திண்ணையில் – தமிழோவியத்தில்

திண்ணையிலும் தமிழோவியத்திலும் நான் எழுதிய கதைகள் வெளிவந்திருக்கின்றன. இரண்டிலும் ஒரே நேரத்தில். இரட்டைப் பிள்ளை பெற்றவன்போல மகிழ்ச்சி. படிச்சு எப்டி இருக்குன்னு சொல்லுங்களேன்.

1. அன்னியர்கள் – தமிழோவியம்
2. கற்கோவில்கள் – திண்ணை

Popularity: 3% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....25 மறுமொழிகள் to “திண்ணையில் – தமிழோவியத்தில்”

 1. கோவி.கண்ணன் [GK] சொல்கிறார்:

  சிறில்… !
  கண்டிப்பாக படிச்சிட்டு லொள்ளுறோன் :))

 2. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நீங்கெல்லாம் இதுக்குள்ளார படிச்சிருக்கணும்யா..

  :)

 3. நிர்மல் சொல்கிறார்:

  சிறில் கற்கோவில்கள் நல்லா இருந்தது.

  நல்ல உரையாடல்கள்.

  பிபனோசி சீரிஸ் நல்லா இருந்துச்சு.

 4. dondu(#4800161) சொல்கிறார்:

  சிறுகதை எழுதுவது ஒரு கலையென்றால், அதில் தேவையற்றதை வெட்டுவது இன்னொரு கலை. சுஜாதா அவர்கள் கூறியது.

  உங்கள் அன்னியர்கள் கதையில் கீழ்க்கண்ட வரிகளை வெட்டினாலும் கதை பங்கப்படாது என நினைக்கிறேன். மாட்டுப்பெண்ணின் தங்கச்சியின் கல்யாணம் பற்றிய டிஸ்கஷன் இக்கதைக்குத் தேவைதானா?

  “இந்த வாரத்தில் மருமகளுடன் மூன்றாவது முறை விவாதித்துவிட்டார் மாரியப்பன்.

  “ஓந்தங்கச்சிக்குத்தானே. நாம செய்யலேன்னா எப்படி?”

  “மாமா. மருமகன் காசுல கல்யாணம் பண்றாருன்னு எங்கப்பாவுக்குப் பேரு வரணுமா? எங்கப்பாவே என்கிட்ட கேக்கலை. இதப்பத்தி பேச வேண்டாம். ப்ளீஸ்.”

  “ஒரு கூடப் பிறந்தவங்களுக்குக்கூட உதவி செய்யமுடியாம இருக்கோம். அடுத்தவங்க என்ன சொன்னா நமக்கென்ன?”

  “எங்க ஊர்ப் பக்கமெல்லாம்… வேண்டாம் மாமா. அவர்கிட்டக் கூட சொல்லிட்டேன். நீங்க… “

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 5. மகேந்திரன்.பெ சொல்கிறார்:

  வாழ்த்துக்கள்
  வாழ்த்துக்கள்

  ஏன்னா இரட்டைகுழந்தைன்னு சொன்னீங்களே?

 6. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  எண்ணம் எனது..குறைகளையும் சொல்லவும்..

  :)

  டோண்டு சார். ‘அன்னியர்கள்’ தலைப்பு ஏதோ உறவுகள் பற்றிய கதை போலக் கொண்டுவந்து பிறகு போக்கை மாற்ற வைத்த முயற்சி…

  முழுவதும் அறிவியல் கதையாய் எழுத விருப்பமில்லை..சொல்லப்போனால் இது அறிவியல் கதையா உளவியல் கதையா என்பதை வாசகருக்கே விட்டுவிடுகிறேன்..

  மாரியப்பனுக்கு ஹலுசினேசனா இல்ல உண்மையில் அன்னியர்கள் வந்தார்களான்னு ஒரு கேள்வி எழவேண்டும்.

  உங்க don’t do அறிவுறையை ஒரளவுக்கு ஏற்றுக்கொள்கிறேன்.. அது ஒரு குறுகிய உரையாடல் என்பதாலேயே விட்டுவிட்டேன்..

  அடுத்தமுறை நினைவில் கொள்கிறேன்.

  சரி.. கதை பற்றி வேறொன்றும் சொல்லவே இல்ல?

 7. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  குழந்தைகளா முகமூடி அங்கிள் வந்துருக்காரு பாருங்க..

  :)

  நன்றி மகேந்திரன்,

 8. மகேந்திரன்.பெ சொல்கிறார்:

  இன்னும் கதைய படிக்கலிங்க படிச்சுட்டு சொல்றேன் கருத்தா கருத்து :)) பாத்துங்க குழந்தைக்க பயப்படப் போகுது :))

 9. dondu(#4800161) சொல்கிறார்:

  கதை நன்றாகவே வந்திருக்கிறது. உண்மையில் என்ன நடந்தது என்று பல கோணங்களில் பார்த்து ஒவ்வொரு முறையும் வாசகரை வெவ்வேறு முடிவுக்கு கொண்டு செல்லும் உத்தியில் வெற்றி பெற்றீர்ர்கள்.

  இன்னொரு கதை? மன்னிக்கவும், என்ன கூற வருகிறீர்கள் எனப் புரியவில்லை. ஏதோ நீதி சொல்ல வந்திருக்கிறீர்கள் எனப் புரிகிறது.

  நீதிக்கதை என்றதும் நான் எழுதிய நீதிக்கதை ஞாபகத்துக்கு வருகிறது. நேரம் இருந்தால் படிக்கவும். ஆனால் திட்டவெல்லாம் கூடாது என்று ஸ்மைலியுடன் கேட்டுக் கொள்கிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/08/blog-post_18.html

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 10. நிர்மல் சொல்கிறார்:

  தமிழோவியம் கதையில் கணித அடிப்படையில் வீட்டில் மருமகளிடம் உரையாடியதை வைத்து முடிவை சொல்லிருந்திங்கன்னா இன்னும் சுவையா இருந்திருக்கும். இல்லாட்டி இப்ப பெரியவரோட வீட்டு உரையாடலையும், கணித உரையாடலையும் எடுதிட்டு வார் ஆப் தி வோர்ல்ட் படம் பாத்திட்டு பெரியவர் பேரனோடு மைதானதுக்கு வராருனு நீங்க சொல்ல ஆரம்பிச்சு மூன்றாவது பகுதியை கொடுத்திருந்திங்கனா கதையின் ஒட்டம் இன்னும் பெட்டரா இருந்திருக்கும்
  கதையின் மூன்று பகுதிகளும் ஒட்டாமல் இருப்பதாய் பட்டது.ஒரு வேளை நீங்க நான் லினியரா எழுதறிங்களோ எனக்குதான் புரியலியா தெரியல்லை.

  கற்கோவில் முடிவில அவன் ரத்த கரையை துடைத்துக் கொண்டிருந்தான் சொன்னா அவ்வளவு அருமையான உரையாடல்களுக்கு கொஞ்சம் வழக்கமான முடிவா இருந்துச்சு. வேறு வார்த்தைகளை பயன் படுத்தி இருக்கலாம். எதாவது உரையாடல் கொண்டு முடிச்சிருந்தா சிறில் டச்சோட இருந்திருக்கும்.

  ஓரு suggestion-ஆ சொல்றேன்.தப்பா எடுத்துகாதிங்க.

 11. துளசி கோபால் சொல்கிறார்:

  என்னங்க ரெட்டைப்பிள்ளைக்காரரே,
  சுகமா?

  மொதல்லே புடியுங்க எங்க வாழ்த்து(க்)களை.

  எனக்கு அதுலே ஒத்தைப் புள்ளைதாங்க புடிச்சது/புரிஞ்சது.

 12. Samudra சொல்கிறார்:

  கலக்குங்க சிறில்.

 13. G.Ragavan சொல்கிறார்:

  சிறில்…இரண்டுமே நல்ல படைப்புகள். நல்ல எழுத்து கைவருகிறது. உங்களிடமிருந்து நிறைய படித்துக் கொண்டேன். வாழ்க வளர்க. நன்றி.

 14. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //கதை நன்றாகவே வந்திருக்கிறது. உண்மையில் என்ன நடந்தது என்று பல கோணங்களில் பார்த்து ஒவ்வொரு முறையும் வாசகரை வெவ்வேறு முடிவுக்கு கொண்டு செல்லும் உத்தியில் வெற்றி பெற்றீர்ர்கள்.//

  நன்றி

 15. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  எண்ணம் எனது… விமர்சனத்துக்கு நன்றி..

  அன்னியர்கள்..
  நான் லீனியரா முயற்சி செய்யல. ஒரு இயல் பான சூழல்ல ஒரு அறிவியல் கதையக் கொண்டு வர்றதுக்காகத்தான் அப்படி செஞ்சேன்.. சரியாப் பண்ணலன்னு நெனைக்கிறேன்.. நீங்க சொல்றதுபோல வார் ஆப் தி வொர்ல்ட்ஸ் பத்தி போடுறதும் ஒரு வழக்கமான யுக்தியா இர்ந்திருக்கும்…

  முடிவுக்குத் தொடர்பேயில்லாத துவக்கம் பல அமெரிக்க டி.வி சீரியல்கள்ள பாக்க முடியுது.

  கற்கோவில்கள்..வழக்கமான வார்த்தைகள்.. ஆமா. நல்ல கருத்து.

  உண்மையில் அந்தப் பிரசங்கத்தோடு நிறுத்திக்கொண்டிருந்திருக்கலாம்..

  அதுதான் முதலில் நினைத்திருந்தேன்.. ஃபாதரி பிரசங்கத்தோடு நான் சொல்லவந்தது முடிஞ்சிடிச்சு. அந்தக் கடைசி வரிய எடுத்திருக்கலாம்..

  நன்றி…தப்பா எடுத்துக்க என்ன இருக்குது.. எனக்கு நண்பர்களின் அங்கீகாரம் ரெம்ப முக்கியம். சொல்லப்போனா அன்னியர்கள் கதைய நண்பர் ஒருவர் பார்த்து அங்கீகரித்தபிந்தான் தமிழோவியத்துக்கு அனுப்பினேன்.

  நன்றி

 16. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //என்னங்க ரெட்டைப்பிள்ளைக்காரரே,
  சுகமா?

  மொதல்லே புடியுங்க எங்க வாழ்த்து(க்)களை.

  எனக்கு அதுலே ஒத்தைப் புள்ளைதாங்க புடிச்சது/புரிஞ்சது.//

  துளசியக்கா..

  ரெம்ப சுகம் .. நீங்க?
  அது எந்தப் புள்ளன்னு சொல்லலியே…

  :)

  சரி என்ன புரியல்லைன்னு சொன்னா கொஞ்சம் திருத்திக்குவேன்.

 17. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  சமுத்ரா..
  என்ன ஆளையேக் காணோம்..? நன்றி

  ராகவன்..
  வாழ்த்துக்களுக்கு நன்றி..என்னிடமிருந்து கத்துக்கொண்டீர்களா? இப்பத்தான் எழுதிப் பழகுறேன்.. உங்களிடமிருந்தும் நிறைய கத்துக்கொண்டிருக்கிறேன்.

  நன்றி. :)

 18. நிர்மல் சொல்கிறார்:

  தொடர்ந்து எழுதுங்க சிறில்.

  வாழ்த்துக்கள்.

 19. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  கண்டிப்பா தொடர்ந்து எழுதுவேன்..

  :))

  உங்களெல்லாம் சும்மா விட்ருவேனா என்ன?

 20. TheInterested சொல்கிறார்:

  How do you display
  ப(பி)டித்த பதிவுகள்
  in blogger ?
  I too want to do the same.
  Pl. reply.

 21. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  hey.. theinterested,
  nice name … better than anony..
  the secret on பிடித்த பதிவுகள்..
  is that I manually edit my template each time.

  :(

  it is not automatically updated…

  :)

 22. கோவி.கண்ணன் [GK] சொல்கிறார்:

  சிறில்…!

  கற்கோவில்கள்… சொலவாடை சுவையாக இருந்தது.

  கடைசியில் ஒரு நெருடல். எல்லாம் தெரிந்த சாமியார்களே தவறு செய்யும் போது பாமரர்களை என்ன சொல்ல முடியும் !

  இது கருத்து ரொம்ப சீறியஸ் ஆக எடுத்துக் கொல்லாதீர்கள் !

  :)))

 23. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //சிறில்…!

  கற்கோவில்கள்… சொலவாடை சுவையாக இருந்தது.

  கடைசியில் ஒரு நெருடல். எல்லாம் தெரிந்த சாமியார்களே தவறு செய்யும் போது பாமரர்களை என்ன சொல்ல முடியும் !

  இது கருத்து ரொம்ப சீறியஸ் ஆக எடுத்துக் கொல்லாதீர்கள் !

  :))) //

  கண்ணன்.. நான் சொல்லவந்த கருத்தையே நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். ‘கற்கோவில்கள்’ பாமரர்களை குறை கூறவில்லை பாதிரியார்களையே குறை கூறுகிறது. இத்தனை வருட போதனையும் பூசைகளும் மக்களிடம் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்துகிறமாதிரியில்லையே… நம் கோவில்கள் வெறும் கற்கொவில்களாகவே இருக்கிறதே என்கிற ஆதங்கம். இன்னும் கொஞ்சம் அழுத்தமாகத், தெளிவாகச் சொல்லியிருக்கலாமோ?

  உங்கள் கருத்துக்கு நன்றி.

 24. கோவி.கண்ணன் [GK] சொல்கிறார்:

  //கண்ணன்.. நான் சொல்லவந்த கருத்தையே நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்//

  சிறில்
  இது பின்நவீனத்துவக் கதையா ?
  என் சிறுமுளைக்கு எட்டியது, பெருமூளைக்கு எட்டவில்லை.
  :))
  அப்பா… எகக்கும் மூளை இருக்குன்னு மறைமுகமாக சொல்லியாகிவிட்டது.

 25. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  எனக்குத்தெரிந்தவரை பின்நவீனத்துவக் கதையில்லை..

  முடிவை நேரடியாகச் சொல்லவில்லை, பல கருத்தோட்டங்கள் எழலாம்.. தீர்க்கமான முடிவென்று இல்லை என வைத்துக்கொள்ளலாம்

  பத்திரிகைச் செய்தொ ஒன்றை படித்தபோது எழுதத் தோன்றியது.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்