அமைதி… அமைதி…

எளிமைக்குப் பெயர் போன புனிதர் அசிசியின் பிரன்சிஸ். இவரின் புனிதத்தன்மையால் இவரால் பறவைகளோடும் உரையாட முடிந்ததாம். ஸ்டிக்மாடிஸ்ட்(Stigmatist) அதாவது இயேசுவின் ஐந்து காயங்களை உடம்பில் பெற்றவர்.

தமிழாக்கம்
“இறைவா, என்னை உன் அமைதியின் கருவியாக மாற்று;
எங்கே வெறுப்புள்ளதோ அங்கே அன்பையும்;
எங்கே (உள்ளங்கள்) காயப்பட்டுள்ளதோ அங்கே மன்னிப்பையும்;
எங்கே சந்தேகமுள்ளதோ அங்கே இறைநம்பிக்கையையும்;
எங்கே மன உறுதியில்லையோ அங்கே தன்னம்பிக்கையையும்;
எங்கே இருளுள்ளதோ அங்கே ஒளியையும்;
எங்கே சோகமுள்ளதோ அங்கே மகிழ்ச்சியையும்
என்னை விதைக்கச்செய்யும்.
தெய்வீகத் தலைவனே,
ஆறுதல் அடைவதைவிட ஆறுதல் அளிப்பதையும்;
சகிக்கப்படுதலைவிடப் சகிப்பதையும்;
அன்பு செய்யப்படுவதைவிட அன்புசெய்வதையும்
நான் தேடுவேனாக;
ஏனெனில் வழங்கும்போதுதான் பெறுகிறோம்,
மன்னிக்கும்போதே மன்னிப்பு பெறுகிறோம்,
இறக்கும்போதே என்றென்றைக்குமாய் பிறக்கிறோம்.

ஆங்கிலத்தில்

Lord, make me an instrument of Thy peace;
where there is hatred, let me sow love;
where there is injury, pardon;
where there is doubt, faith;
where there is despair, hope;
where there is darkness, light;
and where there is sadness, joy.
O Divine Master,
grant that I may not so much seek to be consoled as to console;
to be understood, as to understand;
to be loved, as to love;
for it is in giving that we receive,
it is in pardoning that we are pardoned,
and it is in dying that we are born to Eternal Life.

Popularity: 6% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....8 மறுமொழிகள் to “அமைதி… அமைதி…”

 1. Anonymous சொல்கிறார்:

  if everybody thinks like this then the earth is heaven.
  raghs

 2. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  உண்மை ராகவ்.

 3. கோவி.கண்ணன் சொல்கிறார்:

  //ஏனெனில் வழங்கும்போதுதான் பெறுகிறோம், //
  நல்ல தத்துவங்கள் !
  இந்த வரியே எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறது !

 4. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  ஆமா கண்ணன்.

 5. கைப்புள்ள சொல்கிறார்:

  //அன்பு செய்யப்படுவதைவிட அன்புசெய்வதையும்
  நான் தேடுவேனாக;//

  இதை அனைவரும் பின் பற்றினால் உலகம் அழகானதாகி விடும். நல்ல பதிவு.

 6. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  டாங்ஸ் கைப்புள்ள. இத எப்பவுமே பின்பற்றுவது கஷ்ட்டம் ஆனாஅப்பப்பவாவது….

 7. SK சொல்கிறார்:

  புனித அஸிஸ்ஸியாரின் இப்பதிவு நான் தினமும் காலையில் படிக்கும் ஒன்று!
  நன்றி!

 8. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //புனித அஸிஸ்ஸியாரின் இப்பதிவு நான் தினமும் காலையில் படிக்கும் ஒன்று!
  நன்றி//

  இன்னுமொரு முறை என் தமிழாக்கத்தைப் படித்துப்பார்ட்த்தேன்..கண்ணில் ஏனோ நீர் பனிக்கிறது..

  தினமும் படிக்கிறீர்களா… மகிழ்ச்சி.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்