தீட்டு

திரு அவகளின் ‘மாடு தீண்டலாம் ஆடு தீண்டலாம்’ பதிவில் பா(சா)டல் ஒன்றை பதித்திருக்கிறார். பாடல் வரிகள் கீழே.

மாடு தீண்டலாம் உங்கள ஆடு தீண்டலாம் – நாங்க
மனுசன் மட்டும் தீண்டக்கூடாதா?
நாடு என்பதா இதை நரகமென்பதா? – இங்கே
சேரியெல்லாம் சிறைகளானதே.

கோட்டை கட்டினோம் கோயில் மேளம் கொட்டினோம் – சவக்
குழிகள் கூட நாங்க வெட்டினோம்
கோட்டைவிட்டும் கோயில் விட்டும் தூர நிற்கிறோம் -புதைக்கும்
சுடுகாடும் இல்ல நாங்க தவிக்கிறோம்
பாரதத்தாய் மேனியிலே பாதி உடல் சீழ்பிடித்தால்
மீதி உடல் நோயில்லாமல் வாழுமோ? – இந்த
ஜாதிபேதம் எந்த நாளில் வீழுமோ?

தோட்டிகளாக ஈனத் துளும்பர்களாக – மலம்
தோள் சுமக்கும் அடிமைகளாக
உயிரிருந்தும் சவங்களாக உணர்விருந்தும் ஜடங்களாக
உழலுகின்றோம் நடைபிணமாக
தாயே சுதந்திரமே தாழ்த்தப்பட்ட சேரிமகன்
வீட்டில் என்று வந்து குடி ஏறுவாய்? – அதையே
தீட்டு என்றா நீயும்கூட எண்ணுவாய்?

எந்த நாட்டிலும் இந்த இழிவு இல்லையே
சொந்த நாட்டில் அன்னியரானோம்
உழுவதற்கு நிலமுமில்லை அழுவதற்கு உரிமையில்லை
தொழுவதற்கா பூமியில் பிறந்தோம்?
மனிதர்களைப் புழுவாக்கி மகிழுகின்ற கேவலத்தை
மனுநீதி என்ரு பெயர் சூட்டினார் – இங்கே
மனித நீதியை சிறையில் பூட்டினார்.Popularity: 5% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....10 மறுமொழிகள் to “தீட்டு”

 1. Anonymous சொல்கிறார்:

  பதிவிற்கு நன்றி சிறில்! இது மிகவும் உருக்கமான வரிகள்! மக்களின் நிலையை அப்படியே வார்த்தைகளில்…

 2. கோவி.கண்ணன் [GK] சொல்கிறார்:

  சிறில்,
  இந்த பதிவுக்கு என் + குத்து
  :)

 3. கோவி.கண்ணன் [GK] சொல்கிறார்:

  //மனுநீதி என்ரு பெயர் சூட்டினார் – இங்கே
  மனித நீதியை சிறையில் பூட்டினார்.//

  மனு இல்லாத மற்ற மதங்களில் குறிப்பாக கருப்பினத்துக்கு எதிராக மேலை நாடுகளில் கொடுமை நடந்து கொண்டுதானே இருக்கிறது. கிறித்துவர்களில் கூட தலித்துக்கள் அடையாளம் காணப்பட்டு ஒதுக்கப்படுகிறார்களே. இதுபற்றி நீங்கள் ஏற்கனவே எழுதியிருக்கிறீகள். இங்கு அது நினைவு வந்தது !

 4. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி கண்ணன் & அனானி

  இந்தப் பாடல் ஒடுக்கப்பட்டவரின் குரலாக ஒலிக்கிறது என்பதை மறுக்க இயலாது. எல்லா மதங்களிலுமொடுக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். மதமல்லாத நிறுவனங்களிலும் இது இருக்கிறது.

  இந்தப் பாடல் ஒரு குறிப்பிட்ட பிரச்சனையை (சாதி) சாடுவதாயும் எடுத்துக்கொள்ளலாம் இல்லை ஒட்டு மொத்த ஒடுக்கப்பட்டோரின் குரலாயும் எடுத்துக்கொள்ளலாம் என்பதில் சந்தேகமேயில்லை.

  ஏதோ ஒரு மேற்கோளை கையிலெடுத்துக்கொண்டுதான் அடிமைப் படுத்துதல் நடந்தேறி வருகிறது அது மனுவாயிருக்கலாம், பைபிளாயிருக்கலாம், வரலாறாயிருக்கலாம், சட்டமாஅயிருக்கலாம்..

 5. கோவி.கண்ணன் [GK] சொல்கிறார்:

  //ஏதோ ஒரு மேற்கோளை கையிலெடுத்துக்கொண்டுதான் அடிமைப் படுத்துதல் நடந்தேறி வருகிறது அது மனுவாயிருக்கலாம், பைபிளாயிருக்கலாம், வரலாறாயிருக்கலாம், சட்டமாஅயிருக்கலாம்..//

  சிறில் … !
  இங்கு மறுபடியும் அருமையாக விளக்கியிருக்கிறீர்கள்.

  பாராட்டுக்கள்…!

  மனிதன் உண்மையைப் பேசினால் உடனே நடுநிலைவாதி என்பார்கள். அதைக் குத்திக் கிளரி சிலர் வாருவார்கள்.

  எனவே நடுநிலைவாதி என்று உங்களை கொச்சைப் படுத்தவிரும்பவில்லை !
  :))

 6. இறை நேசன் சொல்கிறார்:

  ஒடுக்கப்பட்டவர்களின் உள்ளக்குமுறலை வெளிப்படுத்தும் அழகான ஆழமான வரிகள். தைக்க வேண்டியவர்களுக்கு தத்தால் சரிதான்.

  பதிவையும் பாடலையும் அறியத் தந்தமைக்கு சகோ. சிறில் அலெக்ஸ் அவர்களுக்கு நன்றி.

  இறை நேசன்

 7. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  கண்ணன் நடுநிலமையென்றெல்லாமில்லை. உண்மை இதுதான். கறுப்பர்கள் அடிமைப் படுத்தப்பட்டதற்கு பைபிளிலிருந்து ஆதாரங்கள் அடுக்கப்பட்டன என்பது உண்மை.

  எரியும் சிலுவைதான் இன்றும் இந்த அவலத்தின் அடையாளமாகக் காண்பிக்கப் படுகிறது.

 8. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி இறை நேசன். உங்கள் நன்றியை திரு அவர்கலுக்கும் சொல்லிவிடுங்கள்.

 9. G.Ragavan சொல்கிறார்:

  சிறில் வேதனை தரும் வரிகள். இந்த நிலை மாற வேண்டும். சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் அடுத்தவரைத் தாழ்ந்தவர் என்று நினைக்கும் நிலை என்று மாறுமோ!

  நீங்கள் சொல்லும் தகவல் புதிதாக இருக்கிறது. எரியும் சிலுவைக் குறியீடு. பைபிளை வைத்து கருப்பர்களை அடிமைப்படுத்துகிறார்களா? எதை ஆதாரமாக வைத்து இந்தக் கருத்தைச் சொல்கிறீர்கள்?

 10. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  ராகவன்

  நெட்டில் தேடினால் பல விவரங்கள் கிடைக்கும்

  http://en.wikipedia.org/wiki/Cross_burning

  மேலுள்ள சுட்டியையும் அது தரும் மற்ற சுட்டிகளையும் படித்துப் பாருங்கள்.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்