்தும்போதும் ஒரே மாதிரி பின்னூட்டங்கள் போடுவதே நட்பு.

790. இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.

இவர் என் குழு, அவர் என் ஊர் எனப் பேசினனலும், பல பட்டங்கள் கட்டினாலும், எப்போதும் தங்கள் நட்பப பற்றியே பேருமமயாகப் பேசிக்கொண்டாலும், அந்த நட்பு இழிவாகவே கருதப்படும். (இனையர் = இணையர்; இணையம் + அவர்)

இந்தப் பாவம் போக்க ஐயன் சிலையை ஐம்பது முறை வலம்
வருவதுதான் பரிகாரம் என தீட்சிதர்கள் எனக்குத் தனிமடல் (தமிழில்தான்)
அனுப்பியுள்ளனர்

Popularity: 5% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....23 மறுமொழிகள் to “நட்பு வாரம் – இளக்கியப் பதிவு”

 1. SK சொல்கிறார்:

  வெறும் வாழ்த்துப்பதிவு என்றெண்ணி திறக்காமலே [அலுவல் காரணமாக!!] போன என் கயமைத்தனத்திற்கு, ஐயனிடமும், அலெக்சிடமும் மன்னிப்பு கோருகிறேன்!!

  100 முறை வலம் வருவேன்!

  803!!

 2. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  SK,
  இலக்கியப் பதிவுன்னு போட்டதாலயா?

  அதென்ன 803?

 3. SK சொல்கிறார்:

  Was busy in a conference! That’s why!

  kuRaL 803!

 4. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நண்பர் SK,
  803 உரைத்து எனக்கு உறைக்கச்செய்தமைக்கு நன்றி.

 5. இலவசக்கொத்தனார் சொல்கிறார்:

  அண்ணா, இவ்வளவு முக்கியமான பதிவை போட்டுட்டு, இப்படி சொதப்பலா ஒரு தலைப்பை குடுத்திட்டீரே. என்னமோ எதோன்னு நானும் தாண்டிப் போயிட்டேன்.

  அப்படியே ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து டேபிள் மேல வெச்சுக்கறேன். டெய்லி தூங்கறதுக்கு முன்னாடி ஒரு முறை சொல்லிக்கறேன்.

 6. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //அண்ணா, இவ்வளவு முக்கியமான பதிவை போட்டுட்டு, இப்படி சொதப்பலா ஒரு தலைப்பை குடுத்திட்டீரே. என்னமோ எதோன்னு நானும் தாண்டிப் போயிட்டேன்.

  அப்படியே ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து டேபிள் மேல வெச்சுக்கறேன். டெய்லி தூங்கறதுக்கு முன்னாடி ஒரு முறை சொல்லிக்கறேன். //

  நன்றி…அப்படியே ஒரு தலைப்ப குடுங்க பாக்கலாம்.மீள்பதிவு போட்டுரலாமே,

 7. தேவ் | Dev சொல்கிறார்:

  //’என்னடா பதிக்கிற’, ‘சோம்பேறி’, ‘கஸ்மாலம்’ :( போன்ற பின்னூட்டங்களும்
  இடுவதே நல்ல நட்பு.//

  பார்ட்னர் நீங்களா? ஆகா.. அய்யன் இருக்கணும் உம்மை நட்பை நாடி நாலு கடல் தாண்டி வந்து நாட்டியம் ஆடியிருப்பார்… கலகல பதிவு

 8. தேவ் | Dev சொல்கிறார்:

  Partner, I am featuring this post of yours in Va.Va.Sangam Parinthurai.

 9. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  Thanks Partner..
  :}

 10. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  தேவ்,
  எங்கே இருக்கிறது பரிந்துரை?

 11. நாமக்கல் சிபி சொல்கிறார்:

  பதிவுலக உரையாசிரியருக்கு வாழ்த்துக்கள்!

 12. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  என்நன்றி கொன்றார்க்கும்….

  நன்றி சிபி.
  :)

 13. Syam சொல்கிறார்:

  கொன்னுட்டீங்க,பின்னீட்டீங்க :-) சன் டீவில சாலமன் பாப்பையா மாதிரி என்னே ஒரு விளக்கம்..என்னே ஒரு விளக்கம்…

  //கவனிக்கவும் – பாய்ஸ் படப் பாடலிலிருந்து ஐயன் காப்பி
  செய்துள்ளார்//
  த.உ.உ.உ.சி
  (ROTFL ன் தமிழாக்கம், தரைல உளுந்து உருண்டு உருண்டு சிரிக்கிறேன்)

 14. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  Syam,
  நண்றி நன்றி. முதல் முறையா வந்திருக்கீங்க. சாலமன் பாப்பையா போலவா..? இருக்கட்டும். வச்சுக்கிறேன். இப்பொதைக்கு சா. பாப்பையா போதும்…

  :)

 15. ஜொள்ளுப்பாண்டி சொல்கிறார்:

  //நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
  மேற்செனறு இடித்தற் பொருட்டு.
  எப்பவுமே ‘சூப்பர் சார்’, ‘கலக்கல் பதிவு’, ‘பின்னிட்டீங்க’ மற்றும் :) போடாம
  அப்பப்ப ‘என்னடா பதிக்கிற’, ‘சோம்பேறி’, ‘கஸ்மாலம்’ :( போன்ற பின்னூட்டங்களும்
  இடுவதே நல்ல நட்பு//

  அலெக்ஸண்ணா :)) என்னேயொரு விளக்கம்! பேசாம ஒரு குறள்-இணையவிளக்கம் ன்னு வெளியிட்டுருங்கண்ணா :)))

 16. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி ஜொள்ளுப்பாண்டி.

  இணைய உரை எழுதலாம்தான் அதுக்குள்ள எனக்கு வள்ளுவர்மாதிரி தாடி வளர்ந்து வயசாயிடும்.

  :))))

 17. நாகை சிவா சொல்கிறார்:

  சூப்பராக உள்ளது.
  குறளுக்கு இது வரை வந்த விளக்கவுரையிலே இது தான் டாப்

 18. (துபாய்) ராஜா சொல்கிறார்:

  /”நட்பு வாரம் – இளக்கியப் பதிவு”/

  ஆம்.என்னை இளக்கியப் பதிவு.
  (தல,பதிவுல தலைப்பு சரிதானா?)

 19. கைப்புள்ள சொல்கிறார்:

  //எப்பவுமே ‘சூப்பர் சார்’, ‘கலக்கல் பதிவு’, ‘பின்னிட்டீங்க’ மற்றும் :) போடாம
  அப்பப்ப ‘என்னடா பதிக்கிற’, ‘சோம்பேறி’, ‘கஸ்மாலம்’ :( போன்ற பின்னூட்டங்களும்
  இடுவதே நல்ல நட்பு//

  என்னய்யா பதிவு போடறீங்க? சோம்பேறி, கஸ்மாலம்!
  :)
  (தப்பா எடுத்துக்காதீங்க. இந்தப் பதிவுல இருந்த நகைச்சுவையை மிகவும் ரசித்தேன். டாப் க்ளாஸ்.

 20. கைப்புள்ள சொல்கிறார்:

  சிறில்,
  தேவ் தன்னோட பரிந்துரையை இங்கே போட்டுருக்காரு.
  http://vavaasangam.blogspot.com/

 21. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //குறளுக்கு இது வரை வந்த விளக்கவுரையிலே இது தான் டாப் //

  நன்றி நன்றி நன்றி

 22. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  /தப்பா எடுத்துக்காதீங்க. இந்தப் பதிவுல இருந்த நகைச்சுவையை மிகவும் ரசித்தேன். டாப் க்ளாஸ்.//

  நன்றி கைப்பு.

 23. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //ஆம்.என்னை இளக்கியப் பதிவு.
  (தல,பதிவுல தலைப்பு சரிதானா?) //

  ந்நிங்க வேற.. முதல்ல இலக்கியப் பதிவுன்னு வச்சேன் ..எல்லாரும் ஏதோ சீரியஸ் பதிவுன்னு ஓடிப் போயிட்டாங்க.. அதான் அப்படி மாத்தினேன்.

  :))

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்